சொல்
|
அருஞ்சொற்பொருள் |
திரவம் | நீர்மம் ; நீர் முதலியவற்றின் நெகிழ்ச்சி ; கசிவு ; திராவகம் . |
திரவாதி | காட்டாமணக்கஞ்செடி . |
திரவிடம் | காண்க : திராவிடம் . |
திரவிடமொழிகள் | தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , துளு , குடகு , கோடா முதலிய தென்னாட்டு மொழிகள் . |
திரவிணம் | பொன் ; பாக்கியம் ; வலி . |
திரவித்தல் | நீர் முதலியவற்றைப் பொசியப் பண்ணல் . |
திரவியசம்பத்து | பேறு , பாக்கியம் . |
திரவியம் | பொருள் ; சரக்கு ; பொன் ; சொத்து ; ஒருவகைக் கலப்புமருந்து ; அரும்பண்டம் ; தருக்க நூல்களில் கூறப்படும் மண் , நீர் , தீ , காற்று , வானம் , காலம் , திக்கு , ஆன்மா , மனம் என்னும் மூலப்பொருள்கள் . |
திரவியம்ஐந்து | ஐந்துவகைப் பொருள்கள் ; பசுவிலிருந்து பெறப்படும் பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் என்னும் ஐந்து வகைப் பொருள்கள் ; மலை , கடல் , காடு , நாடு , நகர் இவற்றில் உண்டாகும் பொருள்கள் . |
திரவியவான் | செல்வன் . |
திரன் | உருண்டை ; கூட்டம் ; படை ; மிகுதி ; குலை ; மிக முடுகிய நடையையுடைய பாடல் . |
திரள்கோரை | கஞ்சாங்கோரைவகை . |
திரள | சுருக்கமாக ; முழுதும் . |
திரளாரம் | நிலப்பனை . |
திரளி | ஒரு மீன்வகை ; திரளிமரம் . |
திரளுதல் | உருண்டையாதல் ; மிகக் கூடுதல் ; பருத்தல் ; வீங்குதல் ; இறுகுதல் ; பூப்படைதல் ; மிகுதல் . |
திரளை | கட்டி ; நூலுருண்டை ; கூட்டம் . |
திரா | பவழமல்லிகைமரம் . |
திராங்கு | தாழ்ப்பாள் . |
திராசு | தராசு ; குதிரையை வண்டியில் பூட்டும் கயிறு . |
திராட்சம் | திராட்சைக்கொடி . |
திராட்சாபாகம் | திராட்சைச்சாறு போலச் சுவைப்பதற்கு இனிதான எளிய செய்யுள் நடை . |
திராட்சை | திராட்சைக்கொடி . |
திராணம் | காத்தல் ; உறை . |
திராணி | ஆற்றல் , சத்தி . |
திராணிக்கம் | ஆற்றல் , சத்தி . |
திராணிக்கை | ஆற்றல் , சத்தி . |
திராணிசெலுத்தல் | அதிகாரம் செலுத்துதல் ; பொறுப்பான வேலையை நன்கு பார்த்தல் ; நாணயம் காத்தல் . |
திராணிவந்தன் | செயலாற்றுதற்குத் தக்கவன் . |
திராபை | பயனற்றவன் ; பயனற்றது . |
திராமரம் | காண்க : திரா . |
திராய் | ஒரு கீரைவகை ; துலாக்கட்டை . |
திராய்க்கம்பம் | உத்திரம் . |
திராயந்தி | காண்க : கம்பந்திராய் . |
திராலம் | ஒரு வெள்ளிவகை . |
திராவகநீறு | வெடியுப்புச் சுண்ணம் . |
திராவகம் | செய்நீர் ; மருந்துச் சரக்குகளிலிருந்து இறக்கப்படும் சத்துநீர் . |
திராவகன் | அறிஞன் ; கள்வன் . |
திராவடி | காண்க : ஏலம் . |
திராவணஞ்செய்தல் | ஓட்டுதல் . |
திராவணம் | ஓடுதல் . |
திராவிடப்பிரபந்தம் | ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் . |
