தன்னியாசி முதல் - தனித்தாள் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தன்னியாசி ஒரு பண்வகை .
தன்னிலை இயல்புநிலை ; சமனாய் நிற்கை .
தன்னினமுடித்தல் ஒன்றைச் சொல்லுமிடத்து விரிவுறாமைவேண்டி அதற்கினமாகிய மற்றொன்றையும் அதனோடு கூட்டி முடித்தலாகிய உத்தி .
தன்னினி வேங்கைமரம் .
தன்னீங்கள் எதேச்சை ; தன்னுரிமையாக்கல் ; தொடர்பின்மை .
தன்னுண்மை பரப்பிரமத்தின் உண்மை அறிவு இன்பமாய இயல்பு ; சிறப்பியல்பு .
தன்னுணர்ச்சி தன்னறிவு ; ஞாபகம் .
தன்னுதல் சிறிதுசிறிதாக எடுத்தல் ; தோணியை மெல்லத் தள்ளுதல் ; பொருந்துதல் .
தன்னுதோணி சிறிய படகு .
தன்னூட்டி தாய்ப்பாலைத் தடையின்றி உண்டு வளர்ந்த சேங்கன்று .
தன்னேத்திரம் காண்க : கோமேதகம் .
தன்னேற்றம் தன்னைச் சார்ந்த இனத்தார் ; சிறப்பாய் அமைந்த பெருமை .
தன்னை தலைவன் ; தமையன் ; தமக்கை ; தாய் .
தன்னைக்கட்டுதல் போதியதாதல் ; மந்திரத்தால் தன்னைக் காத்தல் ; வசப்படுத்துதல் ; சம்மதித்தல் ; குறை நீக்குதல் ; செட்டாக நடத்துதல் ; நிருவகித்தல் .
தன்னையறிதல் தனது உண்மைத் தன்மையை உணர்தல் ; பூப்படைதல் .
தன்னைவேட்டல் தலைவனுடன் வீரன் தன்னுயிர் மாய்த்தலைக் கூறும் புறத்துறை ; இறந்த கணவனுடலைப் போர்க்களத்தில் அவன் மனைவி தேடுதலைக் கூறும் புறத்துறை .
தன்னொழுக்கம் தன்னிலைக்குத் தக்க நடை .
தன்னோர் தன்னைச் சார்ந்தவர் .
தனக்கட்டு பெருஞ்செல்வம் .
தனகரன் கள்வன் ; குபேரன் ; சுதந்தரன் .
தனகு மனக்களிப்பு .
தனகுதல் சரசஞ்செய்தல் ; உள்ளங்களித்தல் ; சண்டைசெய்தல் .
தனசாரம் காண்க : தன்னியம் .
தனஞ்சயன் அருச்சுனன் ; உடலைவிட்டு உயிர் நீங்கினும் தான் நீங்காது சிறிது நேரம் நின்று வெளியேறும் வளி ; நெருப்பு .
தனஞ்செயகாரம் படிக்காரம் .
தனத்தோர் பொருள் ஈட்டுதற்குரிய வணிகர் .
தனதன் குபேரன் .
தனதாள் சொந்த வேலைக்காரன் ; உடந்தையாயிருக்கும் ஆள் .
தனதானியம் பொன்னும் விளைபொருள்களும் .
தனது சொந்தம் ; உரிமை .
தனதுபண்ணுதல் தன்வயப்படுத்துதல் .
தனந்தயன் பாலுண்ணும் குழந்தை .
தனபதி குபேரன் .
தனபதித்துவம் செல்வநிலை ; கொடைக்குணம் .
தனபாரம் கொங்கைச்சுமை .
தனம் செல்வம் ; பொன் ; பொருள் ; முலை ; தன்மை ; உத்திரம் ; பசுவின்கன்று ; வருத்தம் ; கூட்டற்கணக்கு ; பண்புணர்த்தற்குப் பெயரின் பின்வரும் இடைச்சொல் ; சாதகத்தில் சென்மலக்கினத்திலிருந்து செல்வத்தைக் குறிக்கும் இடமான இரண்டாம் வீடு .
தனமதம் பொருட்செருக்கு .
தனயன் மகன் .
தனயை மகள் .
தனரேகை பொருள் நிலையைக் காட்டும் கைக்கோடு .
தனலக்குமி செல்வமாகிய திரு .
தனவந்தன் செல்வன் .
தனவனா ஆச்சாமரம் .
தனவான் செல்வன் .
தனவை சிறுகாஞ்சொறி .
தனவைசியர் மூவைசியருள் பொன்வணிகர் ; நாட்டுக்கோட்டைச் செட்டிமார் .
தனவையாதம் காண்க : தனவை .
தனன் வணிகர் பட்டப்பெயர் .
தனாசி ஒரு பண்வகை .
தனாட்டி செல்வமுடையவள் .
தனாட்டியன் செல்வன் .
தனாதிபதி குபேரன் .
தனாதிபதின் குபேரன் .
தனாது தன்னுடையது .
தனி ஒற்றை ; தனிமை ; ஒப்பின்மை ; உரிமை ; கலப்பின்மை ; உதவியின்மை ; சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை ; தேர் நெம்புந் தடி .
தனிக்காட்டுராசா காட்டுத்தலைவன் ; கட்டுக்கு அடங்காதவன் .
தனிக்குடி தனியாகப் பிரிந்துவாழுங் குடும்பம் .
தனிக்குடித்தனம் குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்து வாழ்ந்துவருகை ; மனைவியுடன் தனி வீட்டில் வாழ்க்கை நடத்துகை .
தனிக்குடை தனியரசாட்சி .
தனிக்கோல் தனியரசாட்சி .
தனிகம் கொத்துமல்லி .
தனிகன் செல்வன் .
தனிகை இளம்பெண் ; கற்புடையவள் .
தனிச்சி கணவனைப் பிரிந்து தனித்திருப்பவள் .
தனிச்சித்தம் அமைதியான மனம் .
தனிச்செய்கை பிறருடன் சேராது தானே செய்யும் வேளாண்மை .
தனிச்சொல் கலிப்பா முதலியவற்றில் ஆங்கு என்பதுபோலத் தனித்து வருஞ்சொல் ; தனிச்சீர் .
தனிசர் கடன் வாங்கினோர் , கடன்காரராகிய குறும்பரசர் .
தனிசு கடன் .
தனிட்டை அவிட்டநாள் ; அவிட்டம் முதலிய ஐந்து நட்சத்திரங்கள் .
தனித்தகுடி அநாதக் குடும்பம் .
தனித்தல் ஒன்றியாதல் ; நிகரற்றிருத்தல் ; உதவியற்றிருத்தல் .
தனித்தன்மைப்பன்மை தன்னொருவனையே குறிக்கும் தன்மைப்பன்மை .
தனித்தனி ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய் .
தனித்தாள் ஒன்றியாள் ; உதவியற்ற ஆள் ; ஒற்றைக் காகிதம் .