தலையற்றாள் முதல் - தவசி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தலையற்றாள் தலைவனை இழந்த கைம்பெண் .
தலையறை உடற்குறை .
தலையன்பு உயர் அன்பு .
தலையாகுமோனை செய்யுளின் ஓரடியில் எல்லாச் சீரிலும் மோனையெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .
தலையாகெதுகை செய்யுள் அடிதோறும் முதற்சீர் முழுதும் ஒன்றிவரும் எதுகை .
தலையாட்டம் தலைநடுக்கம் ; பேரச்சம் ; குதிரைத் தலையணிவகை .
தலையாட்டி இங்குமங்கும் தலையசைத்து ஆடும் பொம்மை ; எதற்கும் இணங்கி நடப்பவன் .
தலையாட்டிப் பொம்மை இங்குமங்கும் தலையசைத்து ஆடும் பொம்மை ; எதற்கும் இணங்கி நடப்பவன் .
தலையாடி பனைமரத்தின் நுனிப்பாகம் ; ஒரு செய்யுளின் பிற்பகுதி .
தலையாப்பு வடிசோற்றின்மேற் பரந்துள்ள கஞ்சியாடை .
தலையாயர் பெரியோர் .
தலையாரி ஊர்க்காவற்காரன் .
தலையானடத்தல் அகங்கரித்தல் ; பெருமுயற்சி செய்தல் .
தலையிடி தலைவலி .
தலையிடுதல் காரணமின்றிப் பிறர் செயலில் புகுதல் ; நுழைதல் ; கூட்டுதல் .
தலையில்லாச்சேவகன் நண்டு .
தலையிலடித்தல் அநியாயஞ்செய்தல் ; ஒருவனது தலையைத் தொட்டுச் சத்தியஞ் செய்தல் .
தலையிலெழுத்து விதி .
தலையிற்கட்டுதல் ஒருவனை ஒன்றற்குப் பொறுப்பாக்குதல் ; ஏமாற்றிக் கொடுத்தல் .
தலையிற்போடுதல் பொறுப்பாக்குதல் ; பழிசுமத்தல் .
தலையிறக்கம் தலை சாய்கையான துயரம் ; அவமானம் .
தலையீடு முதல¦ற்று ; முதல்தரம் ; தலைப்பிலிருப்பது ; சுவரின் தலைப்பாகத்தில் கட்டப்படும் செங்கல் வரிசை .
தலையீண்டுதல் ஒன்றுகூடுதல் .
தலையீற்று முதல¦னுகை ; முதற் கன்று .
தலையுடைத்துக்கொள்தல் பெருமுயற்சி எடுத்தல் .
தலையுடைத்துக்கொளுதல் பெருமுயற்சி எடுத்தல் .
தலையுதிர்நெல் கதிரின் முதலடிப்பில் எடுக்கப்படும் நெல் .
தலையுவா அமாவாசை .
தலையெடுத்தல் தலை நிமிர்தல் ; வெளித்தெரிதல் ; வளர்ச்சியடைதல் ; உற்பத்தியாதல் ; இழந்த நிலையைத் திரும்ப அடைதல் ; நீக்குதல் .
தலையெடுப்பு மேம்படுதல் ; செருக்கு ; தலைநிமிர்ச்சி ; ஒரு துறையில் உயர்தல் ; மேன்மை .
தலையெழுத்து பிரமலிபியாகிய விதி ; நூலின் முகப்பு ; உயிரெழுத்து .
தலையேழுவள்ளல்கள் சகரன் , காரி , நளன் , துந்துமாரி , நிருதி , செம்பியன் , விராடன் .
தலையேறுதண்டம் பொறுக்கமுடியாத தண்டனை ; துன்பப்படுத்தி வாங்கும் வேலை ; மிக்க துன்பம் .
தலையோடு மண்டையோடு ; கபாலம் .
தலைவணங்குதல் தலைசாய்த்து வணங்குதல் ; பயிரின் தலை வளைதல் .
தலைவரிசை உயர்ந்த பரிசு .
தலைவலி தலைநோவு ; முகத்திலுள்ள நரம்புநோவு ; தொந்தரவு .
தலைவழித்தல் தலைச்சவரம் பண்ணுதல் ; தலைதட்டுதல் .
தலைவழிதல் நிரம்பிவழிதல் .
தலைவழுக்கை தலையை வழுக்கையாகச் செய்யும் நோய்வகை .
தலைவன் முதல்வன் ; அரசன் ; குரு ; மூத்தோன் ; சிறந்தவன் ; கடவுள் ; அகப்பொருட் கிழவன் ; கதைத்தலைவன் ; கணவன் .
தலைவாங்கி தூக்குப்போடுவோன் ; தீயன் .
தலைவாங்குதல் சிரச்சேதஞ் செய்தல் ; காண்க : தலைமயிர்வாங்குதல் .
தலைவாசகம் பாயிரம் .
தலைவாசல் காண்க : தலைவாயில் .
தலைவாய் முதன்மடை .
தலைவாய்ச்சேரி முகப்பிலுள்ள ஊர்ப்பகுதி .
தலைவாயில் முதல்வாசல் ; கதவின் மேல்நிலை .
தலைவாரி சீப்பு .
தலைவாருதல் தலைமயிர் சீவுதல் .
தலைவாழையிலை நுனியோடு கூடிய வாழை இலை .
தலைவி தலைமைப் பெண் ; இறைவி ; அகப்பொருட் கிழத்தி ; கதைத்தலைவி ; மனைவி .
தலைவிதி ஊழ் .
தலைவிரிகோலம் அலங்கோலம் .
தலைவிரிச்சான் தலைமயிர் முடியாதவன் ; சாரணைப்பூடு ; செருப்படைப்பூடு .
தலைவிளை வயலின் முதல்விளைவு .
தலைவெட்டி தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வோன் ; காவாலி ; மோசக்காரன் ; ஆட்டுநோய்வகை .
தலைவெட்டுதல் சிரத்சேதம் செய்தல் ; காண்க : தலைதட்டுதல ; மோசஞ்செய்தல் ; பத்திரக் காதுகுத்துதல் ; தலைமயிர் கத்தரித்தல் .
தலைவைத்தல் காண்க : தலையிடுதல் ; நீர் முதலியன பாயத் தொடங்குதல் .
தவ்வல் சிறு குழந்தை ; மரம் விலங்கு முதலியவற்றின் இளமை .
தவ்வி அகப்பை .
தவ்வு கெடுகை ; பலகையிலிடும் துளை ; பாய்ச்சல் .
தவ்வுதல் தாவுதல் ; குறைதல் ; குவிதல் ; கெடுதல் ; தவறுதல் ; மெல்ல மிதித்தல் ; அகங்கரித்தல் .
தவ்வெனல் சுருங்குதற்குறிப்பு ; மழையின் ஒலிக்குறிப்பு .
தவ்வை தாய் ; தமக்கை ; மூதேவி .
தவ மிக .
தவக்கம் தடை ; இல்லாமை ; தாமதம் ; கவலை .
தவக்கு நாணம் .
தவக்கை காண்க : தவளை .
தவக்கொடி தவப்பெண் .
தவங்கம் துன்பம் .
தவங்குதல் தடைப்படுதல் ; பொருட்குறையால் வருந்துதல் ; வாடுதல் .
தவச்சாலை தவம் செய்யும் இடம் .
தவசம் தானியம் ; தொகுத்த பண்டம் .
தவசி தவஞ்செய்பவன் .