தவசிப்பிள்ளை முதல் - தவித்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தவசிப்பிள்ளை பூசைப் பணியாள் ; சைவருக்குச் சமையற்காரன் .
தவசு காண்க : தவம் .
தவடை தாடை .
தவண்டை பேருடுக்கை ; ஒரு நீச்சுவகை ; தவிப்பு ; காண்க : தவடை .
தவண்டையடித்தல் நீரில் விளையாடுதல் ; வறுமைப்படுதல் .
தவணை கெடு ; சட்டம் பதிக்கும் காடி ; கட்டுப் பானைத் தெப்பம் .
தவணைச்சீட்டு காலங் குறித்தெழுதும் பத்திரம் .
தவணைப்பணம் கெடுவின்படி செலுத்த வேண்டிய பணம் .
தவணைபார்த்தல் சாகுபடிக் கணக்குப் பார்த்தல் .
தவத்தர் முனிவர் .
தவத்தல் நீங்குதல் .
தவதாயம் இடுக்கண் .
தவதாயித்தல் துன்பநிலைக்குள்ளாதல் .
தவந்து தானியம் .
தவநிலை தவச்செயல் .
தவப்பள்ளி முனிவர் வாழிடம் .
தவம் பற்று நீங்கிய வழிபாடு ; புண்ணியம் ; இல்லறம் ; கற்பு ; தோத்திரம் ; தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு ; வெப்பம் ; காட்டுத்தீ .
தவமுதல்வி தவத்தில் முதிர்ந்தவள் .
தவமுதுகள் தவத்தில் முதிர்ந்தவள் .
தவமுதுமகன் தவத்தில் முதிர்ந்த முனிவன் .
தவர் வில் ; துளை ; சிறு கப்பலில் சங்கிலி சுற்றும் கருவி .
தவர்தல் துளைத்தல் .
தவராசம் வெள்ளைச் சருக்கரை .
தவல் குறைவு ; கேடு ; குற்றம் ; இறப்பு ; வறுமையால் வருந்துகை .
தவல்தல் நீங்குதல் .
தவலுதல் நீங்குதல் .
தவலத்து ஆட்சி .
தவலை அகன்ற வாயுடைய பாத்திரவகை .
தவலோகம் மேலேழுலகினுள் ஒன்று .
தவவிளக்கு முக்காலத்தை விளக்கும் தவமாகிய தீபம் .
தவவீரர் தவம் இயற்றுவதில் வீரரான முனிவர் .
தவவேடம் முனிவர்கோலம் .
தவவேள்வி நோன்பு இருத்தல் .
தவழ்சாதி ஊர்ந்து செல்லும் உயிரினம் .
தவழ்தல் ஊர்தல் ; தத்துதல் ; பரத்தல் .
தவழ்புனல் மெல்லச் செல்லும் ஆற்றுநீர் .
தவழவாங்குதல் ஒருவனைக் குனியவைத்துத் துன்புறுத்தி அவன் சொத்து முழுவதையும் கவர்தல் ; மிகுதியான வேலைவாங்குதல் .
தவளசத்திரம் அரசர்க்குரிய வெண்கொற்றக் குடை .
தவளத்தொடை தும்பைமாலை .
தவளம் வெண்மை ; வெண்மிளகு ; சங்கபாடாணம் .
தவளிதம் வெண்மை .
தவளை ஒரு நீர்வாழ் சாதிவகை .
தவளைக்கிண்கிணி தவளைபோல் ஒலிக்கும் கிண்கிணிகொண்ட ஒரு காலணிவகை .
தவளைக்குஞ்சு தவளையின் இளமை .
தவளைக்குட்டி தவளையின் இளமை .
தவளைக்குரங்கு பணிப்பூட்டுவகை ; கொக்கித் தாழ்ப்பாள் ; இரட்டைக்கொக்கி .
தவளைப்பாய்த்து சூத்திரநிலை நான்கனுள் தவளைப் பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் ஒரு நிலை .
தவளோற்பலம் காண்க : வெள்ளாம்பல் .
தவற்றுதல் விலக்கல் .
தவறு பிழை ; செயல் கைகூடாமை ; நெறி தவறுகை ; அழுக்கு ; பஞ்சம் ; குறைவு .
தவறுதல் வழுவுதல் ; பிசகுதல் ; சாதல் ; தப்புதல் ; குற்றம் செய்தல் ; தாண்டுதல் ; வாய்க்காமற்போதல் ; காணாமற்போதல் ; தோல்வியுறல் .
தவறைவாரி கப்பலின் இருப்புக்கருவிவகை .
தவன் தவசி ; காண்க : தவம் ; தலைவன் .
தவனகம் மருக்கொழுந்து .
தவனப்புளி மிளகாயும் உப்பும் உளுத்தம் பருப்பும் சேர்த்திடித்த புளி ; தாகத்தை நீக்கவல்ல புளி .
தவனம் வெப்பம் ; தாகம் ; ஆசை ; வருத்தம் ; மருக்கொழுந்து .
தவனன் சூரியன் ; அக்கினி .
தவனியம் பொன் .
தவாக்கினி வேள்வித்தீ ; காட்டுத்தீ .
தவாநிலை உறுதிநிலை .
தவாவினை மலை ; முத்தி .
தவாளித்தல் கால்வாய் முதலியன தோண்டுதல் .
தவாளிப்பு எழுதகக்குழி ; பார்வைக்கு மதிப்பாயிருக்கை .
தவிசணை கட்டில் .
தவிசம் கடல் ; வீடுபேறு .
தவிசு தடுக்கு ; பாய் ; பீடம் ; மெத்தை ; யானை முதலியவற்றின்மேலிடும் மெத்தை ; திராவகம் .
தவிட்டம்மை சின்னம்மை .
தவிட்டான் ஒரு மரவகை .
தவிட்டுக்கிளி ஒரு தத்துக்கிளிவகை .
தவிட்டுக்கொய்யா காண்க : தவிட்டான் .
தவிட்டுண்ணி சிறிய உண்ணிவகை .
தவிட்டுப்பழம் தவிட்டுக்கொய்யா .
தவிடு அரிசியினின்றும் கழியும் துகள் ; தானியத்தவிடு ; பொடி .
தவிடுபொடியாதல் பொடிப்பொடியாதல் ; நிலைகுலைதல் .
தவித்தல் இளைத்தல் ; வேட்கையெடுத்தல் ; இல்லாமைபற்றி வருந்துதல் .