சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| துளு | துளுநாடு ; துளுநாட்டு மொழி . |
| துளுப்பிடுதல் | கலக்குதல் . |
| துளும்புதல் | அசைதல் ; தளும்புதல் ; துள்ளுதல் ; மேலெழுதல் ; திமிறுதல் ; வருந்துதல் ; விளங்குதல் ; மிகுதல் ; இளகுதல் ; சோதிவிடுதல் . |
| துளுவம் | காண்க : துளு . |
| துளுவவேளாளர் | துளுவ நாட்டிலிருந்து தொண்டைநாட்டிற்கு வந்து குடியேறிய வேளாளவகையினர் . |
| துளுவன் | ஒரு வாழைவகை ; துளுநாட்டான் . |
| துளை | தொளை ; உட்டுளை ; மூங்கில் ; வாயில் ; சுருட்சி ; வயிரக் குற்றங்களுள் ஒன்று . |
| துளைக்கருவி | உள்ளே துளையுடைய வாத்தியம் . |
| துளைக்கை | தும்பிக்கை . |
| துளைச்செவி | உட்செவி ; உட்செவியுள்ள உயிர்கள் . |
| துளைத்தல் | தொளைசெய்தல் ; ஊடுருவுதல் ; வருத்துதல் ; நுட்பமாய்க் கேட்டல் . |
| துளைதல் | நீரில் விளையாடுதல் ; அழுந்திக்கிடத்தல் . |
| துளைநிறை | காண்க : துளைப்பொன் . |
| துளைப்பு | துளைத்தல் ; இடைவிடாத்தொல்லை . |
| துளைப்பொன் | புடமிட்ட தூய பொன் . |
| துளையடித்தல் | துளைத்தல் ; தொளையுண்டாக்குதல் . |
| துளையம் | நீரில் துளைகை . |
| துற்கதம் | தொல்லை ; வறுமை . |
| துற்கதி | ஒடுங்கிய பாதை ; வறுமை ; கெட்டவிதி ; துன்பக்காலம் ; கெட்ட நடத்தை ; தீய வாழ்க்கை ; நரகம் . |
| துற்கை | காண்க : துர்க்காதேவி . |
| துற்பரிசம் | சிறுகாஞ்சொறி . |
| துற்றர் | உண்பவர் . |
| துற்றவை | நுகர்பொருள் . |
| துற்றி | உண்பவை . |
| துற்று | உணவு ; கவளம் ; கூட்டம் . |
| துற்றுதல் | உண்ணுதல் ; கவ்வுதல் ; குற்றுதல் ; நெருங்குதல் ; மேற்கொண்டு நடத்தல் . |
| துறக்கநாடு | சுவர்க்கம் , தேவருலகம் . |
| துறக்கம் | சுவர்க்கம் , தேவருலகம் . |
| துறட்டி | அங்குசம் ; காய் முதலியன பறிக்குந் துறட்டுக்கோல் ; சிக்கு ; காண்க : துறட்டிச்செடி . |
| துறட்டிச்செடி | ஒரு முட்செடிவகை . |
| துறட்டிபோடுதல் | இரகசியத்தை உசாவி உளவறிதல் ; தன்வயப்படுத்த முயலுதல் . |
| துறட்டிரும்பு | இரும்புக்கொக்கி . |
| துறட்டு | முள்மரவகை ; சிறுமரவகை ; சிக்கல் ; கேடு . |
| துறட்டுக்கோல் | காய் முதலியன பறிக்க உதவும் கோல்வகை . |
| துறட்டுப்பிடி | காண்க : துறட்டுவாதம் . |
| துறட்டுமுள் | இரும்புக்கொக்கி ; துறட்டிச்செடி . |
| துறட்டுவாதம் | பிடிவாதம் . |
| துறடு | அங்குசம் ; காய் முதலியன பறிக்கும் துறட்டுக்கோல் ; சிக்கு . |
| துறத்தல் | கைவிடுதல் ; பற்றற்றுத் துறவுபூணுதல் ; நீங்குதல் . |
