சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தள்ளிவிடுதல் | நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் . |
| தள்ளிவெட்டி | மதிற்பொறிவகை . |
| தள்ளிவைத்தல் | இடம்விட்டு வைத்தல் ; நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் ; விலக்கிவைத்தல் . |
| தள்ளு | அகற்றுகை ; கழிவு ; நீக்குகை ; கைவிடல் . |
| தள்ளுண்டவன் | விலக்கப்பட்டவன் . |
| தள்ளுண்ணல் | தள்ளப்படுதல் . |
| தள்ளுதல் | விலகுதல் ; குன்றுதல் ; மறதியால் சோர்தல் ; தடுமாறுதல் ; கழித்தல் ; புறம்பாக்குதல் ; ஏற்றுக்கொள்ள மறுத்தல் ; அமுக்குதல் ; வெட்டுதல் ; கொல்லுதல் ; மறத்தல் ; தூண்டுதல் ; தவறுதல் ; வலியுடைத்தாதல் ; வெளியேறுதல் ; முன்செல்லுமாறு தாக்குதல் . |
| தள்ளுபடி | தள்ளப்பட்டது ; கழிக்கப்பட்டது ; நீக்கப்பட்டது . |
| தள்ளுமட்டம் | யானையின் இளங்கன்று . |
| தள்ளுவண்டி | கையால் தள்ளிச்செலுத்தும் சிறுவண்டி . |
| தள்ளுறுதல் | தள்ளப்படுதல் ; வருந்துதல் . |
| தள்ளை | தாய் . |
| தளகர்த்தம் | படைத்தலைமை . |
| தளகர்த்தன் | படைத்தலைவன் . |
| தளசிங்கம் | பெருவீரன் . |
| தளதளத்தல் | பலமாதல் ; ஒளிர்தல் ; நெகிழ்தல் . |
| தளதளப்பு | பலம் ; வீக்கம் ; காந்தி . |
| தளதளெனல் | ஒளிவீசுதற் குறிப்பு ; பலமாதற் குறிப்பு ; இளகுதற்குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
| தளப்படி | மனவுலைவு . |
| தளப்பம் | மனவுலைவு ; ஒரு காதணிவகை ; காண்க : தாளிப்பனை . |
| தளப்பற்றுக்காரன் | ஓலைபிடித்தெழுதுவோன் . |
| தளப்பு | சோர்வு ; கேடு . |
| தளபதி | படைத்தலைவன் . |
| தளம் | கனம் ; வெண்சாந்து ; செஞ்சாந்து ; தளவரிசை ; உப்பரிகை ; தட்டு ; மேடை ; பூவிதழ் ; படை ; கூட்டம் ; சாணைபிடியாத கெம்பு ; சாடி ; அடிப்படை ; சுண்ணாம்பு . |
| தளம்பு | மதகு ; சேறுகுத்தி . |
| தளம்புதல் | ததும்புதல் ; சாய்ந்தாடுதல் ; மனமலைதல் ; பழக்கமுறுதல் ; முட்டுப்படுதல் . |
| தளமெடுத்தல் | படையெடுத்தல் ; போர் தொடங்குதல் . |
| தளர் | சோர்வு ; நெகிழ்ச்சி ; சோம்பல் ; வறுமை . |
| தளர்ச்சி | சோர்வு ; நெகிழ்ச்சி ; சோம்பல் ; வறுமை . |
| தளர்த்துதல் | வலுக்குறைத்தல் ; நெகிழ்த்தல் . |
| தளர்தல் | நெகிழ்தல் ; சோர்தல் ; வலுக்குறைதல் ; மனங்கலங்குதல் ; இறத்தல் ; உயிரொடுங்குதல் ; நுடங்குதல் ; சோம்புதல் ; தவறுதல் . |
| தளர்ந்துகொடுத்தல் | இணங்குதல் . |
| தளர்நடை | குழந்தைகள் தொடக்கத்தில் தடுமாறி நடக்கும் நடை . |
