திருகுளி முதல் - திருநாடு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
திருகுளி உளிவகை ; திருப்புளி ; காண்க : திருகூசி .
திருகூசி துளையிடும் கருவிவகை ; கிணற்றுத்துலாவின் குறுக்கே இடும் அச்சுக்கட்டை .
திருச்சபை சிதம்பரத்தில் நடராசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் ; கிறித்துவர் கூடித்தொழும் இடம் .
திருச்சியம் காணப்படுகிற பொருள் .
திருச்சிற்றம்பலம் சிதம்பரத்திலுள்ள சிற்சபை ; சைவர்கள் வழங்கும் வணக்கச்சொல் ; ஓர் ஊர் .
திருச்சின்னம் தெய்வம் , அரசன் முதலாயினோர் முன் ஒலிக்கும் ஊதுகுழலுள்ள விருதுவகை .
திருச்சீரைலைவாய் காண்க : திருச்செந்தூர் .
திருச்சுற்றாலயம் கோயிலின் பிராகாரத்திலுள்ள பரிவார தேவதைகளின் கோயில் .
திருச்சுற்றாலை காண்க : திருச்சுற்றாலயம் ; திருச்சுற்றுமாளிகை .
திருச்சுற்று கோயிற்பிராகாரம் .
திருச்சுற்றுமாளிகை கோயிலின் உட்பிராகாரத்தை ஒட்டியிருக்கும் மண்டபம் .
திருச்செந்தூர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகக்கடவுள் ஆறுபடை வீடுகளில் ஒன்றுமான தலம் .
திருச்செவிசாத்துதல் கேட்டருளுதல் .
திருசி கண் .
திருசியம் காணப்படும் பொருள் .
திருசை காண்க : திருசி .
திருசோபம் வெண்டாமரை .
திருட்டாந்தம் எடுத்துக்காட்டு .
திருட்டாந்தவாபாசம் உதாரணப்போலி .
திருட்டாபோகம் இம்மையில் நுகரும் இன்பம் .
திருட்டி கண் ; பார்வை ; நோக்கம் ; தீக்கண் ; கண்ணெச்சில் .
திருட்டித்தல் கண்ணுக்குப் புலனாதல் ; தோற்றுவித்தல் .
திருட்டிபந்து மின்மினிப்பூச்சி .
திருட்டிபோகம் கண்ணுக்கினிய காட்சி .
திருட்டியம் ஞானம் , அறிவு .
திருட்டு களவு ; வஞ்சகம் .
திருட்டுத்தனம் கள்ளக்குணம் ; தந்திரம் ; அயோக்கியத்தனம் .
திருட்டுவழி கள்ளப்பாதை ; திட்டிவாசல் .
திருட்டுவாசல் இரகசிய வழி .
திருடக்காண்டம் மூங்கில் .
திருடக்கிரந்தி மூங்கில் .
திருடதை உறுதி ; பலம் ; மிகுதி .
திருடபலம் கொட்டைப்பாக்குவகை .
திருடம் வலிமை ; இரும்பு .
திருடமூலம் தேங்காய் .
திருடன் கள்வன் ; தந்திரக்காரன் ; காண்க : விட்டுணுக்கரந்தை .
திருடி திருடுபவள் ; கள்ளிச்செடி .
திருடு களவு .
திருடுதல் களவாடுதல் .
திருணகம் வாளுறை .
திருணசிங்கம் கோடரி .
திருணதை வில் .
திருணபதி புல்லின் அரசனான பனை .
திருணபூலி புல்லாலாகிய பாய் , கோரைப்பாய் .
திருணம் உலர்ந்த புல் ; உடைவாள் ; வில் ; தேள் ; தேனீ .
திருணராசன் காண்க : திருணபதி .
திருணோற்பவம் காட்டுப்பயிர் .
திருத்தம் ஒழுங்கு ; திட்டம் ; பிழைத்திருத்துகை ; செப்பனிடுதல் ; முன்னுள்ளதைச் சிறிது மாற்றுகை ; உச்சரிப்புத் தெளிவு ; புண்ணியநீர் .
திருத்தல் திருத்தம் ; வயல் .
திருத்தன் தூய்மையானவன் ; கடவுள் .
திருத்தி மனநிறைவு .
திருத்து பண்படுத்தபட்ட நிலம் ; நன்செய் நிலம் ; ஒப்பனை .
திருத்துதல் செவ்விதாக்குதல் ; சீர்படுத்துதல் ; மேன்மைப்படுத்துதல் ; செம்மையாகச் செய்தல் ; நிலம் முதலியவற்றைப் பண்படுத்தல் ; இலை , காய் முதலியன நறுக்குதல் ; செம்மைபெற அணிதல் ; உறவாக்குதல் ; மெருகிடுதல் ; மேற்பார்த்தல் ; அழைத்தல் .
திருத்துழாய் காண்க : துளசி .
திருத்தொண்டர் இறைவனடியார் .
திருத்தொண்டு கடவுளடியார்க்குச் செய்யும் பணிவிடை .
திருத்தோப்பு கோயிலுக்குரிய நந்தவனம் .
திருதம் தரிக்கை ; தாளவகை .
திருதி உறுதி ; துணை ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; திராவகம் ; சத்து ; விரைவு .
திருதிமை மனத்திட்பம் .
திருதியை தேய்பிறை வளர்பிறைகளில் வரும் மூன்றாம் திதி .
திருந்தகைமை மேன்மை .
திருந்தலர் பகைவர் .
திருந்தார் பகைவர் .
திருந்தினர் ஒழுக்கமுள்ளவர் .
திருந்துதல் சீர்ப்படுதல் ; செவ்விதாதல் ; பண்படுத்தப்படுதல் ; தொழில் முற்றுதல் ; அழகுபடுதல் ; மேன்மையாதல் ; பயிற்சி மிகுதல் .
திருநகர் செல்வநகரம் .
திருநட்சத்திரம் பெரியோர் பிறந்த நட்சத்திரம் ; பெரியோர் மறைந்த நட்சத்திரம் ; வயது .
திருநடனம் இறைவன் திருக்கூத்து .
திருநடைமாளிகை கோயிற்பிராகாரம் .
திருநந்தவனம் கோயில் நந்தவனம் .
திருநந்தாவிளக்கு சுவாமி திருமுன் எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கிற விளக்கு .
திருநல்லியாண்டு நல்ல வளமையான ஆட்சி ஆண்டு .
திருநாடலங்கரித்தல் வைகுண்டத்தை அலங்கரிக்கும் நற்கதியடைதல் .
திருநாடு வைகுண்டம் .