சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தளையம் | விலங்கு . |
| தளையல் | கட்டுகை ; மறியற்படுத்துகை . |
| தளையவிழ்தல் | பந்தம் நீங்குதல் ; மலர் முறுக்கவிழ்தல் . |
| தளையாளர் | காலில் தளையிடப்பட்டவர் . |
| தளையிடுதல் | பிணித்தல் . |
| தளைவார் | விலங்கின் கால்களைக் கட்டும் வார் ; காண்க : தளைநார் ; தளையிடுபவர் . |
| தற்கரன் | கள்வன் . |
| தற்கரிசனம் | தன்னலம் . |
| தற்காத்தல் | தன்னைத்தான் காத்தல் ; பாதுகாத்தல் . |
| தற்காப்பு | தன்னைப் பாதுகாத்துக்கொள்கை . |
| தற்காலம் | நிகழ்காலம் ; குறித்த காலம் . |
| தற்காவல் | காண்க : தற்காப்பு ; கற்புநிலை . |
| தற்கிழமை | பிரியாதிருக்கும் தொடர்பு . |
| தற்கு | செருக்கு . |
| தற்குணம் | சிறப்புப்பண்பு ; ஒரு பொருளின் குணத்தை மற்றொரு பொருள் பற்றுதலைக் கூறும் அணி . |
| தற்குறி | கல்வியறிவில்லாதவர் கையெழுத்தாக இடும் கீறல் ; எழுதப்படிக்கத் தெரியாதவன் . |
| தற்குறிப்பு | தானாய் நியமிப்பது ; எழுதத் தெரியாதவன் கையெழுத்தாக இடும் கீறல் ; காண்க : தற்குறிப்பேற்றம் . |
| தற்குறிப்பேற்றம் | பொருளின் இயல்பையொழித்து வேறு ஒரு பொருளை ஏற்றிச் சொல்லும் அணி . |
| தற்குறைச்சல் | குறைவு ; தேய்வு . |
| தற்கெலம் | வறுமை . |
| தற்கேடர் | அறியாது தமக்கே கேடு விளைவிப்பவர் . |
| தற்கொண்டாண் | கணவன் . |
| தற்கொலை | தானே தன்னுயிரை மாய்த்தல் . |
| தற்கோலம் | தாம்பூலத்துடன் உட்கொள்ளும் வால்மிளகு . |
| தற்சங்கை | தன்னிடத்துள்ள பற்று . |
| தற்சணம் | உடனே . |
| தற்சமம் | ஒலிமாறுபாடு இன்றித் தமிழில் வழங்கும் வடசொல் , ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது . |
| தற்சமயம் | குறித்த வேளை ; உற்ற வேளை ; இப்பொழுது . |
| தற்சனி | சுட்டுவிரல் . |
| தற்சாட்சி | பரமாத்துமா ; மனச்சாட்சி . |
| தற்சிவம் | முதற்கடவுள் . |
| தற்சுட்டு | தன்னை சுட்டுகை . |
| தற்செய்கை | தன்னைச் செப்பமுடையவனாக்குகை ; தனது செயல் . |
| தற்செயல் | தானே இயலுதல் ; பலித்தல் ; தன்னைப் பெருக்குதல் . |
| தற்செயலாய் | எதிர்பாராமல் . |
| தற்செருக்கு | அகங்காரம் . |
| தற்செல்வம் | வலிமை ; சொந்தப் பொருள் . |
| தற்பகன் | மன்மதன் . |
| தற்பகீடம் | படுக்கையில் பற்றுவதான மூட்டுப் பூச்சி . |
| தற்பணம் | காண்க : தர்ப்பணம் ; முதுகெலும்பு ; கண்ணாடி ; யானைமுதுகு . |
| தற்பதம் | தத் என்னும் சொல் ; இறையியல் . |
| தற்பம் | அகந்தை ; பாவம் ; வஞ்சனை ; துயிலிடம் ; மெத்தை ; மனைவி ; மேனிலை ; கத்தூரி . |
| தற்பரம் | மேம்பட்டது ; பரம்பொருள் . |
| தற்பரன் | பரம்பொருள் . |
| தற்பரை | உமாதேவி ; ஒரு விநாடியில் அறுபதில் ஒரு பகுதி ; ஒரு மாத்திரையில் முப்பதில் ஒன்று ; ஆன்மா தன்னைப் பதியாகக் கருதும் அறிவு . |
| தற்பலம் | வெள்ளாம்பல் . |
| தற்பவம் | தமிழுக்கேற்பத் திரிந்து வழங்கும் வடமொழி ; அணிவகை . |
| தற்பாடி | காண்க : வானம்பாடி . |
| தற்பின் | தம்பி . |
| தற்பு | உள்ள நிலைமை ; செருக்கு . |
| தற்புகழ்ச்சி | தன்னைத்தான் புகழ்ந்து கொள்கை . |
| தற்புருடம் | சிவன் ஐம்முகத்துள் கிழக்கு நோக்கியிருப்பது . |
| தற்போதம் | தன்னையும் கடவுளையும் அறியும் அறிவு ; இயற்கையாகவுள்ள முற்றுணர்வு ; ஆணவம் ; தன்னினைவு . |
| தற்றெரிசனிகள் | ஆன்ம தரிசனம் செய்த பெரியார் . |
| தறடிகம் | மாதுளை . |
| தறதறத்தல் | தறதற என்று ஒலித்தல் . |
| தறதறெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| தறி | வெட்டுகை ; நடுதறி ; தூண் ; முளைக்கோல் ; நெசவுப் பொறி ; பறைக் குறுந்தடி ; கோடரி ; பொத்தான் கொக்கி . |
| தறிக்கால் | கொடிக்காற் கால்வாய் ; சோதிடத்தில் பலன் சொல்ல உதவும் உறுப்பு . |
| தறிக்கிடங்கு | நெசவுத் தறியின் கீழுள்ள பள்ளம் . |
| தறிகிடங்கு | கரும்பின் ஆலைக்கிடங்கு . |
| தறிகுற்றி | வயலுக்கு உரமாகவிடும் தழைகளைத் தறிக்க நடும் கருவி . |
| தறிகை | வெட்டப்படுகை ; கட்டுத்தறி ; கோடரி ; உளி . |
| தறிச்சன் | எருக்கு . |
| தறித்தல் | வெட்டுதல் ; கட்டவிழ்த்தல் ; கெடுத்தல் ; பிரித்தல் ; தானியம் புடைத்தல் . |
| தறிதல் | அறுபடுதல் . |
| தறிதலை | காண்க : தறுதலை . |
| தறிபோடுதல் | நெசவுத்தறியில் நெய்தல் . |
| தறிமரம் | நெசவுத்தறியில் நெய்த ஆடையைச் சுருட்டும் மரம் . |
| தறிவலை | நடுதறியுடையதாய் மான் பிடிக்க உதவும் வலை . |
| தறுக்கணித்தல் | பழம் கன்றிப்போதல் ; புண் காய்த்துப்போதல் ; உணவுப்பொருள் இறுகுதல் ; நிறைத்தல் . |
| தறுகட்பம் | அஞ்சாமையாகிய வீரம் . |
| தறுகண் | கொடுமை ; அஞ்சாமையாகிய வீரம் ; கொல்லுகை . |
| தறுகண்ணண் | வன்கண்மையுள்ளவன் ; வீரன் . |
| தறுகண்மை | காண்க : தறுகண் . |
|
|
|