திருமரம் முதல் - திருவாசிகை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
திருமரம் அரசமரம் .
திருமலர் திருமகள் வீற்றிருக்கும் தாமரைமலர் .
திருமலை தூய்மையான மலை ; கயிலாயமலை ; திருவேங்கடமலை .
திருமறுமார்பன் அருகன் ; மார்பில் அழகிய மறுவையுடைய திருமால் .
திருமாது திருமகள் .
திருமாமகள் திருமகள் .
திருமாமணிமண்டபம் பரமபதத்துள்ள திருவோலக்க மண்டபம் .
திருமால் விட்டுணு ; அரசன் .
திருமால்குன்றம் அழகர்மலை .
திருமால்கொப்பூழ் திருமாலின் கொப்பூழிலிருந்து உண்டான தாமரை .
திருமால்நிலை திருமாலின் பரம் , வியூகம் , விபவம் , அந்தர்யாமித்துவம் , அர்ச்சை என்னும் ஐவகை வடிவங்கள் .
திருமால்புதல்வன் திருமாலின் மகனான மன்மதன் ; பிரமன் .
திருமாலவதாரம் மீன் , ஆமை , பன்றி , நரசிங்கம் , வாமனம் , பரசுராமன் , இராமன் , பலராமன் , கண்ணன் , கற்கி என்னும் திருமாலின் பத்துப் பிறப்புகள் ; சனகன் , சனந்தனன் , சனாதனன் , சனற்குமாரன் , நரநாராயணன் , கபிலன் , இடபன் , நாரதன் , அயக்கிரீவன் , தத்தாதிரேயன் , மோகினி , வேள்வியின்பதி , வியாதன் , தன்வந்திரி , புத்தன் எனப் பதினைந்து கூறுகளையுடைய பிறப்புகள் .
திருமாலாயுதம் திருமாலின் ஐம்படைகளான பாஞ்சசன்னியம் என்னும் சங்கு , சுதரிசனம் என்னும் சக்கரம் , சார்ங்கம் என்னும் வில் , நாந்தகம் என்னும் வாள் கௌமோதகி என்னும் தண்டு .
திருமாலிருஞ்சோலை காண்க : அழகர்மலை .
திருமாளிகை கோயில்மதிலை ஒட்டி உட்புறத்து அமைத்துள்ள கட்டட வரிசை ; பெரியோர் வாழும் இல்லம் .
திருமானகரம் காண்க : திருநாடு .
திருமுகம் கடவுள் சன்னிதானம் ; பெரியோர் வரைந்து அனுப்பும் ஓலை ; அரசனது சாசனம் .
திருமுட்டு பூசைத்தட்டு முதலியன .
திருமுடி கோயில்மூர்த்தியின் தலைப்பகுதி ; மதிப்புவாய்ந்த மக்கள் ; கொத்துவேலை செய்வோர் .
திருமுடிச்சாத்து தலைப்பாகை .
திருமுடிச்சேவகர் ஐயனார் .
திருமுடித்திலகம் திருமுடியில் சூட்டும் மணி .
திருமுடியோன் முடிசூடிய அரசன் .
திருமுண்டம் சைவர்கள் மூன்று வரியாக நெற்றியில் இடும் திருநீற்றுக்குறி .
திருமுதல் திரும்புதல் ; நன்றாகத் தேய்த்தல் .
திருமுழுக்கு காண்க : திருமஞ்சனம் ; மார்கழி மாதத்தில் பாவைநோன்புகொண்டு மகளிர் முழுகும் நீராட்டு .
திருமுளைப்பாலிகை திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளில் தானிய முளை வளர்க்கப்பெறும் மண்குடுவை .
திருமுற்றத்தார் கோயிற்பணி செய்வோர் .
திருமுற்றம் கோயிற் சன்னிதானம் ; குதிரை வையாளிவீதி .
திருமுறை இறைவனிடம் முறையிட்டுப் பாடும் தெய்வப்பாடல்கள் ; தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு , திருமந்திரம் , பதினோராந் திருமுறை , பெரியபுராணம் என்னும் சைவத் திருநூல்கள் ; இராமலிங்க அடிகள் பாடிய நூல்கள் .
