தாழை முதல் - தானவிச்சை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தாழை செடிவகை ; தென்னைமரம் ; தென்னம்பாளை .
தாள் கால் ; மரம் முதலியவற்றின் அடிப்பகுதி ; பூ முதலியவற்றின் காம்பு ; வைக்கோல் ; முயற்சி ; தாழ்ப்பாள் ; படி ; திறவுகோல் ; ஒற்றைக் காகிதம் ; சட்டையின் கயிறு ; விளக்குத்தண்டு ; விற்குதை ; ஆதி ; கடையாணி ; வால்மீன் ; சிறப்பு ; கொய்யாக்கட்டை ; தாடை ; கண்டம் .
தாளக்கட்டு இசை ஒத்து அமைகை .
தாளக்கம் அரிதாரம் .
தாளகம் அரிதாரம் .
தாளஞ்சொல்லுதல் பாட்டுக்கு ஏற்பச் சுரம் பாடுதல் ; கூத்தில் சுரக்கட்டுப் பாடுதல் .
தாளடி கதிர்த்தாள் ; கதிரை இரண்டாம் முறை அடிக்கை ; முதல் விளைவு எடுத்ததும் நடக்கும் வேளான்மை ; இருபூநிலம் ; சாகுபடிக்காலம் .
தாளடிநடவு முதற்போகம் அறுவடையானபின் வயலை உழுது நடுகை .
தாளப்பிரமாணம் இசைத் தாளவறுதி ; காண்க : தாளப்பிராணம் .
தாளப்பிராணம் காலம் ; மார்க்கம் ; கிரியை , அங்கம் ; கிரகம் , சாதி , களை , இலயை , யதி , பிரத்தாரம் என்னும் தாளத்துக்குரிய உறுப்புகள் .
தாளம் பாட்டின் காலத்தை அறுதியிட்டு அளக்கும் அளவு ; கைத்தாளக் கருவி ; பனைமரம் ; கூந்தற்பனைவகை ; அரிதாரம் ; தாளத்திற்கு இசையக் கூறும் அசைகள் ; காண்க : தாளிசபத்திரி .
தாளம்போடுதல் தாளங் கொட்டுதல் ; வறுமையால் துன்புறுதல் ; விடாது கெஞ்சுதல் .
தாளம்மை பொன்னுக்குவீங்கி .
தாளமானம் தாள அளவு .
தாளவொற்று சதி ; தாளவுறுப்புகளைத் தவறாது கணக்கிட்டுப் போடும் தாளகதி .
தாளன் பயனற்றவன் .
தாளாண்மை ஊக்கம் ; விடாமுயற்சி .
தாளாளன் ஊக்கமுள்ளவன் , முயற்சியுடையவன் .
தாளி பனைமரம் ; கூந்தற்பனைவகை ; மருந்துச்செடிவகை ; ஒரு கொடிவகை ; அனுடநாள் ; மரவகை ; மண்ணால் செய்த விளக்கின் அகல் .
தாளிக்கம் தழைப்பு ; திடன் .
தாளிக்கை கறிக்குக் கடுகு முதலியவற்றை மணமுண்டாகும்படி யிடுதல் ; உயர்ந்த விலை .
தாளிகை இதழ் ; செய்தித்தாள் , பத்திரிகை .
தாளிசபத்திரி ஒரு மருந்துச்சரக்கு , பெரிய இலவங்கப்பட்டை மரம் ; சிறுமரவகை .
தாளிசம் ஒரு செடிவகை .
தாளித்தல் கடுகு முதலியன இட்டு நெய்யில் வறுத்துக் குழம்பு முதலியவற்றில் சேர்த்தல் ; மருந்தைச் சுவைப்படுத்துதல் ; புனைந்துரைத்தல் ; சுண்ணாம்பைக் குழைத்தல் ; கண்டித்தல் ; செருக்குக்கொள்ளுதல் ; தன் நிலைமைக்கு மீறிப் பகட்டமாக வாழ்தல் .
தாளித்துக்கொட்டுதல் கடுகு முதலியவற்றை நெய்யில் வறுத்துக் குழம்பு முதவியவற்றிற்கு இடுதல் .
தாளிதம் கறி , குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக்கக் கடுகு முதலியவற்றைப் பொரித்துக் கொட்டுதல் .
தாளிப்பனை கூந்தற்பனைவகை .
தாளிப்பு காண்க : தாளிதம் ; மதர்ப்பு ; தற்புகழ்ச்சி .
தாளிம்பம் நுதலணிவகை .
தாளியடித்தல் நெருக்கமாய் முளைத்த பயிர்களை விலக்குவதற்காகவும் , எளிதில் களையெடுப்பதற்காகவும் பல முனைகளையுடைய பலகையால் உழுது பண்படுத்துதல் .
தாளுதல் இயலுதல் , பொறுத்தல் ; விலைபெறுதல் .
தாளுருவி ஒரு காதணிவகை .
