சொல்
|
அருஞ்சொற்பொருள் |
திரிசிகை | சூலப்படை . |
திரிசயம் | கண்ணுக்குப் புலனாவதாகிய மாயாகாரியமான சடப்பொருள் . |
திரிசிரசு | இராமாயணத்தில் கூறப்படும் மூன்று தலையுள்ள ஓர் அரக்கன் . |
திரிசிரபுரம் | திரிசிரசு என்பவனால் அமைக்கபட்டதாகக் கருதப்படும் ஊரான திரிசிராப்பள்ளி . |
திரிசிரா | காண்க : திரிசிரசு . |
திரிசுகந்தம் | சாதிக்காய் , சாதிபத்திரி , இலவங்கம் என்னும் மூன்றுவகை மணப்பண்டங்கள் . |
திரிசுடர் | சூரியன் , சந்திரன் , அக்கினி என்னும் முச்சுடர் . |
திரிசூலக்கல் | சிவன்கோயில் நிலங்களின் எல்லை குறிக்க நாட்டப்படும் திரிசூலக்குறி பொறித்த கல் . |
திரிசூலம் | முத்தலைச் சூலம் . |
திரிசூலன் | முத்தலை வேலையுடைய யமன் . |
திரிசூலி | திரிசூலமுடைய சிவன் ; திரிசூலமுடைய காளி ; காண்க : கற்றாழை . |
திரிசொல் | செய்யுளில் மட்டும் வழங்கப்படுவதற்குரிய தமிழ்ச்சொல் ; கற்றவர்க்கு மாத்திரம் பொருள் விளங்கும் சொல் . |
திரிஞ்சில் | துரிஞ்சில் , வௌவால் . |
திரித்தல் | சுழற்றுதல் ; முறுக்குதல் ; வேறுபடுத்துதல் ; மாவு அரைத்தல் ; அலைத்தல் ; வெட்டுதல் ; மொழிபெயர்த்தல் ; திரும்பச்செய்தல் . |
திரித்துவம் | கடவுளின் முத்தன்மை . |
திரிதசர் | தேவர் . |
திரிதண்டசன்னியாசி | முக்கோல் தாங்கும் வைணவ சன்னியாசியின் கையிலுள்ள முக்கோல் . |
திரிதண்டம் | வைணவ சன்னியாசியின் கையிலுள்ள முக்கோல் . |
திரிதண்டி | காண்க : திரிதண்டசன்னியாசி . |
திரிதரல் | திரிதல் ; சுழலல் ; மீளல் . |
திரிதல் | அலைதல் ; எழுத்து மாறுதல் ; பால் தன்மை கெடுதல் ; கெடுதல் ; சுழலல் ; வேறுபடல் ; சலித்தல் ; மயங்குதல் ; கைவிடுதல் ; திருகுறுதல் ; போதல் ; திரும்புதல் . |
திரிதியம் | செவ்வள்ளிக்கொடி . |
திரிதியை | தேய்பிறை வளர்பிறைகளில் வரும் மூன்றாந் திதி . |
திரிதூளி | சின்னபின்னம் . |
திரிதேகி | பற்பாடகப்புல் . |
திரிநயனன் | முக்கண்ணாகிய சிவன் . |
திரிநேத்திரன் | முக்கண்ணாகிய சிவன் . |
திரிபங்கம் | முத்திறமாக உடம்பை வளைத்து நிற்கும் உருவங்களின் நிலை . |
திரிபங்கி | ஒரு செய்யுளாய் நின்று ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வெறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடும் சித்திரகவிகை . |
திரிபதகை | கங்கை . |
திரிபதாகை | அணிவிரலும் பெருவிரலும் வளைந்து நிற்க ஏனைய விரல்களை நிமிர நிறுத்தும் இணையா வினைக்கை . |
திரிபதார்த்தம் | சைவசித்தாந்த நூல்களுள் சொல்லப்படும் பதி பசு பாசங்களாகிய முப்பொருள்கள் . |
திரிபதை | காண்க : திரிபதகை ; இசைப்பாவகை . |
திரிபலம் | கடுக்காய் , நெல்லிக்காய் , தான்றிக்காய் என்னும் மூன்று காய்களின் கூட்டம் . |
திரிபலை | கடுக்காய் , நெல்லிக்காய் , தான்றிக்காய் என்னும் மூன்று காய்களின் கூட்டம் . |
திரிபழுகம் | பால் நெய் தேன்களால் ஆன கூட்டுப்பண்டம் . |
திரிபன்றி | சுழலும் பன்றி வடிவாய் அமைக்கபட்ட இலக்குவகை . |
