சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தய்யான் | தையற்காரன் . |
| தயக்கம் | ஒளிவிடுகை ; தோற்றம் ; கலக்கம் ; அசைவு . |
| தயங்குதல் | விளங்குதல் ; ஒளிவிடுதல் ; தெளிவாயிருத்தல் ; திகைத்தல் ; வாடுதல் ; அசைதல் . |
| தயல் | பெண் . |
| தயவு | அன்பு ; அருள் ; பக்தி . |
| தயனியம் | அருளத்தக்கது . |
| தயா | காண்க : தயவு . |
| தயாசீலன் | அருளுடையவன் . |
| தயாதர்மம் | அருளாகிய அறம் . |
| தயாபரன் | அருள்மிக்க கடவுள் . |
| தயாபாரமிதை | அருள் மிகுகையாகிய பாரமிதை . |
| தயார் | அணியம் , ஆயத்தம் . |
| தயாவம் | காண்க : தயவு . |
| தயாவீரன் | அருளில் மேம்பட்ட புத்தன் . |
| தயாவு | காண்க : தயவு . |
| தயாளத்துவம் | அருள் . |
| தயாளம் | அருள் . |
| தயாளன் | காண்க : தயாசீலன் . |
| தயாளு | காண்க : தயாசீலன் . |
| தயித்தியர் | அசுரர் . |
| தயிர் | பிரையூற்றின பால் ; மூளைக் கொழுப்பு . |
| தயிர்க்கோல் | மத்து . |
| தயிர்கடைதறி | தயிர் கடைவதற்குப் பயன்படுத்தும் தூண் . |
| தயிர்கடைதாழி | மத்திட்டுக் கடையும் தயிர்ப்பானை . |
| தயிர்வேளை | தைவேளைப்பூடு . |
| தயிரமுது | கடவுட்கு அல்லது அடியார்க்குப் படைக்குந் தயிர் . |
| தயிரியம் | மனத்திட்பம் , துணிவு . |
| தயிரேடு | பால் ஆடை . |
| தயிலக்காப்பு | கடவுள் திருமேனிக்கு எண்ணெய் இடுதல் . |
| தயிலம் | வடித்த மருந்தெண்ணெய் ; எண்ணெய் . |
| தயிலமாட்டுதல் | பிணத்தை எண்ணெயிலிட்டுக் கெடாமற் காத்தல் . |
| தயிலமிறக்குதல் | பொருள்களினின்று தைலம் வடித்தல் . |
| தயினியம் | எளிமை . |
| தயை | அருள் ; அன்பு ; பக்தி . |
| தர்க்கம் | காண்க : தருக்கம் . |
| தர்ச்சனி | சுட்டுவிரல் . |
| தர்ப்பகன் | மன்மதன் . |
| தர்ப்பணம் | தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் இறுக்கும் நீர்க்கடன் ; கண்ணாடி . |
| தர்ப்பணானனன் | எதிர் தோன்றினாரைக் காணமாட்டாத கண்ணாடிபோன்ற முகமுடைய குருடன் . |
| தர்ப்பீத்து | பயிற்சி ; ஒழுக்கம் . |
| தர்பார் | அரசன் முதலாயினரது ஓலக்கம் . |
| தர்மம் | காண்க : தருமம் . |
| தர்மாசனம் | காண்க : தருமசபை ; பார்ப்பனருக்கு விட்ட இறையிலி நிலம் . |
| தர்மோபதேசம் | அறவுரை . |
| தரக்கு | புலி ; கழுதைப்புலி . |
| தரகரி | வாங்குவோர் விற்போர்களிடையே நின்று பண்டங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்பவன் . |
| தரகன் | வாங்குவோர் விற்போர்களிடையே நின்று பண்டங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்பவன் . |
| தரகு | தரகர் பெறும் கூலி ; வாசனைப் புல்வகை ; விலை இலாபம் ; காண்க : தரகுபாட்டம் ; ஏறக்குறைய இரண்டு படியுள்ள ஓர் அளவுகருவி . |
| தரகுகாரன் | காண்க : தரகன் . |
| தரகுகூலி | தானியம் வாங்குவோன் அளப்பவனுக்குக் கொடுக்கும் கூலி . |
| தரகுபாட்டம் | தரகரிடமிருந்து கொள்ளும் வரி . |
| தரங்கம் | அலை ; கடல் ; மனக்கலக்கம் ; இசையலைவு ; ஈட்டி . |
| தரங்கம்மி | நிலத்தின் தாழ்ந்த தரம் ; நிலவரிக்குறைவு . |
| தரங்கிணி | ஆறு . |
| தரங்கித்தல் | அலையுண்டாதல் ; மனம் அலைதல் . |
| தரங்கு | வழி ; மண்வெட்டிப் பிடியின் அடியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையம் ; ஈட்டிமுனை ; அலை . |
| தரணம் | தாண்டல் ; பாலம் ; தரிக்கை ; அரிசி ; இமயமலை ; கதிரவன் ; பாவம் ; பூமி . |
| தரணி | பூமி ; மலை ; நியாயவாதி ; சூரியன் ; மருத்துவன் ; படகு . |
| தரணிதரன் | அரசன் ; திருமால் . |
| தரணிபன் | அரசன் ; சூரியன் . |
| தரணிவாரிக்கல் | கானகக்கல் . |
| தரணீதரம் | ஆமை . |
| தரத்தர | மேன்மேலே கொடுக்க . |
| தரதூது | முயற்சி ; வேளாண்மை . |
| தரந்தம் | தவளை ; கடல் ; விடாமழை . |
| தரப்பு | பக்கம் ; உத்தியோக நிலை ; அயன்பூமி . |
| தரபடி | நடுத்தரம் ; உட்சட்டை ; ஊர் நிலங்களின் தரவாரி முறை ; காண்க : தரவழி . |
| தரம் | தகுதி ; மேன்மை ; தலை ; தெப்பம் ; வலிமை ; வீதம் ; வகுப்பு ; மட்டம் ; தக்க சமயம் ; நிலப்பிரிவு ; தீர்வை ; மலை ; பருத்திப்பொதி ; கூட்டம் ; சங்கு ; தடவை ; அச்சம் ; அரக்கு ; வரிசை ; பூமி . |
| தரவழி | வகை ; நடுத்தரம் . |
| தரவிணைக்கொச்சகம் | இரண்டு தரவுகொண்ட கொச்சகக் கலிப்பாவகை . |
| தரவு | தருகை ; கலிப்பாவின் முதலுறுப்பு ; கட்டளை ; தரகர்பெறுங் கூலி ; விலை இலாபம் ; காண்க : தரகன் ; தரகரிடமிருந்து கொள்ளும் வரி ; வரி ; வரிதண்டுகை ; பிடர் . |
| தரவுக்காரன் | தண்டக் கட்டளையை நிறைவேற்றுவோன் . |
| தரவுகொச்சகம் | கொச்சகக் கலிப்பாவகை . |
| தரவை | கரம்புநிலம் ; களை மூடிய உவர்நிலம் . |
| தரள நீராஞ்சனம் | முத்தாரத்தி . |
|
|
|