சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| துவி | இரண்டு . |
| துவிச்சக்கரவண்டி | ஈருருளி , மிதிவண்டி . |
| துவிசம் | இருமுறை தோன்றுவது ; பல் ; முட்டையிற் பிறப்பது . |
| துவிசன் | இருபிறப்புடைய முதல் மூன்று வகுப்பான் ; பார்ப்பனன் . |
| துவிதம் | இரண்டு ; இருமை . |
| துவிதவாதம் | பகைவர் இருவரைத் தம்முள் பொருமாறு செய்து இருவருக்கும் உதவுபவனாக நடித்துத் தான் பொதுப்பட இருக்கை ; கடவுளும் சிவனும் வேறெனக்கொள்ளுஞ் சமயமாகிய துவைதமதம் . |
| துவிதவாதி | கடவுளுஞ் சீவனும் வேறெனக் கொள்ளுஞ் சமயத்தான் . |
| துவிதாகதி | நண்டு . |
| துவிதாத்துமகம் | சாதிக்காய் . |
| துவிதாதகி | முதலை . |
| துவிதியை | இரண்டாம் திதி ; இரண்டாம் வேற்றுமை ; கோரோசனை . |
| துவிதீயம் | இரண்டாவது ; இரண்டாம் மனைவி . |
| துவிபடி | காண்க : துப்பட்டி . |
| துவிபாசி | இருமொழி தெரிந்தவன் . |
| துவியம் | இரண்டாவது . |
| துவிரதம் | இருகொம்புடையதான யானை . |
| துவிரம் | தேனீ . |
| துவிருத்தி | கூறியதுகூறல் ; இரண்டுபடச் சொல்லல் . |
| துவிரேபாரி | வண்டுணா மலரான சண்பகம் . |
| துவீபம் | தீவு ; புலித்தோல் . |
| துவேசம் | பகை ; வெறுப்பு . |
| துவேடம் | பகை ; வெறுப்பு . |
| துவை | மிதிக்கை ; துவையல் ; இறைச்சி ; பருகும் உணவுவகை ; ஆணம் ; புளிங்கறி ; பிண்ணாக்கு ; துளசி ; ஆடைவெளுக்கை . |
| துவைத்தல் | ஒலித்தல் ; யாழ் ஒலித்தல் ; ஆரவாரித்தல் ; புகழப்படுதல் ; மிதித்துழக்குதல் ; துணிதுவைத்தல் ; தோய்த்தல் ; குற்றுதல் ; இடித்தல் ; கடைதல் ; சேர்த்துவைத்தல் ; உறையச்செய்தல் ; ஆயுதத் துவைச்சலிடுதல் . |
| துவைதம் | கடவுளும் உயிரும் வேறென்பதும் மத்துவாசாரியரால் பரப்பப்பெற்றதுமான சமயம் . |
| துவைதல் | தோய்தல் ; உறைதல் ; கஞ்சியிடுதல் ; ஆயுதத் துவைச்சலிடுதல் ; மிதித்து உழக்கப்படுதல் . |
| துவைபாயனன் | தீவில் பிறந்தவனான வேதவியாசன் . |
| துவையல் | தொகையல் எனப்படும் உணவு ; ஆடை வெளுக்கை ; உருக்கைத் துவைச்சல் இடுகை . |
| துழத்தல் | துழாவுதல் . |
| துழதி | துன்பம் . |
| துழவை | துழாவிச் சமைத்த கூழ் ; மூங்கிற்பற்றை . |
| துழனி | ஒலி ; குறைகுற்றம் . |
| துழாதல் | காண்க : துழாவுதல் . |
| துழாய் | துளசிச்செடி . |
| துழாய்மௌலி | துளசிமாலை முடியினனாகிய திருமால் . |
| துழாவாரம் | வம்புப்பேச்சு . |
