தெய்வக்காப்பு முதல் - தெய்வீகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தெய்வக்காப்பு பாட்டுடைத் தலைவனைத் தெய்வம் காக்க எனக் கூறும் பிள்ளைத்தமிழ்ப் பகுதி .
தெய்வக்கிளவி தெய்வத்தின் திருவாக்கு .
தெய்வக்குற்றம் பூசை முதலியன செய்யாமையால் வரும் தெய்வக்கோபம் .
தெய்வக்குறை பூசை முதலியன செய்யாமையால் வரும் தெய்வக்கோபம் .
தெய்வகடாட்சம் தெய்வத்தின் திருவருள் .
தெய்வகணம் தேவக்கூட்டம் .
தெய்வகளை தெய்வவிளக்கம் .
தெய்வகற்பனை தெய்வக் கட்டளை ; விதி .
தெய்வகாரியம் தெய்வத்துக்குச் செய்யும் திருப்பணி .
தெய்வகுஞ்சரி காண்க : தெய்வயானை .
தெய்வங்கொண்டாடி தெய்வம் ; பேய் முதலியவற்றால் ஆவேசிக்கபட்டு ஆடுபவன் , வெறியாடுபவன் .
தெய்வங்கொள்கை கடவுள் உண்டு என்னும் கொள்கை .
தெய்வச்சாயல் காண்க : தெய்வகளை .
தெய்வச்சிலையான் திருப்புல்லாணியில் கோயில் கொண்டுள்ள திருமால் .
தெய்வச்செயல் தெய்வத்தின் செய்கை ; எதிர்பாராது நிகழ்கை .
தெய்வசகாயம் கடவுள் துணை .
தெய்வசங்கற்பம் தெய்வத்தின் தீர்மானம் .
தெய்வசாட்சி கடவுள் சாட்சி .
தெய்வசிந்தனை கடவுள் நினைப்பு .
தெய்வசுரபி காமதேனு .
தெய்வசோதனை கடவுளின் சோதிப்பு .
தெய்வஞ்செப்புதல் கடவுளைத் துணைவேண்டி வழிபடுதல் .
தெய்வஞானம் தெய்வத்தைப்பற்றிய அறிவு .
தெய்வத்தச்சன் தேவலோகத்துச் சிற்பியான விசுவகன்மா .
தெய்வத்தரு காண்க : தேவதாரு .
தெய்வத்தன்மை கடவுளின் இயல்பு .
தெய்வத்தானம் கடவுட்கோயில் , தேவாலயம் .
தெய்வத்துவம் கடவுள் தன்மை .
தெய்வத்துவனி தேவர் அருகதேவருக்குச் செய்யும் சிறப்புகளுள் ஒன்று .
தெய்வதம் தெய்வம் ; ஆண்டு .
தெய்வதயானை காண்க : தெய்வயானை .
தெய்வதலம் கோயில் ; திருப்பதி .
தெய்வதுந்துமி தேவலோகத்து முரசு .
தெய்வதூடணம் கடவுள் நிந்தனை .
தெய்வதை கடவுள் ; பேய் .
தெய்வநதி கங்கையாறு .
தெய்வப்பசு காமதேனு .
தெய்வப்பாவை காண்க : கொல்லிப்பாவை .
தெய்வப்பிரமம் தெய்வத் தன்மையுடைய பிரமவீணை .
தெய்வப்பிறப்பு தெய்வத்தினிடமிருந்து பிறக்கும் பிறப்பு ; தெய்வக் கூறான பிறப்பு .
தெய்வப்பிறவி தெய்வத்தினிடமிருந்து பிறக்கும் பிறப்பு ; தெய்வக் கூறான பிறப்பு .
தெய்வப்புணர்ச்சி முன்பின் அறியாத ஆணும் பெண்ணும் எதிர்பாராத நிலையில் கண்டு காதலித்துக் கூடும் கூட்டம் .
தெய்வப்புலமை தெய்வ அருளினால் வந்த புலமை ; தெய்வத்தன்மை வாய்ந்த புலமை .
