தமத்தல் முதல் - தமோமணி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தமத்தல் தணிதல் ; விலை மலிதல் ; நிரம்புதல் .
தமதமவெனல் நெருப்பு முழங்கியெரியும் ஒலிக்குறிப்பு .
தமப்பன் தகப்பன் .
தமப்பிரபை ஏழ் நரகவட்டங்களுள் இருள் நிறைந்த நரகம் .
தமம் இருள் ; தாமதகுணம் ; இராகு ; சேறு ; கள்வரை வாட்டும் ஒருவகை நரகம் ; ஞானேந்திரியம் கன்மேந்திரியங்களிற் செல்லாமல் மனத்தை மறித்தல் .
தமயன் மூத்த சகோதரன் ; அண்ணன் முறையான் .
தமர் உற்றார் ; தமக்கு வேண்டியவர் ; சிறந்தோர் ; வேலையாள்கள் ; கருவியால் அமைத்த துளை ; துளையிடும் கருவி .
தமர்ப்படுதல் இணங்கல் ; விரும்பல் .
தமர்மை நட்பு .
தமரகம் மூச்சுக்குழல் ; உடுக்கை .
தமரகவாயு நெஞ்சடைப்பு நோய் ; இரைப்பு நோய் .
தமரத்தை ஒரு மரவகை .
தமரம் ஒலி ; அரக்கு ; தமரத்தைமரம் .
தமராணி துளையாணி ; தமரில் மாட்டும் ஊசி .
தமரித்தல் ஒலித்தல் ; விரும்பல் .
தமரிப்பு விருப்பம் ; ஒலி .
தமருகம் உடுக்கை .
தமரூசி துளையிடும் ஊசி ; தமரில் மாட்டும் ஆணி .
தமரோசை கிலுகிலுப்பைச்செடி .
தமலி சட்டுவம் .
தமள் உற்றாள் .
தமன் உற்றான் .
தமனகம் காண்க : மருக்கொழுந்து .
தமனம் காண்க : மருக்கொழுந்து .
தமனி வன்னிமரம் ; நல்ல இரத்தம் ஓடும் குழாய் .
தமனியக்கூடம் பலர் கூடுதற்குரிய பொன் வேய்ந்த அம்பலம் .
தமனியப்பொதியில் பலர் கூடுதற்குரிய பொன் வேய்ந்த அம்பலம் .
தமனியம் பொன் .
தமனியன் இரணியன் ; பிரமன் ; சனி .
தமாசு வேடிக்கை .
தமாலகி காண்க : கீழாநெல்லி .
தமாலம் பச்சிலைமரம் ; இலை ; நுதற்குறி ; மூங்கில் தோல் .
தமி தனிமை ; ஒப்பின்மை ; கதியின்மை ; இரவு .
தமிசிரம் குறைவு ; இருள் .
தமிசு வேங்கைமரம் .
தமிட்டம் காண்க : தம்பட்டம் .
தமித்தல் தனியாதல் ; தண்டித்தல் .
தமியம் கள் .
தமியள் திக்கற்றவள் ; தனியாயிருப்பவள் .
தமியன் திக்கற்றவன் ; தனித்தவன் .
தமியாட்டி காண்க : தமியள் .
தமிழ் இனிமை ; நீர்மை ; தமிழ்மொழி ; தமிழ் நூல் ; தமிழ்நாடு ; தமிழர் .
தமிழ்க்குச்சரி குறிஞ்சி யாழ்த்திறவகை .
தமிழ்க்கூத்தர் தமிழ்க்கூத்து ஆடுபவர் .
தமிழ்நடவை தமிழ் வழங்கும் இடமாகிய தமிழகம் .
தமிழ்நதி செந்தமிழ் நாட்டிற்குரிய ஆறான வையை ஆறு .
தமிழ்நர் தமிழர் .
தமிழ்நாடன் தமிழ்நாட்டு வேந்தன் ; பாண்டிய அரசன் .
தமிழ்ப்படுத்துதல் பிறமொழியிலுள்ளதைத் தமிழில் மொழிபெயர்த்தல் .
தமிழ்மருந்து தமிழ் மருத்துவ நூல்களிற் கூறியவாறு செய்யப்பட்ட மருந்து .
தமிழ்மலை பொதியமலை .
தமிழ்மறை திருக்குறள் ; தேவாரம் ; திருவாசகம் ; திவ்வியப் பிரபந்தம் .
தமிழ்முனிவன் அகத்தியன் .
தமிழ்வாணன் தமிழ்ப்புலவன் .
தமிழ்வேதம் காண்க : தமிழ்மறை .
தமிழ்வேளர்கொல்லி மருத யாழ்த்திறவகை .
தமிழக்கூத்து தமிழ்நாட்டுக்குரிய கூத்து .
தமிழகம் தமிழ்நாடு .
தமிழச்சி தமிழப்பெண் .
தமிழிச்சி தமிழப்பெண் .
தமிழத்தி தமிழப்பெண் .
தமிழப்பல்லவதரையர் தமிழ்நாட்டுப் பல்லவ அரசர் .
தமிழன் தமிழைத் தாய்மொழியாக உடையவன் ; ஆரியனல்லாத தென்னாட்டான் .
தமிழாகரன் தமிழுக்கு நிலைக்களமான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் .
தமிழியல்வழக்கு பண்டைக் காலத்துத் தமிழ் நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம் .
தமிழோர் தமிழ்மக்கள் ; தமிழ்ப்புலவர் .
தமுக்கடித்தல் பறைசாற்றிச் செய்தியறிவித்தல் ; தேவையின்றிப் பிறருக்கு அறிவித்தல் .
தமுக்கம் போருக்குச் செல்லும் யானைகள் திரளுமிடம் ; வசந்தமாளிகை .
தமுக்கு செய்தி தெரிவிக்க முழக்கும் ஒரு பறைவகை .
தமுக்குப்போடுதல் காண்க : தமுக்கடித்தல் .
தமை ஆசை ; புலன்களையடக்குதல் .
தமையம் காண்க : அரிதாரம் .
தமையன் காண்க : தமயன் .
தமோகுணம் காம வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம் .
தமோமணி மின்மினி .