சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தரளம் | நடுக்கம் ; முத்து ; உருட்சி . |
| தரளை | கஞ்சி ; கள் . |
| தரன் | தரித்தவன் ; எட்டு வசுக்களுள் ஒருவன் . |
| தரா | ஒருவகைக் கலப்பு உலோகம் ; பூமி ; சங்கு . |
| தராங்கம் | மலை . |
| தராசம் | வயிரக் குணங்களுள் ஒன்று ; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று . |
| தராசு | நிறைக்கோல் ; ஓரளவு ; துலாராசி ; பரணி நாள் ; வெள்ளெருக்கு . |
| தராசுக்குண்டு | நிறைகல் . |
| தராசுக்கொடி | காண்க : பெருமருந்து ; முல்லை . |
| தராசுக்கோல் | துலாக்கோல் . |
| தராசுத்தட்டு | துலாத்தட்டு . |
| தராசுநா | காண்க : தராசுமுள் . |
| தராசுப்படி | நிறைகல் ; காண்க : தராசுக்குண்டு . |
| தராசுமுள் | தராசில் இரண்டு தட்டும் சமமாய் உள்ளதா என்பதைக் காட்டும் முள் . |
| தராதரம் | ஏற்றத்தாழ்வு ; உயர்வுதாழ்வு ; உயர்நிலை ; மலை . |
| தராதலம் | பூமி ; கீழேழு உலகத்துள் ஒன்று . |
| தராதிபன் | அரசன் . |
| தராபதி | அரசன் . |
| தராய் | மேட்டுநிலம் ; கீரைவகை ; பிரமிப்பூண்டு . |
| தரி | இருப்பு ; நன்செய் நிலம் . |
| தரிகொடுத்தல் | இடங்கொடுத்தல் . |
| தரிகொள்தல் | இருப்புக்கொள்ளுதல் . |
| தரிகொளுதல் | இருப்புக்கொள்ளுதல் . |
| தரிசனபேதி | காண்க : தரிசனவேதி . |
| தரிசனம் | காட்சி ; பார்வை ; கண் ; தோற்றம் ; தரிசிக்கை ; சொப்பனம் முதலிய தோற்றம் ; கண்ணாடி ; மதக்கொள்கை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| தரிசனவிசுத்தி | வீட்டுநெறியை ஐயமின்றித் தெளிகை . |
| தரிசனவேதி | தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றவல்ல பச்சிலைவகை . |
| தரிசனாவரணியம் | எண்வகைக் குற்றத்துள் உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் கருமம் . |
| தரிசனீயம் | காட்சிக்கினியது . |
| தரிசனை | காட்சி ; அறிகை ; கண்ணாடி . |
| தரிசித்தல் | பெரியோர் ; கடவுள் ; புண்ணியத் தலங்களைக் காணுதல் ; வழிபடல் . |
| தரிசியம் | காணத்தக்கது . |
| தரிசு | பயிர் செய்யாத நிலம் ; உள்ளிடு பரல் . |
| தரிஞ்சகம் | அன்றிற்பறவை . |
| தரித்தல் | நிலைபெற்று நிற்றல் ; இருப்புக் கொள்ளுதல் ; ஊன்றி நிற்றல் ; அணிதல் ; தாங்குதல் ; பொறுத்தல் ; அடக்கிக்கொள்ளுதல் ; மறவாது உள்ளத்தில் வைத்தல் ; தாம்பூலம் தின்னுதல் . |
| தரித்திரப்படுதல் | வறுமையடைதல் ; உலோப குணத்தையடைதல் . |
| தரித்திரம் | வறுமை . |
| தரித்திரம்பிடித்தல் | வறுமையடைதல் ; உலோபியாயிருத்தல் . |
| தரித்திரன் | வறியவன் . |
| தரித்திரி | வறியவள் ; பூமி . |
| தரிப்பு | தங்குகை ; நினைவு ; பொறுத்திருக்கை ; உறுதி ; இருப்பிடம் ; கையிருப்பு ; நிறுத்தும் இடம் ; காண்க : தருப்பு . |
| தரிப்புத்தட்டான் | செல்வன் . |
| தரிபடுதல் | நிலைபெறுதல் . |
| தரிபெறுதல் | நிலைபெறுதல் . |
| தரியலர் | பகைவர் . |
| தரியலார் | பகைவர் . |
| தரியாபத்து | விசாரணை ; கண்டுபிடிக்கை ; வழக்கு . |
| தரியார் | பகைவர் . |
| தரு | மரம் ; கற்பகமரம் ; இசைப்பாட்டுவகை ; ஒருவகைச் சந்தம் ; காண்க : தேவதாரு . |
| தருக்கம் | நியாயவாதம் ; மேம்பாடு ; வாக்கு வாதம் ; நியாயவாத நூல் . |
| தருக்கி | அகங்காரமுள்ளவர் ; நியாயவாத நூல் வல்லோன் . |
| தருக்கித்தல் | வாக்குவாதம் பண்ணல் . |
| தருக்கு | செருக்கு ; வலிமை ; களிப்பு ; தருக்கம் . |
| தருக்குதல் | அகங்கரித்தல் ; களித்தல் ; ஊக்கமிகுதல் ; பெருக்குதல் ; இடித்தல் ; வருத்துதல் ; உடைத்தல் ; மேற்கொள்ளுதல் . |
| தருக்கோட்டம் | காவிரிப்பூம்பட்டினத்தில் கற்பகத்தரு நின்று விளங்கிய கோயில் . |
| தருசாரம் | மரத்தின் சாரமாயுள்ள கருப்பூரம் . |
| தருசு | நெருங்கிய இழை . |
| தருணம் | இளமை ; தக்க சமயம் ; நல்ல எண்ணம் ; காண்க : பெருஞ்சீரகம் ; ஆமணக்கு . |
| தருணன் | இளைஞன் . |
| தருணி | காண்க : தருணை ; கற்றாழை . |
| தருணை | இளம்பெண் , பதினாறு முதல் முப்பது அகவைவரை யுள்ள பெண் . |
| தருதல் | கொடை . |
| தருநன் | கொடுப்பவன் . |
| தருநிலைக்கோட்டம் | காண்க : தருக்கோட்டம் . |
| தருநிறப்பஞ்சரம் | காந்தம் . |
| தருப்பகம் | தாழ்வு . |
| தருப்பகன் | மன்மதன் . |
| தருப்படன் | ஊர் காவற்காரன் . |
| தருப்பணம் | தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் செய்யும் நீர்க்கடன் ; உணவு ; அவல் ; கண்ணாடி . |
| தருப்பம் | அகங்காரம் ; புனுகுசட்டம் ; தருப்பைப்புல் . |
| தருப்பாக்கிரம் | தருப்பை நுனி . |
| தருப்பி | காண்க : தருவி . |
| தருப்பித்தல் | வழிபாடுகளால் கடவுளுக்குத் தன்னை ஒப்படைத்தல் . |
| தருப்பு | குறைந்த விலையுள்ள ஒரு வெள்ளைக் கல்வகை . |
| தருப்பை | குசைப்புல் . |
|
|
|