சொல்
|
அருஞ்சொற்பொருள் |
திமிலி | காண்க : திம்மலி . |
திமிலிடுதல் | மிகவொலித்தல் . |
திமிலை | ஒரு பறைவகை ; மின்கதிர் ; கடல் மீன்வகை . |
திமிறியடித்தல் | ஒருவன் பிடிப்பினின்றும் விடுவித்துக்கொள்ளுதல் . |
திமிறுதல் | மீறுதல் , வலிந்து தன்னைப் பிறரிடமிருந்து விடுவித்தல் ; நீண்டுவளர்தல் ; மாவு முதலியன சிந்துதல் . |
திமுதிமுவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
திமைத்தல் | கிளப்புதல் . |
தியக்கடி | சோர்வு . |
தியக்கம் | காண்க : தியக்கடி ; அறிவுக்கலக்கம் ; மனச்சஞ்சலம் ; மயக்கம் . |
தியக்கு | காண்க : தியக்கடி ; அறிவுக்கலக்கம் ; மனச்சஞ்சலம் ; மயக்கம் . |
தியக்குதல் | மயங்கச்செய்தல் . |
தியங்குதல் | சோர்வெய்தல் ; கலங்குதல் ; புத்தி மயங்குதல் . |
தியசம் | காண்க : மரமஞ்சள் . |
தியதி | தேதி . |
தியந்தி | கீரைவகை ; துலாக்கட்டை . |
தியரடி | காண்க : தியக்கடி . |
தியாகம் | பிறருக்காக ஒன்றனை விட்டுக்கொடுத்தல் ; கைவிடல் ; கொடை . |
தியாகவிநோதன் | கொடுத்தலையே பொழுதுபோக்காக உடையவன் . |
தியாகமுரசு | அரசருக்கு உரிய மூன்று முரசுகளுள் கொடையளித்தலைக் குறிப்பதற்கு முழங்கும் முரச வாத்தியம் . |
தியாகர் | திருவாருரில் கோயில்கொண்டுள்ள சிவபெருமான் . |
தியாகராசர் | திருவாருரில் கோயில்கொண்டுள்ள சிவபெருமான் . |
தியாகவான் | பிறர்பொருட்டுத் தன்னலம் துறப்போன் ; கொடையாளி . |
தியாகி | பிறர்பொருட்டுத் தன்னலம் துறப்போன் ; கொடையாளி . |
தியாச்சியம் | தள்ளற்பாலது ; ஒவ்வொரு நட்சத்திரத்திலும் நற்செயல்களுக்கு விலக்கப்பட்ட நேரம் . |
தியாசம் | காண்க : மரமஞ்சள் . |
தியாதன் | நினைக்கப்பட்டவன் . |
தியாதிரு | தியானிக்கிறவன் . |
தியாமம் | காண்க : அறுகு ; இருவேலி . |
தியாலம் | காலம் . |
தியானம் | சிந்தனை ; இடையறாச் சிந்தனை ; தியானம் நிறைகை . |
தியானவான் | விடாது சிந்திப்பவன் . |
தியானி | விடாது சிந்திப்பவன் . |
தியானித்தல் | ஒன்றை இடைவிடாது நினைத்தல் . |
தியூதம் | சூதாட்டம் . |
தியோதம் | ஒளி ; வெயில் . |
திரக்கத்தாரு | நிலப்பனை . |
திரக்கம் | கொன்றைமரம் . |
திரக்கரித்தல் | விலக்குதல் ; மறுத்தல் ; இகழ்தல் . |
திரக்காரம் | விலக்குகை ; அவமதிப்பு ; மறைக்கை . |
திரக்குதல் | சுருங்குதல் ; தேடுதல் . |
திரகம் | காண்க : திரக்கம் . |
திரங்கம் | மிளகு ; நகரம் . |
திரங்கல் | முத்துக்குற்றவகை ; சுருங்கல் ; மிளகு . |
திரங்குல் | வற்றிச் சுருங்குதல் ; உலர்தல் ; சுருளுதல் ; தளர்தல் . |
திரச்சீனமுகம் | நாணத்தால் தலையாட்டும் அபிநய முகவகை . |
திரட்சி | உருண்டை ; திரண்ட தன்மை ; கூட்டம் ; முத்து ; காண்க : இருதுசாந்தி . |
திரட்சிக்கலியாணம் | இருதுசாந்திச் சடங்கு . |
திரட்டு | திரட்டுகை ; தொகைநூல் ; பூப்படைதல் . |
திரட்டுக்கலியாணம் | காண்க : இருதுசாந்தி . |
திரட்டுதல் | உருண்டையாக்குதல் ; ஒன்று கூட்டுதல் ; தொகுத்தல் ; கலத்தல் ; சுருக்குதல் ; கட்டுதல் . |
திரட்டுப்பால் | சர்க்கரையிட்டு இறுகக் காய்ச்சின பால் ; ஒருவகை இனிப்புப் பணிகாரம் . |
திரடு | மேடு . |
திரண்டகல் | உருளைக்கல் ; குண்டுக்கல் . |
திரண்டகொடிச்சி | உலோக மண்வகை . |
திரணச்சி | நவச்சாரம் . |
திரணபதி | புற்சாதிக்கு அரசாகிய வாழை . |
திரணம் | அற்பம் ; துரும்பு ; புல் ; செத்தை . |
திரணி | கொடிப்புன்கு . |
திரணை | உருண்டை ; மாலைவகை ; வைக்கோற்புரிக் கற்றை ; திண்ணை ; கட்டட எழுதக வேலை ; கொத்துக்கரண்டி . |
திரந்திகம் | திப்பிலிவேர் . |
திரப்படுதல் | உறுதிப்படுதல் . |
திரப்பியம் | காண்க : திரவியம் . |
திரபு | தகரம் ; நரகவகை . |
திரம் | உறுதி ; வலி ; உரம் ; நிலவரம் ; வீடுபேறு ; மலை ; பூமி ; தகரைச்செடி ; காண்க : திரராசி . |
திரமம் | பழைய கிரேக்க நாணயவகை . |
திரமாதம் | திரராசிகளில் சூரியன் இருக்கும் மாதம் ; அதாவது வைகாசி , ஆவணி , கார்த்திகை , மாசி மாதங்கள் . |
திரமிடம் | திராவிடம் ; தமிழ்மொழி . |
திரமிளம் | திராவிடம் ; தமிழ்மொழி . |
திரயம் | மூன்று . |
திரயம்பகன் | முக்கண்ணுடைய சிவபெருமான் . |
திரயாங்கம் | திதி வார நட்சத்திரங்களைக் காட்டும் குறிப்பு . |
திரயோதசி | தேய்பிறை வளர்பிறைகளில் வரும் பதின்மூன்றாம் திதி . |
திரராசி | நிலைநிற்கவேண்டும் செயல்களைத் தொடங்குவதற்கு ஏற்றனவாகக் கருதப்படும் இடபம் , சிங்கம் , விருச்சிகம் , கும்பம் என்னும் இராசிகள் . |
திரல் | காண்க : காட்டாமணக்கு . |
திரலடி | காண்க : ஏலம் . |
![]() |
![]() |
![]() |