தாற்பரியம் பொருள் ; விவரம் ; நோக்கம் ; ஆவல் ; பாராட்டு .
தாற்றுக்கோல் இரும்பு முள்ளையுடைய கோல் ; அங்குசம் .
தாற்றுதல் கொழித்தல் ; தரித்தல் .
தாற்றுப்பூ கொத்துப்பூ .
தாறு வாழை முதலியவற்றின் குலை ; பின்புறக்கச்சக்கட்டு ; இரேகை ; வரையில் ; உண்டை நூல் சுற்றும் கருவி ; முட்கோல் : மாடோட்டும் கோலிலுள்ள முள் ; அங்குசம் ; விற்குதை ; கீல் எண்ணெய் .
தாறுக்கண்டு உண்டை நூல் கண்டு ; தறிநாடா .
தாறுகன்னி வெள்ளைக் காக்கணங்கொடி .
தாறுதாறாய்க்கிழித்தல் சிறு துண்டுகளாகக் கிழித்தல் .
தாறுபாய்ச்சிக்கட்டுதல் மூலக்கச்சம் கட்டுதல் .
தாறுமாறாய்ப் பேசுதல் முன்பின் மாறுபடப்பேசுதல் ; பிதற்றுதல் ; வைதல் .
தாறுமாறு ஒழுங்கின்மை ; குழப்பம் ; எதிரிடை ; முறையின்மை ; மரியாதைக்குறைவு .
தான் படர்க்கை ஒருமைப் பெயர் ; தேற்றச்சொல் ; அசைச்சொல் ; முழுப் புடைவை ; குழம்பில் போடப்படும் காய்கறித்துண்டம் ; 'அதுவின்றி இஃது ஒன்று' என்று பொருள் படுவதோர் இடைச்சொல் .
தான்குறியிடுதல் உலகத்து வழக்கமின்றித் தானே ஒரு பெயரிட்டு ஆளுகையாகிய உத்தி .
தான்மிகன் அறச்சிந்தையாளன் .
தான்றி தான்றிமரம் ; மருதோன்றி ; திரிபலையுள் ஒன்று ; எல்லை .
தான்றோன்றி தானாகத் தோன்றியது ; சுதந்தரன் ; கடவுள் .
தானக்கணக்கு கோயில் உத்தியோகங்களுள் ஒன்று .
தானக்காரர் கோயிற் சொத்துகளை மேற்பார்வையிடுபவர் .
தானக்கை தகுந்த இடம் ; உடம்பின் உயிர் நிலைப் பகுதி .
தானகம் ஒரு கூத்துவகை ; பண்ணினை விவரித்தல் .
தானசாசனம் தானம் கொடுத்தற்குரிய பத்திரம் .
தானசீலம் கொடைக்குணம் .
தானசீலன் ஈகையாளன் .
தானசூரன் காண்க : தானவீரன் .
தானத்தார் கோயில் அதிகாரிகள் .
தானத்தான் சிவாலயத்தில் பூசை செய்யும் குருக்கள் ; பரம்பரையாக வந்த தலைவன் .
தானதருமம் ஈகை .
தானநிலை இசைக் கூறுபாடு .
தானப்பிரமாணம் காண்க : தானசாசனம் .
தானப்பெருக்கம் பத்து , நூறு , ஆயிரம் முதலிய எண்களால் பெருக்குகை ; மனக்கோட்டை கட்டுகை .
தானப்பொருத்தம் நூலைத் தொடங்கும் செய்யுளிலுள்ள முதன்மொழிப் பொருத்தம் .
தானபத்திரம் காண்க : தானசாசனம் .
தானபத்திரிகை காண்க : தானசாசனம் .
தானம் இடம் ; இருப்பிடம் ; பதவி ; கோயில் ; இருக்கை ; சக்தி ; துறக்கம் ; செய்யுட் பொருத்தத்தில் வரும் நிலைகள் ; எழுத்துப் பிறக்குமிடம் ; எண்ணின் தானம் ; நன்கொடை ; யானை மதம் ; நால்வகை உபாயத்துள் ஒன்றாகிய கொடை ; குளித்தல் ; இசைச்சுரம் ; சாதக சக்கரத்திலுள்ள வீடு ; ஆற்றலில் சமமாயிருக்கை ; இல்லறம் ; மகரவாழை .
தானம்பாடுதல் ஒரு பண்ணினைச் சுரமுறையால் விவரித்துப் பாடுதல் .
தானாமானம் இருக்கும் பதவியால் ஏற்படும் பொருமை .
தானவண்ணம் ஓர் இசைப்பாட்டுவகை .
தானவர் தனு என்பவளின் வழிவந்த அசுரர் ; வித்தியாதரர் .
தானவள் அசுரப்பெண் .
தானவன் சந்திரன் ; அசுரன் .
தானவாரி ஆசுரர்களுக்குப் பகைவனான திருமால் ; இந்திரன் .
தானவிச்சை வித்தையின் துறைகள் .