தாட்டிகம் முதல் - தாதுகந்தம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தாட்டிகம் வலிமை ; இறுமாப்பு .
தாட்டிகன் பலவான் ; தீங்குபுரிவோன் .
தாட்டுதல் காலங்கடத்தல் ; நீக்குதல் ; மறுத்தல் .
தாட்டுப்பூட்டெனல் வெகுளிக்குறிப்பு ; பகட்டுக்குறிப்பு .
தாட்டுப்போட்டு குழப்பம் .
தாடடோட்டம் புரட்டு ; குழப்பம் ; தாமதம் .
தாட்டோட்டு புரட்டு ; குழப்பம் ; தாமதம் .
தாட்படை கோழி .
தாட்பாள் கதவடைக்குந் தாழ் ; எலிப்பொறியின் தாள் .
தாடகம் காண்க : நீர்முள்ளி ; வீழி .
தாடங்கம் பெண்கள் காதில் அணியும் தோடு .
தாடபத்திரம் ஓலையாலான காதணி .
தாடம் அடிக்கை .
தாடனம் தட்டுதல் ; அடித்தல் ; வலக்கை இளம் பிறையாகவும் இடக்கை பதாகையாகவும் மார்பிற்கு நேரே எட்டுவிரல் உயர்த்திப் பிடிக்கும் அபிநயக்கைவகை .
தாடாளன் மேன்மையுள்ளவன் ; பெருமுயற்சியுடையவன் .
தாடாற்றி கடுமையைத் தணித்துச் சமநிலைக்குக் கொண்டுவருகை .
தாடி மோவாய் ; மோவாய் மயிர் ; சேவற்கழுத்தில் தொங்கும் சதை ; பசு முதலியவற்றின் அலைதாடி ; வாளின் பிடி ; தட்டுகை .
தாடித்தல் அடித்தல் ; கொட்டுதல் .
தாடிதபதம் வலக்கால் படத்தின் நுனியை இடக்கால் பக்கத்தில் ஊன்றி நிற்கும் நிலை .
தாடிமஞ்சம் சத்திக்கொடி .
தாடிமப்பிரியம் மாதுளம்பழத்தை விரும்பும் கிளி .
தாடிமம் சிற்றேலம் ; பூமாதுளை .
தாடிரி காண்க : கண்டங்கத்திரி .
தாடு வலிமை ; தலைமை .
தாடை கன்னம் ; தாடையெலும்பு ; பெரும்பல் ; விருப்பம் ; மோவாய் .
தாடைஎலும்பு கன்னத்தின் கீழெலும்பு .
தாண்டகச்சந்தம் தாண்டக அடி மிக்குச் சந்த அடி குறைந்துவரும் செய்யுள் ; சந்த அடியும் தாண்டக அடியும் கலந்து ஓசையுடன் அமையும் பாட்டு .
தாண்டகம் செய்யுள்வகை ; இருபத்தாறெழுத்தின் மிக்க எழுத்தான் அடிக்கொண்டுவரும் பா ; ஒரு நூல்வகை .
தாண்டகவடி இருபத்தாறுக்கு மேற்பட்ட எழுத்துகளால் இயன்ற அடி .
தாண்டவம் தாண்டுதல் ; செலுத்தல் ; கூத்துவகை .
தாண்டவமூர்த்தி நடனமாடும் மூர்த்தியாகிய நடராசர் .
தாண்டவராயன் நடனமாடும் மூர்த்தியாகிய நடராசர் .
தாண்டவன் நடனமாடும் மூர்த்தியாகிய நடராசர் .
தாண்டி நடனசாத்திரம் .
தாண்டிமண்டலம்போடுதல் கோபாவேசத்தோடு மேற்பாய்தல் .
தாண்டு குதி ; வெற்றி ; அகங்கரிப்பு .
தாண்டுகாலி கண்டபடி திரிபவன் (ள்) .
தாண்டுகாற்போடுதல் ஒரு வேலையும் செய்யாமல் திரிதல் ; ஆற்றலுக்கு மீறிய வேலையை மேற்கொள்ளுதல் ; நூலில் இங்கொரு பக்கம் அங்கொரு பக்கமாகப் படித்தல் .