| தளர்வு | சோர்வு ; நெகிழ்கை ; தடுமாறுகை ; துன்பம் . |
| தளரவிடுதல் | நெகிழவிடுதல் . |
| தளருடை | நெகிழ்ந்த உடை . |
| தளவட்டம் | பூவிதழ்ச்சுற்று . |
| தளவம் | முல்லைக்கொடி ; காண்க : செம்முல்லை . |
| தளவரிசை | கற்பரப்பு ; எழுதகம் . |
| தளவாடம் | வேலை செய்வதற்கு வேண்டிய கருவிகள் ; தட்டுமுட்டு . |
| தளவாய் | படைத்தலைவன் . |
| தளவான் | படைத்தலைவன் . |
| தளவு | யானையின் வாய் ; செம்முல்லை ; முல்லை ; ஊசிமல்லிகை . |
| தளா | செம்முல்லை ; முல்லை ; ஊசிமல்லிகை . |
| தளி | கோயில் ; இடம் ; நீர்த்துளி ; தலைப்பெயல் மழை ; மேகம் ; குளிர் ; விளக்குத்தண்டு ; விளக்குத்தாழி . |
| தளிகை | உண்கலம் ; சமையல் ; இறைவனுக்குப் படைத்த பொருள் ; கூழ்க்கட்டி . |
| தளிச்சேரி | தேவதாசிகள் வசிக்குந் தெரு . |
| தளிச்சேரிப்பெண்டுகள் | தேவதாசிகள் . |
| தளித்தல் | துளித்தல் ; பூசுதல் ; தெளித்தல் . |
| தளிதல் | தெளிதல் . |
| தளிப்பெண்டுகள் | காண்க : தளிச்சேரிப்பெண்டுகள் . |
| தளிமம் | அழகு ; மெத்தை ; படுக்கை ; திண்ணை ; வாள் ; வீடுகட்டும் இடம் . |
| தளியிலார் | தேவரடியார் . |
| தளிர் | முளைக்கும் பருவத்து இலை ; கொழுந்து . |
| தளிர்தல் | துளிர்த்தல் ; தழைத்தல் ; செழித்தல் ; மகிழ்தல் . |
| தளிர்ப்பு | துளிர்க்கை ; மனவெழுச்சி . |
| தளிவடகம் | இலைவடகம் . |
| தளிவம் | தகடு . |
| தளுக்கு | மினுக்கு ; பகட்டு ; மூக்கணி ; தந்திரம் ; அப்பிரகம் ; அப்பிரகத் திலகப்பொட்டு . |
| தளுக்குணி | சுரணையற்றவன் ; ஏமாற்றுபவன் . |
| தளுக்குதல் | பூசுதல் ; துலக்குதல் ; ஒளிர்தல் . |
| தளுகன் | பொய்யன் . |
| தளுகு | புளுகு . |
| தளும்புதல் | ததும்புதல் , மேலெழுந்து வழிதல் ; மனமலைதல் . |
| தளுவம் | கைத்துண்டு . |
| தளை | கட்டு ; கயிறு ; விலங்கு ; பாசம் ; மலர் முறுக்கு ; சிறை ; தொடர்பு ; காற்சிலம்பு ; ஆண்கள் மயிர் ; வயல் ; வரம்பு ; யாப்புறுப்பு எட்டனுள் ஒன்று . |
| தளை | (வி) தகை ; தடைசெய் ; பிணி . |
| தளைத்தல் | கட்டுதல் ; கொதித்தல் ; அடக்குதல் . |
| தளைதட்டல் | வேற்றுத் தளை விரவியதனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளை மாறுபடுதல் . |
| தளைதல் | பிணித்தல் . |
| தளைந்துவிடுதல் | விலங்கின் முன்கால்களைக் கட்டி மேய்ச்சலுக்கு விடுதல் . |
| தளைநார் | பனையேறிகள் காலில் மாட்டிக் கொள்ளுங் கயிறு . |
| தளைப்படுதல் | சிறையாதல் ; கட்டுப்படுதல் . |
| தளைபடுதல் | சிறையாதல் ; கட்டுப்படுதல் . |
| தளைபோடுதல் | குறுக்காக வரப்பிடுதல் . |
|
|
|