தருமக்கட்டை முதல் - தரைமட்டம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தருமக்கட்டை பிறர் தருமத்தால் வாழும் உடலான அநாதப்பிள்ளை ; ஆவுரிஞ்சு தறி .
தருமக்கல் ஒருவன் செய்த அறங்கள் வரையப்பட்ட கல்வெட்டு .
தருமக்கிழவர் தருமத்தைக் காப்பவர் ; அறச்செயல் புரிதற்குரிய வணிகர் .
தருமகர்த்தா கோயில் அதிகாரி ; நீதி உரைக்கும் அதிகாரி .
தருமகாரியம் அறச்செயல் .
தருமச்செல்வி காண்க : தருமதேவதை ; பார்வதி .
தருமச்செலவு அறத்திற்காகச் செய்யும் செலவு .
தருமச்சக்கரம் அறவாழி .
தருமசங்கடம் மாறுபட்ட இரு கடமைகளுள் எதைச் செய்வது என்று அறியாது துன்புறும் நிலை .
தருமசத்திரம் அறக்கூழ்ச்சாலை , அன்னசத்திரம் .
தருமசபை நீதிமன்றம் .
தருமசாசனம் அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம் .
தருமசாதனம் அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம் .
தருமசாலி அறஞ்செய்வோன் .
தருமசாலை தருமசத்திரம் ; முப்பத்திரண்டு அறங்களையும் புரிதற்குரிய இடம் .
தருமசிந்தை அறம்புரியுங் கருத்து .
தருமசீலன் அறஞ்செய்பவன் .
தருமசீலி அறம்புரிபவள் .
தருமணல் புதிதாகக் கொணர்ந்து பரப்பும் மணல் .
தருமத்தியானம் ஆன்மா ஈடேறுவதைப்பற்றிய நினைவு .
தருமதலைவன் தருமத்திற்குரிய தலைவனான புத்தன் .
தருமதாயம் அறத்திற்காக விடும் இறையிலி நிலம் .
தருமதானம் சமய தருமப்படி செய்யும் தானம் .
தருமதி நிலுவை .
தருமதேவதை அறக்கடவுள் ; இயக்கிதேவி ; யமன் .
தருமநாள் பரணிநாள் .
தருமநியாயம் அறநூல்களில் கூறும் நீதி .
தருமநீதி அறநூல்களில் கூறும் நீதி .
தருமப்பள்ளி அறப்புறமான கல்விச்சாலை .
தருமப்பிணம் ஊராராற் சுடப்படும் அநாதப்பிணம் .
தருமப்பெட்டி தருமக் காணிக்கையிடும் பெட்டி .
தருமபத்தினி கணவனோடு உடனிருந்து வைதிகக் கருமங்களை நடத்தும் மனைவி .
தருமபீடிகை புத்தர் பாதங்கள் அமைந்த பீடம் .
தருமபுத்திரன் பாண்டவருள் மூத்தோன் ; தருமபத்தினியிடம் பிறந்த மகன் .
தருமபுரம் யமலோகம் ; சைவமடமுள்ள ஒரு சோணாட்டுத்தலம் .
தருமம் நற்செயல் ; விதி ; நீதி ; தானம் முதலிய அறம் ; நல்லொழுக்கம் ; கடமை ; இயற்கை ; பதினெண்வகைப்பட்ட அறநூல் .
தருமமன்று தருமசபை .
தருமமுதல்வன் அருகக்கடவுள் .
தருமமூர்த்தி தருமமே உருவானவன் .
தருமராசன் பாண்டவருள் மூத்தவன் ; புத்தன் ; அருகன் ; யமன் ; பாலைமரம் .
தருமரேகை அறஞ்செய் குணத்தைக் குறிக்கும் கைரேகை .
தருமலோபம் அறக்கடமை தவறுகை .
தருமவட்டி நியாயவட்டி .
தருமவதி அறச்செயலுள்ள பெண் .
தருமவந்தன் காண்க : தருமவான் .
தருமவாகனன் அறமே வடிவான காளையை ஊர்தியாகக் கொண்ட சிவன் .
தருமவாசனம் காண்க : தருமசபை .
தருமவாட்டி அறச்செயலுள்ள பெண் .
தருமவாடி பிச்சை வழங்குமிடம் .
தருமவாளன் அறச்சிந்தையுள்ளோன் .
தருமவான் அறச்சிந்தையுள்ளோன் .
தருமவினைஞர் அறப்புறங் காவலர் .
தருமவைத்தியசாலை நோயாளிகளுக்குப் பொருள் வாங்காது மருத்துவம் செய்யுமிடம் .
தருமன் அறக்கடவுள் ; யமன் ; தருமபுத்திரன் ; புத்தன் ; அருகன் ; பாண்டவருள் மூத்தோன் ; திருக்குறள் உரைகாரருள் ஒருவர் .
தருமாசனத்தார் நீதிபதிகள் .
தருமாசனத்துக் கருத்தாக்கள் நீதிபதிகள் .
தருமாசனம் காண்க : தருமசபை ; பார்ப்பனருக்குவிட்ட இறையிலி நிலம் .
தருமாத்திகாயம் சமரணது பஞ்சாஸ்திகாயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது செலவுக்கு உதவும் பொருள் .
தருமாத்துமா காண்க : தருமவான் .
தருமாதருமம் நியாய அநியாயம் .
தருமி காண்க : தருமவான் ; ஒரு வேதியத் தொண்டன் ; தருமத்தையுடைய பொருள் .
தருமிருகம் குரங்கு .
தருராசன் மரங்களின் அரசனாகிய பனை .
தருவாரி கல்லுப்பு .
தருவி துடுப்பு ; ஓமத்திற்கொள்ளும் இலைக்கரண்டி ; பேர் மாத்திரத்துக்கு உள்ளது .
தருவித்தல் வருவித்தல்
தருவை பெரிய ஏரி .
தரூடம் தாமரைப்பூ .
தரை பூமி ; நிலம் ; ஆணித்தலை ; நரம்பு ; சூற்பை .
தரைக்காற்று பூமியில் எழுந்து வீசுங்காற்று .
தரைகாணுதல் அளவிடுதல் ; கீழ்விழுதல் .
தரைதட்டுதல் கப்பல் தரையில் மோதுதல் .
தரைப்படுத்துதல் தோற்கச்செய்தல் .
தரைமகன் பூமியின் மகனான செவ்வாய் .
தரைமட்டம் நிலமட்டம் .