தாண்டுதல் மிதமிஞ்சிப் பேசுதல் ; குதித்தல் ; கடத்தல் ; செலுத்தல் ; மேற்படுதல் ; செருக்கடைதல் .
தாண்முளை மகன் .
தாணா குதிரைக்குக் கொடுக்கும் அவித்து எடுத்த கொள்ளு ; காவல்நிலையம் ; சிற்றுணவு .
தாணாக்காரன் காவலன் .
தாணி தான்றிமரம் ; பூண்டுவகை .
தாணித்தல் பதித்தல் ; கெட்டிப்படுத்துதல் ; துப்பாக்கியில் மருந்திடுதல் ; உறுப்படுத்துதல் ; குற்றமேற்றல் ; விரைவில் கடைதல் ; இழையோட்டுதல் .
தாணு சிவன் ; குற்றி ; தூண் ; நிலைபேறு ; மலை ; பற்றுக்கோடு ; செவ்வழி யாழ்த்திறவகை ; தாவரம் .
தாணையம் கோட்டைக்குள்ளிருக்கும் படை ; பாளையம் ; மந்தை .
தாணையம்போடுதல் பாளையம் இறங்குதல் ; உறவினர் பலர் ஒரு வீட்டில் பலநாள் கூடியிருத்தல் .
தாத்தா பாட்டன் ; கிழவன் .
தாத்தாரி காண்க : நெல்லி .
தாத்தி ஆத்திமரம் .
தாத்திரம் கோடரி ; கூன்வாள் .
தாத்திரி தாய் ; பூமி ; நெல்லிமரம் ; ஆடு தின்னாப்பாளை .
தாத்திரியம் வறுமை .
தாத்திருவாதம் கபடம் ; பொய் .
தாத்துதல் தாற்றுதல் ; கொழித்தல் ; இழிந்ததை மேலாக மாற்றுதல் ; ஒளித்துவைத்தல் ; செலவழித்தல் .
தாத்துரு பன்னிரண்டு ஆதித்தருள் ஒருவர் .
தாத்துவிகம் தத்துவத் தொடர்புடையுது .
தாதக்கூத்து தாசரிகள் ஆடும் நடனம் .
தாதகி ஆத்திமரம் ; ஒரு தீவம் ; பேய்க் கொம்மட்டி .
தாதச்சி தவப்பெண் .
தாதமார்க்கம் காண்க : தாசநெறி .
தாதரி ஆடுதின்னாப்பாளை .
தாதலம் நோய் ; பாகம் ; மனத்திட்பம் .
தாதன் தாசன் , அடியவன் ; தொண்டன் ; வைணவப் பரதேசி ; தந்தை ; ஈகையாளன் .
தாதா தந்தை ; தாத்தா ; பெரியோன் ; கொடையாளி ; பிரமன் ; காண்க : தாத்துரு .
தாதாத்மியம் காண்க : தாதான்மியம் .
தாதான்மியசக்தி சிவபெருமானை விடுத்து ஒரு போதும் நீங்காத ஐவகை வினையுள் ஒரு வினைவகை .
தாதான்மியம் ஒன்றுபட்டிருக்கை .
தாதானம் கரிக்குருவி .
தாதி வேலைக்காரி ; செவிலித்தாய் ; தோழி ; விலைமகள் ; பரணிநாள் ; வாதி .
தாதிற்றூள் பூந்தாது , மகரந்தப்பொடி .
தாதின்றூள் பூந்தாது , மகரந்தப்பொடி .
தாது கனிப்பொருள் ; உலோகம் ; காவிக்கல் ; பஞ்சபூதம் ; நாடி ; பூந்தாது ; தேன் ; தாது மாதுளமரம் ; கேள்வி ; உடலின் எழுவகைத் தாதுக்கள் ; சுக்கிலம் ; வாதபித்த சிலேட்டுமங்கள் ; நீறு ; பூவின் இதழ் ; மலர் ; அறுபதாண்டுக் கணக்கில் பத்தாம் ஆண்டு ; அடிமை ; வினைப்பகுதி .
தாதுகட்டுதல் இந்திரியம் அடக்குதல் .
தாதுகந்தம் கந்தகம் .