தெய்வப்புள் தெய்வத்தன்மையுள்ள பறவையான கருடன் .
தெய்வப்பெண் தேவலோகத்துப் பெண் .
தெய்வபத்தி கடவுளிடத்தில் செய்யும் அன்பு .
தெய்வபயம் கடவுளாணைக்கு அஞ்சுதல் .
தெய்வம் கடவுள் ; ஊழ்வினை ; தெய்வத்தன்மை ; எண்வகை மணத்துள் ஒன்றாகிய தெய்வமணம் ; தெய்வச்செயல் ; ஆண்டு ; புதுமை ; தெய்வத்தன்மை உள்ளது ; மணம் .
தெய்வமணம் மிக மேலான மணம் ; காண்க : தெய்வப்புணர்ச்சி : வேள்வி செய்விக்கும் ஆசிரியன் ஒருவனுக்குத் தன் பெண்ணை அலங்கரித்து அந்த வேள்வித்தீயின் முன்னர்க்கொடுப்பது .
தெய்வமணி சிந்தாமணி ; இழிந்த தாதுப் பொருள்களைப் பொன்னாக்கும் மருந்து ; குதிரைக் கழுத்திலுள்ள நற்சுழி ; நற்சுழியுள்ள குதிரைவகை .
தெய்வமந்திரி தேவர்களுக்குரிய அமைச்சனான வியாழன் .
தெய்வமயக்கம் தெய்வ ஆவேசம் ; தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம் .
தெய்வமயக்கு தெய்வ ஆவேசம் ; தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம் .
தெய்வமரம் கற்பகதரு ; தேவதாருமரம் .
தெய்வமாடம் தெய்வத் திருக்கோயில் .
தெய்வமாடுதல் தெய்வம் ஏறப்பெறுதல் .
தெய்வமானுடம் தெய்வத்தன்மையோடு கூடிய மானுடத்தன்மை .
தெய்வமுறுதல் ஆவேசமடைகை ; தெய்வத்தன்மை பெறுகை .
தெய்வமேயென்று எவ்வகை உதவியுமின்றிக் கடவுளே கதியாக ; பிறர் செயல்களில் தலையிடாமல் ; வாளா .
தெய்வமேறுதல் காண்க : தெய்வமுறுதல் .
தெய்வயாகம் கடவுளரின்பொருட்டுச் செய்யப்படும் வேள்வி .
தெய்வயானை இந்திரனின் யானையாகிய ஐராவதம் ; முருகப்பெருமானின் தேவியருள் ஒருத்தி .
தெய்வயானைகாந்தன் தெய்வயானையின் கணவனான முருகக்கடவுள் .
தெய்வலோகம் மேலுலகம் ; துறக்கம் .
தெய்வவணக்கம் கடவுளை வணங்குகை ; நூலின் முதலில் கூறப்படும் கடவுள் வாழ்த்து .
தெய்வவாக்கு கடவுளின் திருவாக்கு ; உருவிலிவாக்கு .
தெய்வவிசுவாசம் கடவுள் உண்டு என்னும் கொள்கை ; கடவுளிடம் நம்பிக்கை ; கடவுளிடத்துக் காட்டுவதுபோன்று காட்டும் நம்பிக்கை .
தெய்வவிரதன் சிறப்புமிக்க நோன்பைக் கொண்ட வீடுமன் .
தெய்வவீடு விமானம் .
தெய்வவுத்தி சீதேவி என்னும் தலைக்கோலம் .
தெய்வாதனம் ஒருகால் மடித்து ஒருகால் ஊன்றியிருக்கும் இருப்புநிலை .
தெய்வாதீனம் தெய்வச்செயல் ; தற்செயல் , எதிர்பாரா நிகழ்ச்சி .
தெய்வாவி பரிசுத்த ஆவி .
தெய்விகம் தெய்வத்தன்மையுள்ளது ; தெய்வச்செயல் தற்செயல் ; மகிமை ; ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு .
தெய்வீகம் தெய்வத்தன்மையுள்ளது ; தெய்வச்செயல் தற்செயல் ; மகிமை ; ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு .