சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தித்திருச்சி | நாணற்புணல் . |
தித்துதல் | திருத்துதல் ; எழுத்துக் கற்க வரிவடிவின்மேல் பலமுறை எழுதிப் பழகுதல் . |
தித்துப்பாடு | திருத்தம் . |
திதம் | நிலை ; அக்கினி ; கட்டுக்கதை . |
திதலை | தேமல் ; மகவீன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம் . |
திதளம் | காண்க : மாமரம் . |
திதனி | தேமல் . |
திதி | நிலைமை ; நிலைபேறு ; சந்திரன் நாள் ; பிரதமை முதலிய திதிகள் ; சிராத்தம் ; செல்வம் ; சிறப்பு ; வாழ்வு ; வளர்ச்சி ; காப்பு ; கனம் ; இருப்பு ; அசுரர் மருத்துகளின் தாயான காசிபன் மனைவி . |
திதிகர்த்தா | காப்பு கடவுளாகிய திருமால் . |
திதிகொடுத்தல் | ஆண்டுதோறும் ஒருவர் இறந்த நாளில் சிராத்தம் செய்தல் . |
திதிகொள்ளுதல் | ஒரே மாதத்தில் ஒரே திதி இருமுறை வரும்போது அவற்றுள் ஒன்றைச் சிராத்தம் முதலியவற்றுக்குக் கொள்ளுதல் . |
திதிசர் | திதியின் புதல்வர்களான அசுரர் . |
திதிசுதர் | திதியின் புதல்வர்களான அசுரர் . |
திதிட்சயம் | காருவா , அமாவாசை . |
திதிட்சை | பொறுமை . |
திதித்தல் | காத்தல் ; கட்டுதல் . |
திதித்திரயம் | ஒரு நாளில் மூன்று திதிகள் நேர்வது . |
திதிநாடி | கிரகண நாழிகைக் காலம் . |
திதிபரன் | திருமால் . |
திதிமைந்தர் | திதியின் மக்களான அசுரர் . |
திதியம் | அழிவின்மை . |
திதீக்கதை | பொறுக்குந்தன்மை . |
திதீக்கை | பொறுமை . |
திதீட்சை | பொறுமை . |
திதைதல் | பரவுதல் . |
திந்திடம் | புளியமரம் . |
திந்திடீகம் | புளியமரம் . |
திந்திரிச்சி | நாணல் . |
திந்திருணி | புளியமரம் . |
திந்நாகம் | திக்கு நாகம் , எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள் . |
திப்பம் | காண்க : திப்பிலி . |
திப்பலி | காண்க : திப்பிலி . |
திப்பி | கோது ; வாய் அகன்ற சிறு மண்சட்டி ; கொட்டாங்கச்சி யகப்பை . |
திப்பியம் | திவ்வியம் ; தெய்வத்தன்மையுடையது ; துறக்கம் ; வியக்கத்தக்கது ; சிறந்தது ; காண்க : ஓமம் ; நெல்விசேடம் . |
திப்பியன் | தெய்வத்தன்மையுடையோன் . |
திப்பிரமை | திசைத் தடுமாற்றம் ; மனக்குழப்பம் . |
திப்பிலாட்டம் | பிறனைக் கிள்ளியும் அலைத்தும் ஆடும் விளையாட்டு ; விடுகதை ; பித்தலாட்டம் . |
திப்பிலி | ஒரு மருந்துச் சரக்கு , அது கண்ட திப்பிலி , யானைத் திப்பிலி முதலாகப் பலவகைப்படும் . |
திப்பிலியாட்டம் | காண்க : திப்பிலாட்டம் . |
திப்பை | மேடு ; பருத்தது . |
திபதை | இரண்டடிக் கண்ணிப் பாட்டு . |
திம்மலி | உடல் பருத்தவள் . |
திம்மன் | ஆண்குரங்குவகை . |
திம்மை | பருமன் ; சரிகை முதலியவற்றின் பந்து ; காண்க : திப்பிரமை . |
திமி | பெருமீன் . |
திமிகோடம் | கடல் . |
திமிங்கிலகிலம் | திமிங்கிலத்தை விழுங்கும் பெருமீன் . |
திமிங்கிலம் | திமியை விழுங்கக்கூடிய பெருமீன் ; பெருமீன்வகை . |
திமிசடித்தல் | இளகிய தரையைத் திமிசுக் கட்டையால் கெட்டிப்படுத்துதல் . |
திமிசம் | வேங்கைமரம் . |
திமிசு | காண்க : திமிசம் ; நிலத்தை இறுகப் பண்ணி மட்டஞ்செய்யுங் கட்டை . |
திமிசுபோடுதல் | காண்க : திமிசடித்தல் . |
திமிதம் | பேரொலி ; குதித்தாடுகை ; உறுதி ; ஈரம் . |
திமிதமிடுதல் | களிப்புக்கொள்ளுதல் . |
திமிதிமி | தாளக்குறிப்புச் சொல் ; காண்க : திமிங்கலம் ; ஒலிக்குறிப்பு . |
திமிதிமியெனல் | தாளக்குறிப்பு ; கூட்ட ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
திமிர் | குளிரால் உண்டாகும் விறைப்பு ; மரத்துப்போதல் ; சோம்பல் ; தேகக் கொழுப்பு ; அறிவுடல்களின் சோர்வு . |
திமிர்ச்சி | காண்க : திமிர்வாதம் . |
திமிர்த்தல் | கால் முதலியன மரத்துப்போதல் ; கொழுத்துத் தடித்தல் ; தடவுதல் ; அடித்தல் ; குலுக்குதல் ; அருவருத்தல் ; உறுதிப்படுத்தல் ; பிரமைபிடித்தல் . |
திமிர்தம் | பேரொலி . |
திமிர்தல் | பூசுதல் ; தடவுதல் ; அப்புதல் ; வாரி இறைத்தல் ; ஒலித்தல் ; வளர்தல் ; கம்பித்தல் . |
திமிர்ப்பூச்சி | வயிற்றுப்புழு . |
திமிர்பிடித்தல் | கொழுத்தல் ; செருக்குக் கொள்ளுதல் ; மரத்தல் . |
திமிர்வாதம் | உடல் மரத்துப் போவதால் உண்டாகும் ஒரு நோய் ; உடற்கொழுப்பால் ஏற்படும் மந்தபுத்தி ; காண்க : திமிர்வாயு . |
திமிர்வாயு | பக்கவாதம் ; வாதநோய் . |
திமிர்விடுதல் | சோம்பல் முரித்தல் . |
திமிரகாசம் | கண்ணோய் வகையுள் ஒன்று . |
திமிரம் | இருள் ; கருநிறம் ; இரவு ; நரகம் ; கண்ணோய் வகை ; மாயை . |
திமிரன் | மந்தன் . |
திமிராரி | இருளின் பகைவனான சூரியன் . |
திமிராளி | திமிர்வாதக்காரன் ; சோம்பேறி . |
திமில் | மீன்படகு ; மரக்கலம் ; எருத்தின் கொண்டை ; வேங்கைமரம் ; பேரொலி . |
திமில்வாழ்நர் | படகினால் வாழ்க்கை நடத்துபவராகிய செம்படவர் . |
திமிலம் | பெருமீன்வகை ; பேரொலி . |
திமிலர் | நெய்தல்நில மக்கள் . |
![]() |
![]() |
![]() |