திரிபாகி | ஒரு சித்திரகவிவகை ; மூன்று எழுத்துகளைச் சேர்க்க ஒரு மொழியாகவும் , அதன் முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் , இடை கடை எழுத்துகளைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் வந்து வெவ்வேறு பொருள் தரும் சித்திரக்கவி . |
திரிபிடகம் | சூத்திர பிடகம் , வினய பிடகம் , அபிதர்ம பிடகம் என்னும் மூவகை பௌத்த ஆகமத் தொகுதி . |
திரிபு | வேறுபாடு ; செய்யுள்வகை ; தோன்றல் , திரிதல் , கெடுதல் என்னும் எழுத்துப் புணர்ச்சி விகாரம் ; விபரீத உணர்ச்சி . |
திரிபுகாட்சி | ஒன்றை வேறொன்றாய்க் காணுதல் . |
திரிபுச்சம் | இசைக்குரிய கமகம் பத்தனுள் மும்மூன்றாக விரைந்து அடுக்கிப் பாடுவது . |
திரிபுசம் | மூன்று எல்லைக் கோடுகளையுடைய முக்கோணம் . |
திரிபுடகம் | மூன்று எல்லைக் கோடுகளையுடைய முக்கோணம் . |
திரிபுடி | அறிவுக்குரிய காண்பான் , காட்சி , காட்சிப்பொருள் என்பன . |
திரிபுடிபலம் | காண்க : ஆமணக்கு . |
திரிபுடை | ஏழு தாளத்துள் ஒன்று . |
திரிபுண்டரம் | சைவர் நெற்றியில் அணியும் மூவரிகொண்ட திருநீற்றுப் பூச்சு . |
திரிபுரசுந்தரி | பார்வதி . |
திரிபுரதகனன் | முப்புரம் எரித்த சிவன் . |
திரிபுரம் | வானில் உலாவிய பொன் , வெள்ளி , இரும்பு இவற்றாலான மூன்று அசுரர் நகரங்கள் . |
திரிபுரமல்லிகை | மல்லிகைவகை . |
திரிபுரமெரித்தான் | மூன்று நகரங்களை எரித்த சிவன் ; மாவிலங்கை ; காண்க : நொச்சி . |
திரிபுராந்தகன் | காண்க : திரிபுரதகனன் . |
திரிபுரி | சாறாடை ; சாறணைப்பூண்டு . |
திரிபுரை | காண்க : திரிபுரசுந்தரி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
திரிபுவனசக்கரவர்த்தி | சோழர் பட்டப்பெயர் . |
திரிபுவனம் | காண்க : திரிலோகம் ; சோழநாட்டில் உள்ள ஒரு சிவதலம் . |
திரிபோது | காண்க : திரிகாலம் . |
திரிமஞ்சள் | மஞ்சள் , கத்தூரிமஞ்சள் , மரமஞ்சள் என்னும் மூவகை மஞ்சள் . |
திரிமணி | பௌத்தர் வணங்கும் புத்தன் , புத்த தருமம் , புத்த சங்கம் என்னும் மூன்று பொருள்கள் . |
திரிமணை | புரிமணை ; வட்டவளையமாய் வைக்கோல் , நார் முதலியவற்றால் பாத்திரங்கள் வைப்பதற்குப் பயன்படுத்தும் பீடம் . |
திரிமரம் | திரிகை ; தானியம் முதலியவற்றை மாவாக்கப் பயன்படும் கருவி . |
திரிமலம் | மும்மலமாகிய ஆணவம் , மாயை , கன்மம் . |
திரிமார்க்கம் | முச்சந்தி . |
திரிமுண்டம் | காண்க : திரிபுண்டரம் . |
திரிமூர்த்தி | மும்மூர்த்திகளாகிய பிரமன் , திருமால் , உருத்திரன் . |
திரிமூலம் | மூவகை வேர்களாகிய கண்டுமூலம் , சித்திரமூலம் , திப்பிலிமூலம் . |
திரிய | திரும்ப . |
திரியக்கி | மூன்று கண்ணுடைய தேங்காய் . |
திரியக்கு | குறுக்கானது ; விலங்கு . |
திரியக்கோடல் | ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதல் . |
திரியட்சி | காண்க : திரியக்கி . |
திரியம்பகம் | சிவனுடைய வில் . |
திரியம்பகன் | மூன்று கண்களையுடைய சிவன் , அருகன் , திருமால் , விநாயகன் , வீரபத்திரன் என்போர் . |
![]() |
![]() |
![]() |