சொல்
|
அருஞ்சொற்பொருள் |
திங்ஙு | வினைமுற்று விகுதிகள் . |
திசாதிசை | வேறுபட்ட திசைகள் . |
திசாமுகம் | திக்கு . |
திசாயம் | குங்கிலியம் . |
திசாலம் | பொழுது . |
திசி | திசை . |
திசிலன் | இராக்கதன் ; சந்திரன் . |
திசை | திக்கு ; கோள் ஆட்சிக்காலம் ; நற்பேற்றுக்காலம் ; திரி ; நிலைமை ; அதிகாரத்துக்குட்பட்ட இடம் ; ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு . |
திசைக்கல் | எல்லைக்கல் . |
திசைகட்டுதல் | காண்க : திக்குக்காட்டுதல் . |
திசைகாவல் | நாட்டின் அமைதியைக் காப்போன் ; திசைகாவல் வரி . |
திசைச்சொல் | செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலப் பகுதிகளிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொல் . |
திசைத்தல் | மயங்குதல் . |
திசைதப்புதல் | வழிதவறுதல் . |
திசைநா | கொடிவேலிமரம் . |
திசைநாற்கோணம் | நான்கு கோணத்திக்குகள் . |
திசைப்பாலகர் | காண்க : திக்குப்பாலகர் . |
திசைப்பு | திகைப்பு ; ஈளை . |
திசைப்புரட்டன் | திசைகளை மாற்றுவோன் ; பெரும் பொய்யன் . |
திசைபோதல் | எங்கும் பரவுதல் . |
திசைமுகன் | நான்முகனான பிரமன் . |
திசைமொழி | காண்க : திசைச்சொல் . |
திசையடித்தல் | நல்லூழ் வாய்த்தல் . |
திசையானை | காண்க : திக்கசம் . |
திசையோனி | கொடி , புகை , சிங்கம் , நாய் , இடபம் , கழுதை , யானை , காகம் என்னும் எண்திசைக் குறிகள் . |
திட்குதல் | மனங்குலைதல் . |
திட்டஞ்செய்தல் | கட்டளையிடுதல் ; ஏற்பாடுசெய்தல் . |
திட்டம் | காணப்படுவது ; நிலவரம் ; கட்டளை ; செவ்வை ; ஏற்பாடு ; மதிப்பு ; உறுதி ; நிறைவு ; கட்டளை அளவு ; அரசிறை மதிப்பு ; செலவு மதிப்பு ; சாகுபடி மதிப்பு முதலியன . |
திட்டவட்டம் | செவ்வை ; ஏற்பாடு ; உறுதி . |
திட்டனம் | இலுப்பைமரம் . |
திட்டாணி | மரத்தைச் சுற்றிய மேடை . |
திட்டாந்தப்பேச்சு | உறுதிவார்த்தை ; கற்பனையாகப் பேசும் பேச்சு . |
திட்டாந்தப்போலி | இயைபில்லாத எடுத்துக் காட்டு . |
திட்டாந்தம் | எடுத்துக்காட்டு ; உறுதி . |
திட்டி | திட்டிவாயில் ; மேடு ; துவாட்டா என்னும் தேவதச்சன் ; பலகணி ; பார்வை ; காண்க : மஞ்சிட்டி ; திருட்டிப்பொட்டு ; கண்ணேறு தினை ; மூலைகளில் தேர் திரும்பும்போது அதன் வடத்தை இழுப்பதற்கு வசதியாக விடப்பட்ட சந்து . |
திட்டித்தம்பம் | கண்கட்டுவித்தை . |
திட்டித்தல் | புதிதாக உண்டாக்குதல் . |
திட்டிப்பொட்டு | கண்ணேறு படாமலிருக்கக் கன்னத்தில் வைக்கும் மைப்பொட்டு . |
திட்டிவாசல் | பெரிய கதவுகள் சாத்தப்படும் போது உட்செல்வதற்கு உதவும் சிறிய வாயில் ; சிறிய வாயில் . |
திட்டிவாயில் | பெரிய கதவுகள் சாத்தப்படும் போது உட்செல்வதற்கு உதவும் சிறிய வாயில் ; சிறிய வாயில் . |
திட்டிவிடம் | பார்வையால் கொல்லுந்தன்மையுடைய பாம்பு . |
திட்டு | மேட்டுநிலம் ; சிறு குன்று ; ஆற்றிடைக்குறை ; வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து ; இடைச்சுவர் ; வசை ; நூறு எண்கொண்ட காலாள் முதலியவற்றின் தொகை . |
திட்டுதல் | வைதல் . |
திட்டுமுட்டு | நெஞ்சடைப்பு ; குழந்தைகளுக்கு வயிற்று வீக்கத்தோடு வரும் ஒரு நோய்வகை ; எதிர்நிந்தனை . |
திட்டுமுட்டுப்படுதல் | மூச்சுவிட இயலாது துன்புறல் . |
திட்டெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
திட்டை | மேட்டுநிலம் ; திண்ணை ; உரல் ; காண்க : வெள்ளெருக்கு ; ஓர் ஊர் . |
திட்டையிடுதல் | ஈறுகட்டல் ; புண்ணில் தசை வளர்தல் . |
திட்டையுரல் | அடி ஆழமற்ற உரல் . |
திட்பம் | உறுதி ; வலிமை ; மனவுறுதி ; சொற்பொருள்களின் உறுதி ; காலநுட்பம் . |
திடகாத்திரம் | கட்டுள்ள உடல் . |
திடசித்தம் | உறுதியான மனம் . |
திடத்துவம் | உறுதிப்பாடு , பலம் . |
திடப்படுத்துதல் | உறுதிப்படுத்துதல் ; வலுப்படுத்துதல் . |
திடப்படுதல் | உறுதிப்படுத்துதல் ; ஊக்கமடைதல் . |
திடபத்தி | உறுதியான பக்தி . |
திடபரம் | மனவலி , உறுதி . |
திடம் | உறுதி ; வலிமை ; கலங்காநிலை ; மனஉறுதி ; மெய்கமை ; நிலைதவறாமை . |
திடன் | உறுதி ; வலிமை ; கலங்காநிலை ; மனஉறுதி ; மெய்கமை ; நிலைதவறாமை . |
திடமனம் | உறுதியான மனம் . |
திடமை | காண்க : வெள்ளெருக்கு . |
திடர் | மேட்டுநிலம் ; மலை ; குப்பைமேடு ; புடைப்பு ; தீவு ; திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர் . |
திடரிடுதல் | மேடாதல் . |
திடல் | வெளியிடம் ; மேட்டுப்பகுதி . |
திடவரம் | உறுதி ; மன உறுதி . |
திடவிரதம் | உறுதியான முடிவு . |
திடற்புன்செய் | நன்செய் மத்தியில் பயிராகும் புன்செய் மேட்டுநிலம் . |
திடறு | மேட்டுநிலம் . |
திடாரி | ஊக்கமுடையவன் . |
திடாரிக்கம் | மனத்திடம் . |
திடீரெனல் | பொருள் விழும்போது உண்டாம் ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவு ; எதிர்பாராத நிலை இவற்றை உணர்த்தும் குறிப்பு . |
திடுக்கம் | அச்சம் . |
திடுக்காட்டம் | அச்சம் . |
திடுக்கிடுதல் | அச்சமுறுதல் ; நடுக்கமுறுதல் . |
திடுக்கு | அச்சம் . |
![]() |
![]() |
![]() |