திராவிடம் | தமிழ்நாடு ; தமிழ்மொழி ; தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , துளு முதலிய திராவிட மொழிகள் ; தமிழ்நாடு , ஆந்திரம் , கன்னடம் , மகாராட்டிரம் , கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிட நாடுகள் . |
திராவிடவேதம் | காண்க : தமிழ்வேதம் . |
திரி | முறுக்குகை ; விளக்குத்திரி ; தீப்பந்தம் ; தீக்குச்சி ; காதுக்கு இடும் திரி ; எந்திரம் ; மெழுகுவத்தி ; புண்ணுக்கு இடும் திரி ; காண்க : வெள்ளைப்பூண்டு ; பெண் ; மூன்று . |
திரிக்கால் | முக்கால் . |
திரிக்குழாய் | தீவட்டிக்கு எண்ணெய் வார்க்கும் கருவி . |
திரிகடுகம் | சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் மருந்துச் சரக்குகள் ; பதினென்கீழ்க்கணக்கில் ஒன்றாகிய ஓர் அறநூல் . |
திரிகடுகு | சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் மூன்று மருந்துச் சரக்குகள் . |
திரிகண் | காண்க : மூங்கில் . |
திரிகண்டகம் | நெருஞ்சிப்பூண்டு . |
திரிகண்டகை | நெருஞ்சிப்பூண்டு . |
திரிகண்டம் | நெருஞ்சிப்பூண்டு . |
திரிகந்தம் | மூவகை மணப்பொருள்கள் ; கிராம்பு , நாவற்பூ , செண்பகப்பூ அல்லது சந்தனம் , செஞ்சந்தனம் , அகில் . |
திரிகரணம் | உள்ளம் , உரை , உடல் என்னும் மூன்று கருவிகள் . |
திரிகல் | திரிகை ; எந்திரம் . |
திரிகாலசந்தி | காலை , உச்சி , மாலை என்னும் மூன்று சந்தியாகாலங்களில் செய்யும் அனுட்டானம் . |
திரிகாலஞானம் | முக்கால உணர்ச்சி . |
திரிகாலம் | காலை , உச்சி , மாலை என்னும் நாளின் மூன்று பகுதிகள் ; இறப்பு , நிகழ்வு , எதிர்வு என்னும் முக்காலங்கள் . |
திரிகாலவர்த்தமானம் | மூன்று காலத்தும் நிகழும் செய்தி . |
திரிகாலோசிதம் | காண்க : தருப்பை . |
திரிகுணம் | சத்துவம் , இராசதம் , தாமதம் என்னும் மூவகைக் குணங்கள் . |
திரிகூடம் | மூன்று உச்சிகளையுடைய திருக்குற்றாமலை ; ஒரு மலை . |
திரிகை | அலைகை ; சுற்றுகை , எந்திரம் ; குயவன் சக்கரம் ; இடக்கைமேளம் ; கூத்தின் அங்ககிரியைவகை ; முந்திரிகைமரம் . |
திரிகோணப்பாலை | பாலைப் பண்வகை . |
திரிகோணம் | முக்கோணம் . |
திரிச்சீலை | புண்ணிலும் , விளக்கிலும் இடும் திரி . |
திரிசங்குசுவர்க்கம் | திரிசங்குவுக்காக விசுவாமித்திரர் படைத்த விண்ணுலகு ; இடையில் நின்று வருந்தும் திண்டாட்ட நிலைமை . |
திரிசங்குமண்டலம் | திரிசங்குவின் உலகம் ; தென் திசையிலுள்ள வானமண்டலம் . |
திரிசந்தி | காண்க : திரிகாலசந்தி . |
திரிசமஞ்சரி | துளசி . |
திரிசமம் | தீம்பு ; தொல்லைதரும் செயல் . |
திரிசாகபத்திரம் | காண்க : வில்வம் . |
திரிசி | இல்லறத்தான் . |
திரிசிகம் | வில்வமரம் . |
![]() |
![]() |
![]() |