திருமுன் சன்னிதி ; சன்னிதியில் .
திருமுன்பு சன்னிதி ; சன்னிதியில் .
திருமுன்னர் சன்னிதி ; சன்னிதியில் .
திருமெய்க்காப்பு கோயில் காப்போன் .
திருமெய்ப்பூச்சு கோயில்மூர்த்தங்களின்மேல் பூசப்படும் மணப்பூச்சு ; புனுகு , களபம் முதலியன .
திருமெழுக்கு சாணம் ; கோயிலிடத்தை மெழுகுகை .
திருமேற்பூச்சு காண்க : திருமெய்ப்பூச்சு .
திருமேனி கடவுள் , முனிவர் முதலியோரது தெய்வ உடல் ; சிலை ; பெண்கள் காதணி ; காண்க : குப்பைமேனி .
திருமேனிகாவல் கோயிற்காவல் .
திருமேனியழகி காண்க : குப்பைமேனி .
திருமை அழகு .
திருமொழி பெரியோர் சொல் ; ஆகமம் ; தருமம் ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் ஒன்றான பெரிய திருமொழி .
திருவகுப்பு சந்தக் குழிப்பில் அமைந்த செய்யுள் வகை .
திருவட்டி காண்க : திருகுகள்ளி .
திருவடி சீபாதம் ; சுவாமி ; முனிவர் ; திருமாலின் பாதத்தில் இருக்கும் அனுமான் ; கருடன் ; திருவாங்கூர் அரசர் ; நோவில்லாத புண் ; கோமாளி விகடம் .
திருவடிக்கம் திருமால்கோயிற் படிக்கத்தினின்று எடுத்து வழங்கும் சுவாமி தீர்த்தம் .
திருவடிசம்பந்தி சீடன் .
திருவடித்தலம் கடவுள் முதலியோர் பாதுகை .
திருவடிதீட்சை சீடன் தலையில் குரு தன் பாதத்தை வைத்தருளும் தீட்சைவகை .
திருவடிதொழுதல் கடவுள் முதலியோரை வணங்குதல் .
திருவடிநிலை சிலை வைக்கும் மேடை ; கடவுளர் முதலியோர் மிதியடி .
திருவடிபிடிப்பான் கோயில் அருச்சகன் .
திருவடையாளம் சைவசமயத்திற்குரிய திருநீறு முதலிய சாதனங்கள் .
திருவணுக்கன் திருவாயில் கருவறையை அடுத்துள்ள இடம் .
திருவணை சேது .
திருவணைக்கரை தனுக்கோடி .
திருவத்தவர் செல்வம் படைத்த நல்வினையாளர் .
திருவத்தியயனம் திவ்வியப் பிரபந்தம் ஓதுகை ; சிராத்தம் .
திருவந்திக்காப்பு திருவிழாக் காலத்தில் சுவாமி புறப்பாட்டின் முடிவில் கண்ணேறு போகச் செய்யும் சடங்கு .
திருவம்பலம் தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள புகழ்வாய்ந்த சிவதலம் , சிதம்பரம் .
திருவமால் திருமால் .
திருவமுது நிவேதனவுணவு .
திருவரங்கு கோயிலுள்ள முதன்மை மண்டபம் .
திருவலகிடுதல் கோயிலைப் பெருக்கித் துப்புரவாக்கல் .
திருவலகு கோயிலைப் பெருக்கும் துடைப்பம் .
திருவள்ளுவப்பயன் திருவள்ளுவர் தந்த திருக்குறள் .
திருவளத்தான் நகைச்சுவை நடிகன் , கோமாளி , விகடன் .
திருவறம் மததருமம் ; சமண ஒழுக்கம் .
திருவன் செல்வன் ; திருமால் ; விகடக்காரன் ; புரட்டன் ; ஒரு மீன்வகை .
திருவாக்கு தெய்வப் பெரியோர்களின் வாய்மொழி .
திருவாங்குதல் தாலி களைதல் .
திருவாசகம் திவ்விய வாக்கு ; மாணிக்கவாசகர் அருளிய துதிநூல் .
திருவாசி வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை .
திருவாசிகை வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை .