சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தவிப்பு | வேட்கை ; வருந்துகை . |
| தவிர்ச்சி | இடையீடு ; தங்குகை . |
| தவிர்த்தல் | நீக்குதல் ; நிறுத்திவிடுதல் ; தடுத்தல் ; அடக்குதல் . |
| தவிர்த்துவினைசெயல் | பகைவர் எய்யும் அம்பினைத் தடுத்து அவர்மேல் அம்பு எய்யுஞ் செயல் . |
| தவிர்தல் | விலகுதல் ; தங்குதல் ; தணிதல் ; பிரிதல் ; நீக்குதல் ; ஒழிதல் ; இல்லாமற் போதல் . |
| தவிர | நீங்க . |
| தவில் | மேளவகை . |
| தவிவு | இடையீடு . |
| தவிழ்தல் | காண்க : தவிர்தல் . |
| தவுக்கார் | சுண்ணச்சாந்து ; எழுதக வளைவு ; மதிற்செங்கல்லின் இடைவெளி . |
| தவுசெலம் | முருங்கைமரம் . |
| தவுடு | குதிரைப்பாய்ச்சல் ; படையெடுப்பு ; அரிசி தீட்டியபின் வரும் துகள் ; தாடை . |
| தவுடை | தாடை . |
| தவுதல் | குன்றுதல் . |
| தவுரிதகம் | குதிரைநடையுள் ஒன்று . |
| தழங்கல் | ஆரவாரம் ; யாழ் நரம்போசை . |
| தழங்குதல் | முழங்குதல் ; ஒலித்தல் . |
| தழங்குரல் | ஒலிக்குமோசை . |
| தழம் | தயிலம் . |
| தழல் | தீ , நெருப்பு ; கார்த்திகைநாள் ; நஞ்சு ; காண்க : கொடிவேலி ; கிளியோட்டுங்கோல் ; கவண் . |
| தழல்தல் | அழலுதல் ; ஒளிவிடுதல் . |
| தழலுதல் | அழலுதல் ; ஒளிவிடுதல் . |
| தழலாடி | தீயோடு ஆடும் சிவன் . |
| தழலாடிவீதி | நெற்றி . |
| தழலி | நெருப்பு . |
| தழற்சி | அழலுதல் . |
| தழற்சொல் | நெருப்பைப்போன்ற சுடுசொல் ; தண்டனையைத் தோற்றுவிக்கும் சொல் . |
| தழற்பூமி | உவர்மண் . |
| தழனாள் | அக்கினியை அதிதேவதையாக உடைய கார்த்திகைநாள் . |
| தழாத்தொடர் | ஒரு சொல் அடுத்துவருஞ் சொல்லை நேரே தழுவாது அமையுந்தொடர் . |
| தழால் | தழுவுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் . |
| தழிச்சுதல் | தழுவுதல் ; புகுதல் . |
| தழிஞ்சி | தாக்குண்ட படைவீரரை முகமன் கூறியும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கோடலைக் கூறும் புறத்துறை ; தோற்றவர் மேல் ஆயுதஞ் செலுத்தாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை . |
| தழீஇந்தழீஇமெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| தழு | தழுவுகை . |
| தழுக்குதல் | செழிப்படைதல் . |
| தழுத்தல் | காண்க : தழுதழுத்தல் . |
| தழுதணை | கற்பாசி ; படர்தாமரை . |
| தழுதழுத்தல் | நாக்குழறுதல் ; நாத்தடுமாறிப் பேசல் . |
| தழுதாழை | வாதமடக்கிமரம் . |
| தழும்பிடுதல் | புண்ஆறி வடுவாதல் . |
| தழும்பு | வடு ; குறி ; குற்றம் ; சிதைவு . |
| தழும்புதல் | தழும்புண்டாதல் ; பழகியிருத்தல் . |
| தழுவணி | குரவைக்கூத்து . |
| தழுவணை | பக்கத்தில் அணைத்துக்கொள்ளும் பஞ்சணை ; திண்டு ; கடலட்டை . |
| தழுவல் | தழுவுதல் ; கையில் எடுக்கக்கூடிய நெல்லரித் தொகுதி . |
| தழுவாவட்டை | காண்க : கடலட்டை . |
| தழுவு | அணைப்பு ; இருகையிலும் அணைக்கும் அளவு . |
| தழுவுதல் | அணைத்தல் ; மேற்கொள்ளுதல் ; அன்பாய் நடத்துதல் ; நட்பாக்கிக்கொள்ளுதல் ; உள்ளடக்குதல் ; பூசுதல் ; பொருந்துதல் ; சூழ்தல் ; புணர்தல் . |
| தழுவுதொடர் | ஒரு சொல் மற்றொரு சொல்லை நேரே தழுவிநிற்கும் தொடர் . |
| தழூஉ | அணைப்பு ; மகளிராடும் குரவைக்கூத்து . |
| தழை | இலை ; தளிர் ; மயிற்றோகை ; பீலிக்குடை ; தழையாலான மகளிர் உடை ; ஒரு மாலைவகை ; காண்க : பச்சிலை ; தழைகை ; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு . |
| தழைக்கண்ணி | இலைமாலை . |
| தழைத்தல் | செழித்தல் ; பூரித்தல் ; மிகுதல் ; வளர்ச்சியடைதல் ; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேராத சீட்டுகளை இறக்குதல் . |
| தழைத்தானை | இலையாற் செய்யப்பட்ட மேலாடை . |
| தழைதல் | தளிர்த்தல் ; செழித்தல் ; தாழ்தல் . |
| தழைதாம்பு | தழையும் சிறுகொம்பும் . |
| தழைப்பு | செழிப்பு ; தளிர்த்தல் . |
| தழையணி | காண்க : தழையுடை . |
| தழையிடுவார் | பூவும் இலையும் கோயிலுக்குத் தந்து பணிசெய்வோர் . |
| தழையுடை | தழையாலான உடை . |
| தழைவு | தளிர்ப்பு ; குழை ; செழிப்பு ; வளமை ; மிகுதி . |
| தழைவுகொடுத்தல் | பலமுடைமையாதல் . |
| தள் | காண்க : தள்ளு . |
| தள்ளம்பாறுதல் | தள்ளாடுதல் ; அலைதல் ; அசைதல் ; தத்தளித்தல் ; தருக்கத்தில் தோல்வி அடைதல் ; பெருங்கலக்கத்தில் இருத்தல் . |
| தள்ளமாறுதல் | தள்ளாடுதல் ; அலைதல் ; அசைதல் ; தத்தளித்தல் ; தருக்கத்தில் தோல்வி அடைதல் ; பெருங்கலக்கத்தில் இருத்தல் . |
| தள்ளல் | பொய் . |
| தள்ளாட்டம் | அசைவு ; தடுமாற்றம் ; சோர்வு . |
| தள்ளாடுதல் | தடுமாறுதல் ; ஆடுதல் ; தத்தளித்தல் ; மனம் அலைதல் . |
| தள்ளாதகாலம் | கிழப்பருவம் . |
| தள்ளாதவன் | வலுவற்றவன் . |
| தள்ளாமை | தளர்ச்சி ; இயலாமை ; இல்லாமை . |
| தள்ளாவாரம் | சோம்பல் . |
| தள்ளிச்சி | உவர்மண் என்னும் பூநீறு . |
| தள்ளிப்போடுதல் | நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் . |
|
|
|