திருநாமக்கத்திரி முதல் - திருமந்திரவோலைநாயகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
திருநாமக்கத்திரி ஒரு பாம்புவகை .
திருநாமச்செடி ஒரு செடிவகை .
திருநாமத்துக்காணி தேவதான நிலம் .
திருநாமத்துத்தி ஒரு பூடுவகை .
திருநாமப்பாட்டு இயற்றியவரின் பெயர் , பயன் முதலியவை கூறும் பதிகவிறுதிப் பாட்டு .
திருநாமப்பாலை ஒரு பூடுவகை .
திருநாமம் தெய்வம் அல்லது பெரியோரின் பெயர் ; வைணவர் தரிக்கும் ஊர்த்துவ புண்டரம் ; மதிப்புவாய்ந்த மக்கள் .
திருநாள் விழாநாள் ; பிறந்தநாள் .
திருநாளைப்போவார்நாயனார் தில்லையைக் காண நாளைப் போவேன் என்றவராகிய நந்தனார் .
திருநிலைமகளிர் சுமங்கலிகள் .
திருநீலக்கண்டன் கரிய கழுத்தையுடையவனான சிவன் ; ஒரு பூரான்வகை ; தீயன் .
திருநீற்றுக்காப்பு பெரியோரால் ஒருவருக்குக் காப்பாக இடப்படும் திருநீறு ; திருநீறு .
திருநீற்றுக்கோயில் திருநீற்றுப் பை .
திருநீற்றுப்பச்சை ஒரு செடிவகை .
திருநீற்றுப்பத்திரி ஒரு செடிவகை .
திருநீற்றுப்பழம் திருநீற்றுருண்டை .
திருநீற்றுமடல் திருநீறு வைக்கும் கலம் .
திருநீறு விபூதி .
திருநுந்தாவிளக்கு காண்க : திருநந்தாவிளக்கு .
திருநோக்கம் கடவுள் , குரு முதலியோரின் அருட்பார்வை .
திருநோக்கு கடவுள் , குரு முதலியோரின் அருட்பார்வை .
திருப்தி காண்க : திருத்தி .
திருப்படிமாற்று திருக்கோயிலில் மூர்த்திகளுக்குப் படைக்கும் அரிசி முதலிய பண்டம் .
திருப்படிமாறுதல் சுவாமிக்குப் படையற் பொருள் அமைத்தல் .
திருப்படைவீடு கடவுள் கோயில்கொண்டுள்ள தலம் .
திருப்பணி கோயில்தொண்டு ; கோயில் கட்டுதல் புதுப்பித்தல் முதலிய வேலை ; பெரியோர்களுக்குச் செய்யும் தொண்டு ; நற்காரியம் .
திருப்பணிமாலை கோயில் திருப்பணி விவரம் கூறும் நூல்வகை .
திருப்பதி புண்ணியத்தலம் ; திருவேங்கடம் என்னும் திருமால் தலம் .
திருப்பதிகம் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பத்து அல்லது பதினொரு பாடல் கொண்டது .
திருப்பதியம் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பத்து அல்லது பதினொரு பாடல் கொண்டது .
திருப்பம் திரும்புகை ; திரும்பும் தெருக்கோடி ; சவரி என்னும் மயிர்முடி ; பண வாணிகம் .
திருப்பரிவட்டம் தெய்வத் திருமேனிக்குச் சாத்தும் ஆடை ; கோயில் மரியாதையாகப் பெரியோர் தலையில் சுற்றிக் கட்டப்படும் கடவுளின் ஆடை .
திருப்பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று கடவுளரைப் புகழ்ந்து பாடும் பாடல்வகை ; சிவபெருமான்மீது சேந்தனார் பாடிய நூல் ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய நூல் .
திருப்பள்ளி திருக்கோயில் ; தெய்வசயனம் .
திருப்பள்ளித்தாமம் கோயில்மூர்த்திகளுக்குச் சாத்தப்படும் மாலை .
திருப்பள்ளிபடுத்துதல் சன்னியாசிகளை அடக்கம் செய்தல் .
திருப்பள்ளியெழுச்சி தேவர்கள் உறக்கம் விட்டெழுதல் ; கடவுளைத் துயிலெழுப்புவதாக அமைந்த பாடல்கள் அடங்கிய பதிகம் .
