திடுக்குத்திடுக்கெனல் முதல் - தித்திரு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
திடுக்குத்திடுக்கெனல் அச்சம் சோர்வுகளால் அடிக்கடி நடுங்கற்குறிப்பு ; அச்சத்தால் நெஞ்சடித்தற்குறிப்பு .
திடுக்கெனல் காண்க : திடீரெனல் .
திடுகூறு விரைவு .
திடுதிடெனல் விரைவுக்குறிப்பு ; காண்க : திடுக்குத்திடுக்கெனல் .
திடுதிப்பெனல் விரைவு , எதிர்பாராநிலை இவற்றை உணர்த்தற்குறிப்பு .
திடும் ஒரு பறைவகை .
திடுமல் பெண்ணின் அடங்காத்தனம் .
திடுமலி அடங்காதவன் .
திடுமன் திண்மை ; அடங்காத தன்மை .
திடுமெனல் காண்க : திடீரெனல் .
திண்கல் சுக்கான்கல் .
திண்டகம் கிலுகிலுப்பைச்செடி .
திண்டாட்டம் அலைக்கழிவு ; மனக்கலக்கம் .
திண்டாட்டு அலைக்கழிவு ; மனக்கலக்கம் .
திண்டாடுதல் அலைக்கழிதல் ; கலக்கப்படுதல் ; நெருக்கப்படுதல் ; மனம் கலங்கித் தடுமாறுதல் .
திண்டி பருமன் ; யானை ; காண்க : அரசு , பசளைக்கொடி ; தடித்தவள் ; தம்பட்டம் ; உணவு .
திண்டிப்போத்து உண்டு கொழுத்துத் திரிபவன் ; உண்டு கொழுத்த கடா .
திண்டிமகவி திண்டிமம் முழக்கிக்கொண்டு வாதம் செய்யும் புலவன் .
திண்டிமம் காண்க : திடும் .
திண்டிறல் மிகுந்த வலிமை .
திண்டு அரைவட்ட வடிவான பஞ்சணை ; முட்டாகக் கட்டப்படும் சிறு சுவர் .
திண்டுமுண்டு எதிரிடைப்பேச்சு .
திண்ணக்கம் நெஞ்சுரம் .
திண்ணகம் செம்மறியாட்டுக்கடா ; துரு வாட்டுக்கடா ; தட்டார் மெருகிடும் கருவியுள் ஒன்று .
திண்ணம் உறுதி ; வலிமை ; இறுக்கம் ; பொய்ம்மை .
திண்ணன் வலியுடையோன் ; கண்ணப்ப நாயனாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் .
திண்ணனவு நெஞ்சுரம் ; உறுதி .
திண்ணிமை மனவுறுதி .
திண்ணியன் வலியன் ; மன உறுதியுள்ளவன் .
திண்ணெனல் உறுதியாயிருத்தற் குறிப்பு ; வாத்திய நரம்பின் ஒலி .
திண்ணெனவு நெஞ்சுரம் ; உறுதி .
திண்ணை வேதிகை ; மேடு .
திண்ணைக்குறடு பெரிய திண்ணையை ஒட்டிக் கீழே கட்டப்பட்ட சிறுதிண்ணை ; திண்ணையை ஒட்டியுள்ள படி .
திண்ணைப்பள்ளிக்கூடம் தெருப்பள்ளிக்கூடம் ; ஆசிரியர் வீட்டுத் திண்ணைகளில் நடத்தப்படும் கல்விக்கூடம் .
திண்பொறுத்தல் பாரந்தாங்குதல் .
திண்மை வலிமை ; உறுதி ; கலங்காநிலைமை ; பருமன் ; உண்மை .
திணர் செறிவு .
திணர்த்தல் நெருக்கமாதல் ; கனமாகப் படிந்திருத்தல் .
திணர்தல் சோர்தல் .
திணறுதல் மூச்சுத் தடுமாறுதல் .
திணி திட்பம் ; செறிவு ; பூமி .
திணிகம் போர் .
திணித்தல் செறிய உட்புகுத்துதல் ; நெருக்கி வருத்துதல் ; இடைச்சேர்த்தல் ; பதித்தல் .
திணிதல் செறிதல் ; இறுகுதல் .
திணிநிலை படைகள் நெருங்கிநிற்கும் நிலை .
திணிப்பு வலிமை ; சுமத்துகை .
திணிம்பு செறிவு ; நெருக்கம் .
திணியன் பயனற்றுப் பருத்தவன் ; பயனற்றுப் பருத்தது .
திணிவு நெருக்கம் ; வன்மை .
திணுக்கம் செறிவு ; கட்டி .
திணுங்குதல் செறிதல் ; உறைதல் .
திணை நிலம் ; குலம் ; இடம் ; வீடு ; ஒழுக்கம் ; உயர்திணை அஃறிணை என்னும் பகுப்பு ; தமிழ்நூல்களில் வரும் அகத்திணை புறத்திணை ஒழுக்கம் .
திணைக்களம் பல்வேறு அலுவலகப் பிரிவுகள் .
திணைகள் சனங்கள் .
திணைநிலைவரி ஐந்திணைச் செய்திகளைக் காமக்குறிப்புத் தோன்றப் பாடும் ஒரு பா வகை .
திணைநிலைப்பெயர் சாதிக் குறிக்கும் பெயர் ; திணையில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர் ; ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர் .
திணைப்பாட்டு எடுத்த திணைக்கு உரிய தொழிலைப் பொதுப்படக் கூறும் பாடல் .
திணைப்பெயர் குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர் .
திணைமயக்கம் ஒரு நிலத்துக்குரிய காலம் கருப்பொருள்கள் வேற்றுநிலத்துப் பொருள்களுடன் கலந்து காணப்படல் ; அகம் புறம் என்னும் திணைகள் ஒன்றுடனொன்று மயங்கி வருதல் .
திணைவழு உயர்திணை அஃறிணை இரண்டும் தம்முள் மயங்கி வருவது .
தித்தகம் காண்க : மலைவேம்பு .
தித்தம் கசப்பு ; காண்க : நிலவேம்பு ; மலைவேம்பு ; தீ ; கட்டுக்கதை ; ஒளி .
தித்தா காண்க : வட்டத்திருப்பி ; பீதரோகிணி .
தித்தாவெனல் பரதத்தில் வழங்கும் தாளக்குறிப்பு .
தித்தி இனிப்பு ; சிறுதீனி ; இன்பம் ; தேமல் ; தாளச்சதி ; குரங்கு ; துருத்தி ; ஒரு வாத்திய வகை ; வேள்விக்குழி ; குரவமரம் ; பேரீந்து ; தோற்பை .
தித்திக்காரன் துருத்திவாத்தியம் ஊதுபவன் .
தித்திகம் காண்க : பேய்ப்புடல் ; அரத்தை .
தித்திசாகம் மாவிலிங்கமரம் .
தித்தித்தல் இனித்தல் .
தித்திப்பு இனிப்பு ; இனிப்புப் பண்டம் .
தித்திமுளை இரட்டைத் தித்திப்புப் பனங்கட்டி .
தித்தியம் வேள்விக்குழி .
தித்திரம் அரத்தைச்செடி .
தித்திரி கவுதாரி ; மீன்கொத்திகை .
தித்திரு நாணற்புணல் .