சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தூமரதம் | புகைவண்டி . |
தூமலம் | காண்க : தூமிரம் ; பாவம் . |
தூமான் | அணிகலச்செப்பு ; அரியணை . |
தூமியம் | புகை . |
தூமிரகம் | ஒட்டகம் . |
தூமிரம் | கருஞ்சிவப்பு . |
தூமை | மகளிர் சூதகம் ; காண்க : தூய்மை ; வெண்மை . |
தூய்தன்மை | தூய்மையின்மை ; தீட்டு . |
தூய்து | தூய்மையானது . |
தூய்மை | துப்புரவு ; மெய்மை ; வீடுபேறு ; நன்மை ; வெண்மை . |
தூய | தூய்மையான , பரிசுத்தமான . |
தூயவன் | மாசிலான் ; திருமால் . |
தூயவுடம்பினனாதல் | இறைவன் எண்குணத்துள் பரிசுத்தத் திருமேனியனாம் தன்மை . |
தூயவெள்ளை | நல்ல வெள்ளை , கலப்பற்ற வெள்ளை . |
தூயன் | காண்க : தூயவன் . |
தூயாள் | பரிசுத்தமானவள் ; கலைமகள் . |
தூர் | வேர் ; அடிப்பக்கம் ; பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி ; அடிமரம் ; பாத்திரத்தினடிப்புறம் ; சேறு ; கிணற்றில் தேங்கியவண்டல் முதலிய கசடுகள் ; பனைவடலி முதலியன ; பழிச்சொல் . |
தூர்க்கை | பூரநாள் . |
தூர்கட்டுதல் | மரம் செடி முதலியன அடிபருத்து எழுதல் ; கொத்தாய்க் கிளைத்தெழுதல் . |
தூர்ச்சடி | பாரமான சடையையுடைய சிவபெருமான் . |
தூர்த்தம் | தீநெறி ; ஊமத்தஞ்செடி ; அரப்பொடி . |
தூர்த்தல் | அடைத்தல் ; மறைத்தல் ; உட்செலுத்துதல் ; மிகப்பொழிதல் ; பெருக்கித் துப்புரவுசெய்தல் . |
தூர்த்தன் | காமுகன் ; பரத்தமைகொண்டு ஒழுகுவோன் ; கொடியோன் . |
தூர்த்தை | காமவெறி பிடித்தவள் , கற்பில்லாதவள் . |
தூர்தல் | நிரம்புதல் ; நெருங்குதல் ; அடைபடுதல் ; மறைதல் ; அழிதல் . |
தூர்மம் | தேட்கொடுக்கிச்செடி . |
தூர்வகம் | பொதிமாடு ; சுமக்கை . |
தூர்வாரி | கிணறுகளில் தூர்வாரியெடுப்பவன் . |
தூர்வாருதல் | கிணறுகளில் படிந்த சேற்று வண்டலை வாரி எடுத்தல் . |
தூர்வு | கிணறு முதலியன சேற்றால் அடைபடுதல் . |
தூர்வை | கிணற்றடை தூர் ; கிணற்றைச் சார்ந்த நிலம் ; கொத்தப்பட்ட மண் ; அறுகம்புல் ; செத்தை . |
தூர்வைசெய்தல் | நிலத்தை வெட்டித் திருத்துதல் . |
தூர்வைத்தைலம் | அறுகம்புல்லுத் தைலம் . |
தூர்வைப்படுத்துதல் | காண்க : தூர்வைசெய்தல் . |
தூர்னா | அறுகு . |
தூர | விலக . |
தூரக்காரி | வீட்டுக்கு விலக்கானவள் . |
தூரகமணம் | தொலைதூர நாட்டுப் பயணம் . |
தூரகாரி | வருகாரியம் அறிவோன்(ள்) . |
தூரதரிசி | முக்காலமுணர்வோன் , தீர்க்கதரிசி ; பண்டிதன் ; பருந்து . |
தூரதிட்டி | சேய்மைப் பார்வை ; முன்னுணர்ச்சி ; தீர்க்கதரிசி . |
தூரம் | சேய்மை ; புறம்பு ; மகளிர் தீட்டு ; தூரத்து உறவு ; ஓர் இசைக்கருவி ; ஊமத்தஞ்செடி ; சிறுமரவகை ; வேறுபாடு . |
தூரல் | நிறைகை ; துன்பம் . |
தூரவுறவு | தொடர்பில்லாத உறவுமுறை . |
தூராதிதூரம் | மிக்க தொலைவு . |
தூராதூரம் | வெவ்வேறு தொலைவு ; நெடுந்தொலைவு . |
தூரி | பலகறை ; சிறுதூம்பு ; காண்க : தூரிகை ; தூரிவலை ; எருது ; ஊசல் ; தூரியம் என்னும் ஒரு வாத்தியவகை . |
தூரிகை | எழுதுகோல் . |
தூரிது | சேய்மையானது . |
தூரிய | தொலைவான . |
தூரியம் | பறைப்பொது ; மங்கலப்பறை ; முரசு ; பொதியெருது ; எழுதுகோல் ; கைவேல் ; நல்லாடை ; ஈயம் ; நஞ்சு . |
தூரியன் | தூரத்திலுள்ளவன் . |
தூரு | காண்க : தூர் . |
தூருதல் | அடைபடுதல் ; நிரம்புதல் , மலங்கழித்தல் . |
தூரேத்தி | கம்பந்திராய்ப் பூண்டு . |
தூரோணம் | கவிழ்தும்பைச்செடி . |
தூலகம் | பருத்தி . |
தூலகன்மம் | உள்ளம் உரை உடல்களால் (மனம்வாக்கு காயங்களால்) செய்யப்படும் செயல் . |
தூலகாலம் | வாழ்நாள் . |
தூலசர்க்கரை | உப்பு ; பருத்திவிதை . |
தூலசருக்கரை | உப்பு ; பருத்திவிதை . |
தூலசரீரம் | உண்டானவுடல் ; நுண்ணுடலைப் போர்த்தியிருக்கும் ஐம்பூத பரிணாமத்தால் உண்டான பருவுடல் . |
தூலசித்து | சீவான்மா , உயிர் . |
தூலதேகம் | காண்க : தூலசரீரம் . |
தூலம் | பருத்தி ; இலவமரம் ; பஞ்சு ; கோரைப்புல் ; நீர்முள்ளிச்செடி ; பருமை ; வானம் ; கண்ணுக்குப் புலனாவது ; வீட்டினுத்திரம் ; நெற்போரடிக்கும் கோல் ; நஞ்சு ; பொதுமை . |
தூலலிங்கம் | கோபுரம் ; சிவாலயம் . |
தூலி | காண்க : தூரிகை ; அன்னத்தின் இறகு ; மெத்தை ; விளக்குத்திரி . |
தூலிகை | காண்க : தூரிகை ; அன்னத்தின் இறகு ; மெத்தை ; விளக்குத்திரி . |
தூலித்தல் | பருத்தல் ; பெருகுதல் . |
தூலினி | காண்க : இலவு . |
தூலை | பருத்தி . |
தூவத்தி | வாள் . |
தூவரம் | துவர்ப்பு ; காளை ; கொம்பில்லா விலங்கு . |
தூவல் | தூவுகை ; மழை ; இறகு ; எழுதும் இறகு ; பேனா ; அம்பின் இறகு ; ஓவியந்தீட்டுங்கோல் ; துவலை . |
தூவழி | பண்வகை . |
![]() |
![]() |
![]() |