துவங்கிசம் முதல் - துவாளித்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
துவங்கிசம் தேசம் ; இழப்பு ; துன்பம் .
துவங்குதல் தொடங்குதல் .
துவசங்கட்டுதல் வெற்றி முதலியன குறிப்பதற்குக் கொடியேற்றுதல் ; முயன்று நிற்றல் ; எதிராளியாய் நிற்றல் .
துவசத்தம்பம் கோயிற் கொடிமரம் .
துவசம் கொடி ; அடையாளம் ; ஆண்குறி ; வணிகம் குறிக்க அமைக்கும் குறி .
துவசமங்கையர் கள் விற்கும் பெண்கள் .
துவசர் கள் விற்போர் .
துவஞ்சம் அழிவு .
துவட்சி அசைவு ; ஒசிவு ; சோர்வு ; வாடுகை ; வறட்சி .
துவட்சிகை கடுக்காய்ப்பிஞ்சு .
துவட்டர் சிற்பியர் .
துவட்டல் காண்க : துவட்டுதல் ; கறிவகை .
துவட்டா தேவதச்சனாகிய விசுவகருமன் .
துவட்டாநாள் சித்திரைநாள் .
துவட்டு கறிவகை ; துவட்டுதல் .
துவட்டுதல் நீரைத் துடைத்தல் ; கறி முதலியன துவட்டுதல் ; கறிப்பண்டங்களைத் தொட்டுக் கொள்ளுதல் ; கசக்குதல் .
துவடா பகைவர் .
துவணுகம் இரண்டு பரமாணுக்களின் கூட்டம் .
துவந்தன் தம்முன் மாறுபட்ட இருவகை நிலைத் துன்பத்துக்கு இடமாயிருப்பவன் .
துவந்தனை கட்டு ; தடை ; துன்பம் .
துவந்தித்தல் தொடர்புறுதல் .
துவந்துவம் இரட்டை ; தொடர்பு ; பழவினைத் தொடர்பு ; தம்முள் மாறுபட்ட இருவகை நிலை ; நோய்களின் பிணைப்பு ; சண்டை ; ஐயம் .
துவம் இரண்டு ; அசையாநிலை ; பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி .
துவயம் இரண்டு ; இரண்டு வாக்கியமாய்த் திருமாலைப்பற்றியமைந்த மந்திர விசேடம் .
துவர் துவர்ப்பு ; துவர்ப்புடைய பொருள்கள் ; பகை ; செருக்கு ; உலர்ந்த விறகு ; சருகிலை ; சிவப்பு ; பவளம் ; காவி ; துவரை ; பாக்கு ; துண்டு ; கோது .
துவர்க்கட்டி காசுக்கட்டி .
துவர்க்கண்டல் செந்தாழை .
துவர்க்காய் பாக்கு .
துவர்ச்சிகை கடுக்காய்ப்பிஞ்சு ; கூவை மா .
துவர்த்தல் துவர்ப்புக்கொள்ளுதல் ; சிவத்தல் ; பூசுதல் ; ஈரம்போக்கல் .
துவர்த்து ஈரம் துவட்டும் துணி .
துவர்த்துமுண்டு ஈரம் துவட்டும் துணி .
துவர்தல் பிரிதல் ; வகிர்தல் ; தெளிதல் ; உலருதல் ; புலர்த்துதல் ; பூசுதல் ; முதிர்தல் ; முழுதுமாதல் ; ஆடுதல் .
துவர்ப்பசை குரோதம் , மானம் , மாயை , உலோபம் என்னும் நான்கு பாவங்கள் .
துவர்ப்பிடித்தல் தடுத்திடுமாறு ஆடையைப் பிடித்தல் .
துவர்ப்பு அறுசுவையுள் ஒன்று ; நகைச்சுவை ; இரதி , அரதி , சோகம் , பயம் , சுகுச்சை என்னும் குண வேறுபாடுகள் ; உயிர்த்துன்பம் , பத்து .
துவர மிக ; முழுதும் .
துவரம் துவர்ப்பு ; கறிவகை .
துவராடை காவியூட்டிய ஆடை .
துவரி காவிநிறம் ; இலவம்பூ .
துவரிதம் யானை .
துவரை துவரஞ்செடி ; காண்க : காட்டத்தி ; துவாரகை ; கோவணம் .
துவல் அருச்சிக்கும் பூ ; விரைவு .
துவலுதல் துளித்தல் ; நிறைதல் ; விரைதல் ; சாதல் .
துவலை நீர்த்துளி , மழைத்தூவல் ; கூட்டம் .
துவள் காண்க : துவட்சி ; குற்றம் .
துவள்வு காண்க : துவட்சி .
துவள்தல் ஒசிதல் ; நெளிதல் ; வாடுதல் ; கசங்குதல் ; துடித்தல் ; வருந்துதல் ; ஒழிதல் ; அடர்தல் ; இறுகுதல் ; ஒட்டுதல் ; புணர்தல் ; மெல்லியதாய் இருத்தல் ; தொடுதல் .
துவளுதல் ஒசிதல் ; நெளிதல் ; வாடுதல் ; கசங்குதல் ; துடித்தல் ; வருந்துதல் ; ஒழிதல் ; அடர்தல் ; இறுகுதல் ; ஒட்டுதல் ; புணர்தல் ; மெல்லியதாய் இருத்தல் ; தொடுதல் .
துவளல் ஒசிதல் ; நெளிதல் ; வாடுதல் ; கசங்குதல் ; துடித்தல் ; வருந்துதல் ; ஒழிதல் ; அடர்தல் ; இறுகுதல் ; ஒட்டுதல் ; புணர்தல் ; மெல்லியதாய் இருத்தல் ; தொடுதல் .
துவளை மேற்பூச்சு ; ஒற்றடம் ; வாட்டம் .
துவற்றுதல் தூவுதல் ; கெடுத்தல் .
துவறல் மழைதூவுகை ; விரைவு .
துவன் காண்க : வட்டத்திருப்பி .
துவன்று நிறைவு .
துவன்றுதல் சாதல் ; நிறைதல் ; நெருங்குதல் ; கூடிநிற்றல் ; குவிதல் .
துவனம் ஒலி .
துவனி ஒலி .
துவனித்தல் முழங்குதல் .
துவா இரண்டு ; தொழுகை .
துவாதசம் பன்னிரண்டு .
துவாதசாதித்தர் பன்னிரு சூரியர் .
துவாதசாந்தம் உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ள யோகத்தானம் .
துவாதசி பன்னிரண்டாம் திதி .
துவாந்தம் இருள் ; நரகம் .
துவாபரம் 8 ,64 ,000 ஆண்டுகள்கொண்ட மூன்றாம் யுகம் .
துவாபரயுகம் 8 ,64 ,000 ஆண்டுகள்கொண்ட மூன்றாம் யுகம் .
துவாரடை மரக்கலவுறுப்புகளுள் ஒன்று .
துவாரபாலகர் வாயில் காப்போர் ; கோயிலின் வாயில் காவல் தெய்வங்கள் .
துவாரபாலர் வாயில் காப்போர் ; கோயிலின் வாயில் காவல் தெய்வங்கள் .
துவாரம் தொளை ; மனைவாயில் : வழி ; மூலம் .
துவாரிகன் வாயிற்காவலன் .
துவாலை உதிரப்பெருக்கு ; உடலில் பூசும் பூச்சு ; துணித்துண்டு ; மேற்பூச்சு மருந்து .
துவாலையிறைப்பு ஒரு நோய் ; சூதகப்பெருக்கு .
துவாளித்தல் கால்வாய் முதலியன தோண்டுதல் .