சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| துயிலுணர்தல் | விழித்தல் . |
| துயிலுதல் | உறங்குதல் ; தங்குதல் ; இறத்தல் ; மறைதல் . |
| துயிலெடுத்தல் | தூக்கத்திலிருந்து எழுப்புதல் . |
| துயிலெடுப்பு | தூக்கத்திலிருந்து எழுப்புதல் . |
| துயிலெடை | துயிலெழுப்பல் . |
| துயிலெடைநிலை | பாசறையில் வேந்தர் புகழ்கூறி அவரைத் துயிலெழுப்புவதாகக் கூறும் புறத்துறை ; அரசர் முதலியோர் துயில் நீங்குதல்பற்றிப் பாடப்படும் நூல்வகை . |
| துயிலெடைமாக்கள் | அரசரைத் துயிலெழுப்பும் சூதர் . |
| துயிலெழுதல் | உறக்கம்விட்டு எழுதல் . |
| துயிலெழுமங்கலம் | பாணர் முதலியோர் அரசரைத் துயிலெழப் பாடும் மங்கலப்பாடல் . |
| துயிலேற்றல் | உறக்கம்விட்டு எழுதல் . |
| துயற்சி | தூக்கம் . |
| துயிற்றுதல் | உறங்கச்செய்தல் ; தங்கப்பண்ணுதல் . |
| துயினடை | தூக்கத்திடையே எழுந்து செல்லச் செய்யும் நோய் . |
| துயுலி | கீரைவகை . |
| துர் | தீதுப்பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
| துர்க்கடம் | இடர்ப்பாடு . |
| துர்க்கதன் | வறுமையுற்றவன் . |
| துர்க்கதி | கெட்ட நடத்தை ; வறுமை ; நரகம் . |
| துர்க்கந்தம் | தீநாற்றம் . |
| துர்க்கம் | அரண் ; மலைக்கோட்டை . |
| துர்க்கருமம் | தீச்செயல் . |
| துர்க்காதேவி | கொற்றவை ; பார்வதி . |
| துர்க்காபூசை | நவராத்திரியில் துர்க்காதேவியைக் குறித்துச் செய்யும் மூன்றுநாள் பூசை . |
| துர்க்குணம் | தீக்குணம் . |
| துர்க்குணன் | தீயவன் . |
| துர்க்குறி | தீச்சகுனம் , தீநிமித்தம் , கேட்டைக் குறிக்கும் அடையாளம் ; சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர் . |
| துர்க்கை | சிவபிரான் தேவியும் பாலைநிலத் தேவியுமாகிய பெண்தெய்வம் ; பூரநாள் . |
| துர்ச்சரிதம் | கெட்ட நடத்தை . |
| துர்ச்சனன் | தீயவன் . |
| துர்த்தினம் | தீய நாள் ; சூரிய கிரணமின்றி மேக மூட்டமுள்ள நாள் . |
| துர்த்தூரம் | ஊமத்தஞ்செடி . |
| துர்த்தேவதை | சிறுதெய்வம் . |
| துர்நடத்தை | தீயொழுக்கம் . |
| துர்ப்பரிசம் | காண்க : சிறுகாஞ்சொறி . |
| துர்ப்பலம் | வலுவின்மை ; தாழ்நிலை . |
| துர்ப்பலன் | வலியற்றவன் ; கோள் முதலியவற்றின் தீப்பயன் . |
| துர்ப்பிட்சம் | பஞ்சம் . |
| துர்ப்புத்தி | கெடுமதி ; தீய கொள்கை ; கெடுமதியுடையோர் ; தீயுரை . |
| துர்மரணம் | தற்கொலை முதலியவற்றால் உண்டாகும் சாவு . |
| துர்லபம் | பெறுதற்கரியது . |
| துர்வாதம் | நேர்மையற்ற வாதம் . |
| துர்விநியோகம் | தீயவழியில் செலவிடுகை . |
| துரக்கு | ஐயப்பாடு . |
| துரகதம் | குதிரை . |
| துரகதாமன் | அசுவத்தாமன் . |
| துரகம் | குதிரை ; காண்க : குதிரைத்தறி , குதிரைப்பல் பாடாணம் . |
| துரங்கம் | குதிரை ; மனம் . |
| துரங்கமம் | குதிரை . |
| துரங்கவதனன் | குதிரை முகத்தையுடையவனான கின்னரன் . |
| துரங்காரி | எருமை . |
| துரங்கி | குதிரைக்காரன் . |
| துரட்டன் | தீநெறி ஒழுகுபவன் . |
| துரட்டு | முள்மரவகை ; சிறுமரவகை ; சிக்கல் ; அபாயம் . |
| துரத்தல் | ஓட்டிச் செலுத்துதல் ; எய்தல் ; போக்குதல் ; அடித்தல் ; தூண்டுதல் ; முடுக்கி உட்செலுத்துதல் ; முயலுதல் ; வீசுதல் ; எரிதல் ; போதல் . |
| துரத்துதல் | வெருட்டி ஓட்டுதல் ; அப்புறப்படுத்துதல் ; திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல் ; வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல் . |
| துரதிட்டம் | நல்வினையின்மை , நற்பேறின்மை . |
| துரந்தரம் | பொதியெருது ; பொறுப்பு . |
| துரந்தரன் | பொறுப்பு ஏற்பவன் ; முயன்று நிற்போன் ; வெற்றிபெற்றவன் . |
| துரந்தரி | பொறுப்பு ஏற்போள் . |
| துரப்பணம் | காண்க : துறப்பணம் . |
| துரப்பு | முடுக்குதல் ; அகற்றுதல் ; மலையிற் குடையப்பட்ட பாதை . |
| துரப்புதல் | தேடுதல் . |
| துரபிமானம் | தகாத இடத்தில் வைக்கப்பட்ட பற்று ; வீண்பெருமை ; வெறுப்பு . |
| துரம் | பொறுப்பு ; சுமை ; ஓர் இசைக்கருவி ; கோயிற்குரிய வரிவசூலிக்கும் அலுவலகம் . |
| துரமி | தொடரிச்செடி ; தூதுளைக்கொடி . |
| துரவு | பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு ; மணற்கேணி ; தூது . |
| துரவுவாரகம் | கிணறுவெட்டக் கொடுக்கும் கடன் . |
| துராகதம் | உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் ; கெட்ட நடத்தை ; பலவந்தக் கற்பழிப்பு ; நிந்தை . |
| துராகிருதம் | உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் ; கெட்ட நடத்தை ; பலவந்தக் கற்பழிப்பு ; நிந்தை . |
| துராசர் | கெட்ட ஆசையை உடையவர் . |
| துராசாரம் | தீயொழுக்கம் ; அவமரியாதை ; ஒழுக்கக்கேடு . |
| துராசாரி | தீயொழுக்கமுடையான்(ள்) . |
| துராசை | தகாத இச்சை . |
| துராத்தியம் | ஏழைமை . |
| துராத்துமா | தீயோன் . |
|
|
|