சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தரையர் | பூமியிலுள்ளோர் . |
| தரையிடுதல் | அடித்த ஆணியின் இருபுறத்தையும் மடக்குதல் . |
| தரையோடு | தரையிற் பாவுதற்குரிய ஓடு . |
| தல்லம் | குழி ; நீரிருக்கும் பள்ளம் . |
| தல்லி | தாய் . |
| தல்லிகை | திறப்பு . |
| தல்லு | புணர்ச்சி . |
| தல்லுதல் | இடித்து நசுக்குதல் . |
| தல்லுமெல்லு | இழுபறி . |
| தல்லை | தெப்பம் ; இளம்பெண் . |
| தலக்கம் | இழிசெயல் . |
| தலக்கு | நாணம் . |
| தலகம் | தடாகம் . |
| தலசம் | பூமியில் தோன்றிய முத்து . |
| தலசயனம் | மாமல்லபுரம் முதலியவற்றிற் போலத் திருமால் நிலத்திற் பள்ளிகொண்ட திருக்கோலமுள்ள இடம் . |
| தலசுத்தி | உண்கலம் இடுவதற்குமுன் அது வைக்குமிடத்தை நீரிட்டுத் தூய்மை செய்கை ; பிறப்பு இறப்பு நிகழ்ந்த வீட்டை மந்திர நீரால் தூய்மைசெய்தல் . |
| தலத்தாது | காண்க : நிலப்பனை . |
| தலத்தார் | கோயில் அதிகாரிகள் . |
| தலபுட்பம் | காண்க : தாழை . |
| தலம் | இடம் ; பூமி ; உலகம் ; தெய்வத்தலம் ; ஆழம் ; காடு ; கீழ் ; வீடு ; செய் ; தலை ; நகரம் ; இலை ; உடலுறுப்பு ; இதழ் . |
| தலமுகம் | நிருத்தக் கைவகை . |
| தலவகாரம் | சாமவேத சாகைகளுள் ஒன்று . |
| தலவாசம் | தெய்வத்தலத்தில் வாழ்தல் . |
| தலவாரி | வயல்வாரி . |
| தலன் | கீழானவன் . |
| தலாடகம் | அகழ் ; காட்டெள் ; சுழல்காற்று ; யானைச்செவி . |
| தலாடகன் | யானைப்பாகன் . |
| தலாடம் | அணில் . |
| தலாதலம் | கீழேழுலகத்துள் ஒன்று . |
| தலாதிபதி | மன்னன் , அதிகாரி . |
| தலாதிபன் | மன்னன் , அதிகாரி . |
| தலாமலம் | மருக்கொழுந்து . |
| தலை | சிரம் ; முதல் ; சிறந்தது ; வானம் ; இடம் ; உயர்ந்தோன் ; தலைவன் ; உச்சி ; நுனி ; முடிவு ; ஒப்பு ; ஆள் ; தலைமயிர் ; ஏழாம் வேற்றுமை உருபு ; ஓர் இடைச்சொல் ; மேலே ; தபால் கடிதத்தில் ஒட்டும் முத்திரைத்தலை ; தலையோடு . |
| தலைக்கட்டு | முடிவு ; குடும்பம் ; தலைப்பாகை ; கருமாதியின் இறுதியில் தலைப்பாகை கட்டும் நன்மைச் சடங்கு ; வீட்டின் முதற்கட்டு . |
| தலைக்கடை | முதல்வாசல் . |
| தலைக்கணை | காண்க : தலையணை . |
| தலைக்கருவி | தலைக்கவசம் . |
| தலைக்கரை | வயலை அடுத்துள்ள நிலம் . |
| தலைக்கழிதல் | பிரிதல் . |
| தலைக்கனம் | தலைநோவு ; செருக்கு . |
| தலைக்காஞ்சி | பகைவரையழித்துப் பட்ட வீரனது தலையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை . |
| தலைக்காவல் | முதன்மைக் காவல் . |
| தலைக்கிறுகிறுப்பு | பித்த மயக்கம் ; அகம்பாவம் . |
| தலைக்கீடு | போலிக் காரணம் ; காரணம் ; தலைப்பாகை . |
| தலைக்குட்டை | தலைப்பாகை . |
| தலைக்குடி | முதற்குடி ; பழங்குடி . |
| தலைக்குத்தலைநாயகம் | ஆளுக்காள் தலைமை . |
| தலைக்குத்து | தலைவலி . |
| தலைக்குமேலே | அளவுக்கு மிஞ்சி . |
| தலைக்குலை | முதற்குலை ; குலையின் நுனிப்பாகம் . |
| தலைக்குறை | சொல்லின் முதற் குறை ; முண்டம் . |
| தலைக்கூட்டு | வாணிகத்தின் தலைமைக் கூட்டாளி . |
| தலைக்கூட்டுதல் | கூட்டுவித்தல் ; நிறைவேற்றுதல் ; வைக்கோற்போரைச் செப்பமாக அமைத்தல் . |
| தலைக்கூடுதல் | ஒன்றுசேர்தல் ; நிறைவேறுதல் . |
| தலைக்கை | தலைமையானவர் . |
| தலைக்கைதருதல் | கையால் தழுவி அன்புடைமை காட்டுதல் . |
| தலைக்கொம்பு | பல்லக்குத் தண்டின் வளைந்த முன்பாகம் ; பல்லக்குச் சுமப்போரின் முதற்றானம் ; சிறந்தவன்(ள்) . |
| தலைக்கொள்ளுதல் | தலைக்கேறுதல் ; மிகுதல் ; இறத்தல் ; வெல்லுதல் ; மேற்கொள்ளுதல் ; கிட்டுதல் ; கைப்பற்றுதல் ; தொடங்குதல் ; கெடுத்தல் . |
| தலைக்கோதை | நெற்றிக் கட்டுமாலை . |
| தலைக்கோல் | அரசனிடமிருந்து ஆடற்கணிகையர் பெறும் பட்டம் . |
| தலைக்கோலம் | மகளிர் தலையிலணியும் அணிவகை . |
| தலைக்கோலாசான் | நட்டுவன் . |
| தலைக்கோலி | ஆடிமுதிர்ந்த கணிகை . |
| தலைக்கோற்றானம் | நாடக அரங்கு . |
| தலைகட்டுதல் | மயிர் முடித்தல் ; கணக்குப் புத்தகம் முதலியவற்றில் தலைப்பு எழுதுதல் ; விளிம்பு கட்டுதல் . |
| தலைகவிழ்தல் | நாணம் முதலியவற்றால் தலைசாய்தல் ; மேல்கீழாதல் ; அகங்கரித்தல் . |
| தலைகழித்தல் | கடமை முதலியவற்றைச் செய்துதீர்த்தல் ; தலைமுடி கழித்தல் . |
| தலைகாட்டுதல் | சிறிது நேரம் வந்து தங்கியிருத்தல் ; பலருமறிய வெளிவருதல் ; நன்னிலைமைக்கு வரத் தொடங்குதல் . |
| தலைகாண்தல் | பாதுகாத்தல் . |
| தலைகாணுதல் | பாதுகாத்தல் . |
| தலைகாத்தல் | பாதுகாத்தல் . |
| தலைகிழக்காதல் | அழிவடைதல் . |
| தலைகீழாய் | நேர்நிலை தவறி ; முற்றவும் நன்றாய் . |
| தலைகீழாய்நிற்றல் | மிகச்செருக்குக்கொள்ளுதல் ; பெருமுயற்சியெடுத்தல் . |
| தலைகுலைதல் | நிலைகெடுதல் . |
|
|
|