| துழாவுதல் | கையாலளைதல் ; கிளறுதல் ; தடவுதல் ; நாடுதல் ; ஆராய்தல் ; தண்டுவலித்தல் ; தடுமாறுதல் ; அளவளாவுதல் . |
| துழைதல் | துடுப்பால் துழாவிச் செலுத்துதல் . |
| துள் | குதிப்பு ; செருக்கு . |
| துள்ளம் | சிறுதுளி . |
| துள்ளல் | துள்ளுதல் ; கூத்து ; கலிப்பாவுக்குரிய துள்ளலோசை ; முடுகிசை ; கூத்தன் ; ஆடு ; கொசு ; ஆட்டுநோய்வகை . |
| துள்ளலோசை | கலிப்பாவுக்குரிய ஓசை . |
| துள்ளாட்டம் | களிப்பு ; செருக்கு . |
| துள்ளி | திவலை . |
| துள்ளு | காண்க : துள் . |
| துள்ளுச்சீட்டு | அடைக்கலச்சீட்டு . |
| துள்ளுதல் | குதித்தல் ; தாவிச் செல்லுதல் ; செருக்கடைதல் ; மிகுதல் ; பதைத்தல் ; கவலையின்றித் திரிதல் . |
| துள்ளுப்பூச்சி | தானியத்தைக் கெடுக்கும் பயிர்ப்பூச்சிவகை . |
| துள்ளுமறி | ஆட்டுக்குட்டி . |
| துள்ளுமா | தேவதைகளுக்கு வெல்லத்துடன் கலந்து படைக்கும் மாவகை . |
| துள்ளொலி | அலை எழும் ஓசை . |
| துளக்கம் | அசைவு ; நடுக்கம் ; மனக்கலக்கம் ; குறைதல் ; சோதிநாள் ; ஒளி . |
| துளக்கு | அசைவு ; வருத்தம் . |
| துளக்குதல் | அசைத்தல் ; விளக்குதல் ; வணங்குதல் . |
| துளங்குதல் | அசைதல் ; நிலைகலங்குதல் ; தளர்தல் ; வருந்துதல் ; ஒலித்தல் ; ஒளிசெய்தல் . |
| துளங்கொளி | மிக்க ஒளி ; கேட்டைநாள் . |
| துளசி | காண்க : குழிமிட்டான் ; திருத்துழாய் . |
| துளசிமணி | திருமாலடியார் அணியும் துளசிக்கட்டையைக் கடைந்து செய்த மணி . |
| துளசிமாடம் | வழிபடப்படும் துளசியைக் கொண்ட மேடை . |
| துளசிமாலை | துளசியிலைக் கொத்தால் கட்டிய மாலை ; துளசிமணிமாலை . |
| துளபம் | காண்க : துளசி . |
| துளம் | காண்க : மாதுளை ; மயிலிறகின் அடி . |
| துளம்பிக்கிரி | ஆதொண்டைக்கொடி . |
| துளர் | பயிரின் களை ; களைக்கொட்டு . |
| துளர்தல் | நிலம் முதலியவற்றைக் கொத்துதல் ; மணம் முதலியன வீசுதல் . |
| துளவம் | காண்க : துளசி . |
| துளவன் | துளசி அணிந்த திருமால் . |
| துளவு | காண்க : துளவம் . |
| துளவை | துளை ; மூங்கிற்பற்றை . |
| துளாரி | நெய்வார் கருவியுள் ஒன்று . |
| துளி | திவலை ; மழை ; ஒரு சொட்டு அளவு ; சிறிதளவு ; நஞ்சு ; பெண்ணாமை ; துளித்தல் . |
| துளித்தல் | துளியாய் விழுதல் ; சொட்டுதல் ; மழைபெய்தல் . |
| துளிநசைப்புள் | மழைத்துளி விரும்பும் வானம்பாடி . |
| துளிர் | தளிர் . |
| துளிர்த்தல் | தளிர்த்தல் ; செழித்தல் . |
|
|
|