| துறந்தார் | பற்றுவிட்ட முனிவர் . |
| துறந்தோர் | பற்றுவிட்ட முனிவர் . |
| துறப்பணம் | துளையிடும் தச்சுக்கருவி . |
| துறப்பணவலகு | துறப்பணக்கோலிலுள்ள ஊசி . |
| துறப்பு | பிரிவு ; துறவு ; பூட்டு ; திறவுகோல் ; விடுதல் ; துறவிகளுக்கு விதித்துள்ள அறம் . |
| துறம் | காண்க : துறவு . |
| துறவர் | முனிவர் ; துறந்தவர் . |
| துறவறம் | இல்லறந்துறத்தல் ; பற்றற்ற நிலை ; துறவியருக்கு விதித்துள்ள அறம் . |
| துறவி | சன்னியாசி ; சன்னியாசம் ; துறவியருக்கு விதித்துள்ள அறம் . |
| துறவு | விடுதல் ; இரகசியம் ; வாய்ப்பான நிலை ; வெளியிடம் ; சன்னியாசம் ; துறவியருக்கு விதித்துள்ள அறம் . |
| துறவோர் | முனிவர் . |
| துறு | நெருக்கம் ; உண்ணுகை ; செம்பூரான்கல் . |
| துறுகல் | பாறை ; குன்று ; நீர்க்கால் அடைக்குங்கல் . |
| துறுட்டி | ஏலவகை . |
| துறுத்தல் | அமைத்தல் ; அமுக்கல் ; திணித்தல் ; வெளியே நீளல் . |
| துறுதல் | நெருங்குதல் ; குவிதல் ; அடைதல் ; சூட்டுதல் . |
| துறுதுறுவெனல் | காண்க : துருதுருவெனல் . |
| துறுபடை | போர்ப்படை . |
| துறுபவம் | நெருக்கம் . |
| துறும்புதல் | காண்க : துறுமுதல் . |
| துறுமல் | நெருக்கம் ; திரட்சி . |
| துறுமுதல் | நெருங்குதல் ; திரட்டல் . |
| துறுவல் | நெருங்குகை ; நுகர்ச்சி ; உண்ணல் . |
| துறுவுதல் | நெருங்குகை ; நுகர்ச்சி ; உண்ணல் . |
| துறை | இடம் ; நீர்த்துறை ; நியாயவழி ; பகுதி ; உபாயம் ; சபை கூடுமிடம் ; ஆறு ; வண்ணார்துறை ; கடல் ; கடற்றுறை ; நூல் ; வரலாறு ; அகமும் புறமும்பற்றிய பொருட்கூறு ; பாவினங்களில் ஒன்று ; அலுவலகத் துறை , இலாகா . |
| துறைக்குறை | ஆற்றிடைக்குறை , துருத்தி . |
| துறைகாட்டுதல் | வழிகாட்டுதல் . |
| துறைகூட்டுதல் | துறைமுழுக்கைப் பூர்த்திசெய்தல் . |
| துறைத்தோணி | கரைகடத்துந் தோணி . |
| துறைப்பேச்சு | கொச்சைப்பேச்சு ; நாட்டு மொழி . |
| துறைபடிதல் | நீர்நிலைகளில் நீராடுதல் . |
| துறைபிடித்தல் | துறைமுகம் சேர்தல் ; வழிவகை ; தேடுதல் ; மனத்துக்கு ஏற்றதாதல் . |
| துறைபோதல் | நிரம்புதல் ; செயல் முடிவாதல் ; முழுமையுங் கற்றுத்தெளிதல் . |
| துறைமாறுதல் | முன் பயின்றதனைவிட்டு வேறு தொழிலில் புகுதல் ; வழிதவறுதல் . |
| துறைமுகம் | கப்பல்கள் வந்து தங்கும் கடற்றுறை ; கடற்கரைப்பட்டினம் . |
| துறைமுழுக்கு | ஐப்பசித் திங்களில் பெண்கள் ஆற்றில் முறைப்படி நீராடுகை ; துறை மூழ்கல் . |
|
|
|