திரியம்பகி முதல் - திருகுவில்லை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
திரியம்பகி திரியம்பகன் மனைவியாகிய சத்தி .
திரியல் திரிதல் .
திரியவும் திரும்பவும் .
திரியாமை இரவு ; யமுனையாறு ; நீலக்கல் .
திரியிடுதல் காது வளர்க்கத் துணித்திரி இட்டு வைத்தல் .
திரியேகக்கடவுள் பிதா சுதன் ஆவிகளாகிய முத்திறக் கடவுள் .
திரியேகத்துவம் கடவுளின் முத்திறத் தன்மை .
திரியேகம் கடவுளின் முத்திறத் தன்மை .
திரியேற்றுதல் புண் முதலியவற்றில் காரச்சீலையிடுதல் .
திரிராத்திரி காண்க : திரிமஞ்சள் .
திரிரேகம் சங்கு .
திரில் குயவன் சக்கரம் .
திரிலவங்கம் சிறுநாகப்பூ , செண்பகப்பூ , கிராம்பு என்னும் மூவகை மணச்சரக்கு .
திரிலிங்கம் ஸ்திரீலிங்கம் என்னும் பெண்பால் ; அபிநயக்கை வகைகளுள் ஒன்று ; காண்க : தான்றி .
திரிலோகம் திரிபுவனம் ; பூமி , பாதலம் , துறக்கம் என்னும் உலகங்கள் ; பொன் , வெள்ளி , செம்பு என்னும் மூன்று உலோகங்கள் .
திரிலோகாதிபதி திரிலோகத்தின் அதிபதியாகிய இந்திரன் .
திரிலோகேசன் சூரியன் .
திரிலோசனன் முக்கண்ணனாகிய சிவன் .
திரிலோசனி முக்கண்ணுடைய துர்க்கை .
திரிவட்டம் நூல் சுற்றுங் கருவிவகை .
திரிவிக்கிரமன் மூன்றடியால் உலகம் அளந்த திருமால் ; சூரியன் .
திரிவிதசேதனர் பத்தர் , முத்தர் , நித்தியர் என்ற மூவகை ஆன்மாக்கள் .
திரிவு காண்க : திரிபுகாட்சி ; வேறுபாடு ; தவறுகை ; கேடு ; இயக்கம் ; சரியில்லாததால் திருப்பித்தரப்பட்டது .
திரிவுக்காட்சி ஒரு பொருளைப் பிறிதொன்றாகக் காணும் காட்சி .
திரிவேணி மூவாறு கூடுமிடம் ; அலகாபாத் என வழங்கும் பிரயாகையில் கங்கை , யமுனை , அந்தர்வாகினியான சரசுவதி என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் .
திரிவேணிசங்கமம் மூவாறு கூடுமிடம் ; அலகாபாத் என வழங்கும் பிரயாகையில் கங்கை , யமுனை , அந்தர்வாகினியான சரசுவதி என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் .
திரீ பெண் , ஸ்திரீ .
திரீலிங்கம் காண்க : திரிலிங்கம் .
திரு திருமகள் ; செல்வம் ; சிறப்பு ; அழகு ; பொலிவு ; நல்வினை ; தெய்வத்தன்மை ; பாக்கியம் ; மாங்கலியம் ; பழங்காலத் தலையணிவகை ; சோதிடங் கூறுவோன் ; மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம் .
திருக்கடைக்காப்பு தேவாரம் முதலிய பதிகங்களின் பலன் கூறும் இறுதிச் செய்யுள் .
திருக்கண் அருட்பார்வை ; திருவிழாவில் சுவாமி புறப்பாட்டில் சுவாமி எழுந்தருளும் மண்டகப்படி .
திருக்கண்சாத்துதல் அருளுடன் பார்த்தல் ; மண்டகப்படிக்கு எழுந்தருளப்பண்ணுதல் ; பார்வையிடுதல் .
திருக்கண்ணமுது திருக்கன்னலமுது , பாயசம் .
திருக்கண்ணாமடை அரிசி சருக்கரை வாழைப் பழங்களால் ஆக்கப்பட்ட ஓர் இனிய உணவு வகை .
திருக்கண்மலர் தெய்வத் திருமேனியின் கண்களில் சாத்தும் மலர்போன்ற கண் உரு .
திருக்கம் வஞ்சகம் .