திருப்பாட்டு கடவுளைப்பற்றிப் பெரியோர் பாடிய பாட்டு ; தேவாரம் ; வசைச்சொல் .
திருப்பாவாடை கோயில் மூர்த்திக்குப் படைக்கும் பெரிய நிவேதனம் ; நிவேதனம படைக்கும் ஆடை .
திருப்பாவை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பாவைநோன்பு குறித்து ஆண்டாள் பாடியதொரு நூல் .
திருப்பாற்கடல் திருமால் பள்ளிகொண்டருளும் இடம் .
திருப்பி ஆணியைத் திருகி உட்செலுத்தும் ஆயுதவகை ; காண்க : வட்டத்திருப்பி .
திருப்பு தடவை ; ஒரு மீன்வகை .
திருப்புகழ் தெய்வப் புகழ்ச்சியான பாடல் ; அருணகிரிநாதர் முருகக்கடவுள்மீது பாடிய நூல் .
திருப்புதல் திரும்பச் செய்தல் ; மாற்றுதல் ; பாடத்தை மறுமுறை ஓதல் ; மொழிபெயர்த்தல் ஏட்டின் பக்கத்தைத் தள்ளுதல் ; முறுக்குதல் ; கவிழ்த்தல் ; சாவி கொடுத்தல் ; திருப்பிக் கொடுத்தல் ; விதிர்த்தல் ; நோய் முதலியன தணித்தல் ; சூனியத்தைத் திரும்பச் செய்தல் .
திருப்புளி திருகாணி இறுக்கும் கருவி .
திருப்பூட்டு தாலி ; மணமகளுக்குத் தாலி கட்டுகை .
திருப்பூட்டுதல் மணமகள் கழுத்தில் தாலி கட்டுதல் .
திருப்பூவல்லி மகளிர் பூக்கொய்தலைப்பற்றிக் கூறும் திருவாசகப் பகுதி .
திருப்பொறி அரசர் முதலியோர்க்குரிய உடல் இலக்கணம் .
திருப்போனகம் கடவுளுக்குப் படைத்த அமுது .
திரும்புகால் மீளும் சமயம் .
திரும்புதல் மாறுதல் ; மீளுதல் ; விலகுதல் ; வளைதல் ; சூரியன் சாய்தல் .
திருமகள் செல்வத்துக்குத் தலைவியான திருமால் மனைவி .
திருமகள்கொழுநன் திருமகளின் கணவனான திருமால் .
திருமகள்மைந்தன் திருமகளின் புதல்வனான மன்மதன் .
திருமகளாடல் பாவை என்னும் கூத்து .
திருமகன் திருமகள் கொழுநனான திருமால் ; திருமகள் மைந்தனான காமன் ; செல்வமகன் .
திருமங்கலியம் தாலி .
திருமங்கிலியம் தாலி .
திருமஞ்சனம் திருமுழுக்கு ; திருமுழுக்குக்குரிய நீர் .
திருமஞ்சனமாட்டுதல் திருமுழுக்காட்டுதல் .
திருமடந்தை திருமகள் .
திருமடம் குருவின் மாளிகை .
திருமடவளாகம் கோயிலைச் சுற்றியுள்ள இடம் .
திருமடைப்பள்ளி சமையலறை .
திருமண் வைணவர் நெற்றியலணியும் நாமம் ; நாமக்கட்டி .
திருமண்காப்பு வைணவர் நெற்றியில் இடும் திருநாமம் .
திருமணம் கலியாணம் .
திருமணம்பரிமாறுதல் தாளித்தல் ; பொய் கலந்து பேசுதல் .
திருமணிகுயிற்றுநர் முத்துக்கோப்போர் .
திருமதில் கோயிலின் சுற்றுமதில் .
திருமதுரம் பழம் , நெய் , சருக்கரை சேர்த்துச் செய்யப்படும் படையற்பொருள் .
திருமந்திரம் சிவஐந்தெழுத்து ; திருமால் எட்டெழுத்து ; திருமூலர் இயற்றிய நூல் ; கோயில் .
திருமந்திரவோலைநாயகம் அரசவை எழுத்தாளர் தலைவன் .