திருக்கலசமுடித்தல் குடமுழுக்காட்டல் .
திருக்கலியாணம் கோயிலில் தெய்வங்களுக்குச் செய்விக்கப்படும் திருமணவிழா .
திருக்கற்றளி கருங்கல்லால் கட்டப்பெற்ற கோயில் .
திருக்காட்சி தெய்வத்தியானம் .
திருக்காப்பிடுதல் கோயிற்கதவு மூடுதல் .
திருக்காப்பு தெய்வக்காவல் ; திருமுறைகளைக் கயிற்றால் கட்டிவைத்தல் ; அந்தியில் குழந்தைகளுக்குச் செய்யும் இரட்டைச் சடங்கு .
திருக்காப்புச்சாத்துதல் காண்க : திருக்காப்பிடுதல் .
திருக்கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா ; கார்த்திகை நட்சத்திரத்தில் விளக்கேற்றிவைத்துக் கொண்டாடும் திருவிழா .
திருக்கிடுதல் நீள முறுக்கிடுதல் .
திருக்கு முறுக்கு ; மாறுபாடு ; அணித்திருகு ; துகில்வகை ; சங்கடம் ; வஞ்சகம் ; கண் ; காண்பவன் .
திருக்குதல் முறுக்குதல் ; முறுக்கிப் பறித்தல் ; வளைத்தல் .
திருக்குறிப்பு திருவுள்ளக் கருத்து .
திருக்கூட்டம் தொண்டர்குழாம் .
திருக்கூத்து கடவுளின் திருவிளையாட்டு ; சிவபெருமான் திருநடனம் .
திருக்கை கடல்மீன்வகை .
திருக்கைக்கோட்டி திருமுறைகள் ஓதுதற்குரிய கோயில் மண்டபம் ; கோயிலில் திருமுறைப் பாசுரம் ஓதுவோர் .
திருக்கைச்சிறப்பு ஏனாதிப்பட்டத்திற்கு அறிகுறியாய் அளிக்கும் மோதிரம் .
திருக்கோலம் கடவுளுக்குச் செய்யும் அலங்காரம் ; நின்ற திருக்கோலம் , இருந்த திருக்கோலம் , கிடந்த திருக்கோலம் என மூவகையாய்த் திருமால் கோயில் கொண்டிருக்கும் திருமேனி நிலை .
திருக்கோவை சுவாமிக்கு முன்நின்று வேதம் , பிரபந்தம் முதலியன ஓதும் கூட்டம் .
திருகணி காண்க : திருகாணி ; சங்கின் சுழி .
திருகணை புரிமனை .
திருகம் காட்டுச்சாதிக்காய்மரம் ; துளை .
திருகல் முறுக்கு ; மாறுபடுதல் ; மாணிக்கக் குற்றவகை ; இடர்ப்பாடுள்ள சொற்றொடர் .
திருகல்முறுகல் கோணல் ; மனவேறுபாடு ; இடர்பாடுள்ள சொற்றொடர் .
திருகாணி அணியின் திருகுமரை ; பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் திருகோடுகூடிய அணிவகை .
திருகு முறுக்கு ; கோணல் ; மாறுபாடு ; ஏமாற்றும் பேச்சு ; குற்றம் ; அணியின் திருகுமரை ; சுரி .
திருகுகம்மல் மகளிர் அணியும் திருகோடுகூடிய காதணிவகை .
திருகுகள்ளி கள்ளிவகை ; கொம்புக்கள்ளி .
திருகுகொம்பன் வளைந்த கொம்புடைய விலங்குவகை .
திருகுதல் முறுக்குதல் ; மாறுபடுதல் ; பின்னுதல் ; பறித்தல் .
திருகுதாழை காண்க : வாதமடக்கி .
திருகுதாளம் புரட்டு .
திருகுப்பூ செவந்தி வடிவான மகளிர் தலையணி வகை .
திருகுபலை வலம்புரிக்காய் .
திருகுமணை தேங்காய் துருவும் மணை .
திருகுமரை திருகு முதலியவற்றின் சுரிந்த வரை ; திருகாணி ; திருகாணியின் தலை .
திருகுமூலம் முடக்கொற்றான் .
திருகுவட்டம் நூல் சுற்றும் கருவி .
திருகுவில்லை காண்க : திருகுப்பூ .