தோதம் முதல் - தோலுழிஞை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தோதம் பசுவின் கன்று ; வருத்தம் .
தோதனம் அங்குசம் ; ஈட்டி .
தோது ஏந்து , வசதி ; பொருத்தம் ; ஒப்பு ; வீதம் ; உபாயம் ; தொடர்பு ; போட்டி .
தோப்பாடி துட்டன் , தீயன் .
தோப்பாண்டி திருநந்தவனப் பணி செய்யும் பரதேசி .
தோப்பி நெல்லாற் சமைத்த கள் ; கள் .
தோப்பு சோலை .
தோப்புக்கண்டம் இருகை மாறிச் செவியைப் பிடித்து இருகால் முடக்கியிருந்து எழுதல் ; பிறர் சொன்னபடியெல்லாம் நடத்தல் .
தோப்புகரணம்போடுதல் இருகை மாறிச் செவியைப் பிடித்து இருகால் முடக்கியிருந்து எழுதல் ; பிறர் சொன்னபடியெல்லாம் நடத்தல் .
தோப்பை திண்மையின்றிப் பருத்தது ; தொங்குசதை .
தோம் குற்றம் ; தீமை ; துன்பம் .
தோம்பு சிவப்பு ; நிலவிவரக் கணக்கு .
தோமம் கூட்டம் ; சாமவேதத்தின் தொகுதி வகை .
தோமரம் எறியாயுதம் ; கைவேல் ; தண்டாயுதம் ; ஒரு வாச்சியவகை .
தோய்ச்சல் உறைகை ; இரும்பைத் துவைச்சலிடுகை .
தோய்த்தல் நனைத்தல் ; துவைச்சலிடுதல் ; சாயமேற்றுதல் ; ஆடைதுவைத்தல் ; உறையச் செய்தல் .
தோய்தல் முழுகுதல் ; நனைதல் ; நிலத்துப்படிதல் ; செறிதல் ; அணைதல் ; உறைதல் ; கலத்தல் ; பொருத்துதல் ; முகத்தல் ; கிட்டுதல் ; ஒத்தல் ; அகப்படுதல் ; நட்டல் ; துவைச்சலிடுதல் .
தோய்ந்தார் நண்பர் .
தோய்ப்பன் சுகியன் என்னும் பணிகாரம் .
தோய்ப்பாடி தீயன் .
தோய்ப்பு காண்க : தோய்ச்சல் .
தோய்பனி மிகுபனி .
தோயசம் தாமரை .
தோய்சூசகம் தவளை .
தோயதம் மேகம் ; வெண்ணெய் ; நெய் .
தோயதரம் நீரைக்கொண்டதான மேகம் .
தோயதி கடல் .
தோயதிப்பிரயம் காண்க : இலவங்கம் .
தோயப்பம் சுகியன் ; தோசை .
தோயபாணம் காண்க : பொடுதலை .
தோயம் நீர் ; கடல் .
தோயல் தோய்தல் ; கலத்தல் ; குளித்தல் ; தயிர் .
தோயல்வாய்த்தல் சமயம்வாய்க்கை .
தோர்த்தல் தோல்வியுறல் ; ஒப்பில் தாழ்தல் ; இணங்குதல் ; இழத்தல் .
தோர்வை தோல்வி .
தோரணக்கந்து கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்கார வளைவைத் தாங்கி நிற்கும் தூண் ; அலங்காரத் தொங்கல் கட்டும் கால் .
தோரணக்கல் நீர் ஆழம் அறியுங் கல் .
தோரணக்கால் காண்க : தோரணகம்பம் ; அலங்காரத் தொங்கல் கட்டும் கால் ; திருவாசிக்கால் .
தோரணகம்பம் காண்க : தோரணக்கந்து .
தோரணம் அலங்காரவாயில் ; தெருவில் குறுக்காகக் கட்டும் அலங்காரத் தொங்கல் ; ஊர்தி ; குரங்கு ; நீராடுமிடத்திற் கட்டும் வரம்பு ; தராசுதாங்கி ; யானைநடை .
தோரணவாயில் அலங்கார வளைவுள்ள வாயில் .
தோரணவீதி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெரு .
தோரணன் யானைப்பாகன் .
தோரணி நல்லொழுங்கு ; முறை .
தோரணை நல்லொழுங்கு ; முறை .
தோரணிக்கம் நல்லொழுங்கு ; முறை .
தோரத்தம் தொந்தரவு ; கட்டாயம் ; சண்டையிடும் குணம் .
தோராயம் எதிர்பார்ப்பு , உத்தேசம் .
தோராவழக்கு ஓயாத வழக்கு .
தோரி சோறு .
தோரியம் கூத்து ; வாச்சியம் .
தோரியமகள் நாட்டியம் ஆடி முதிர்ந்தவள் .
தோரியமடந்தை நாட்டியம் ஆடி முதிர்ந்தவள் .
தோரை ஒரு மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; கைவரை ; இரத்தம் ; மங்கல்நிறம் ; ஒருபனை வகை ; மயில்விசிறி ; நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை ; அணிவிடம் .
தோல் சருமம் ; உடம்பின் ; மேலுள்ள தோல் ' புறணி ; விதையின் மேற்றோல் ; கேடகம் ; துருத்தி ; மெல்லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யும் நூல் ; புகழ் ; அழகு ; சொல் ; யானை ; தோல்வி ; நற்பேறின்மை ; உடம்பு ; பக்கரை ; மூங்கில் .
தோல்முட்டை கருவில்லாத முட்டை ; தோடு கடினமாவதற்கு முன் இடப்பட்ட முட்டை .
தோல்வி வெற்றியின்மை .
தோல்வினைஞர் சங்கிலியர் , செம்மார் .
தோல்வினைமாக்கள் சங்கிலியர் , செம்மார் .
தோல்வு காண்க : தோல்வி .
தோலடிப்பறவை தோலால் இணைக்கப்பட்ட காலுள்ள பறவை .
தோலன் புல்லன் , அற்பன் .
தோலான் புல்லன் , அற்பன் .
தோலனம் நிறுத்தல் .
தோலா ஒரு ரூபாஎடை .
தோலாட்டம் கயமைத்தனம் .
தோலாண்டி இழிஞன் .
தோலாநாவினர் நாவன்மையுடையவர் .
தோலாமை ஈடழியாமை , தோல்வியின்மை .
தோலாவழக்கு முடிவுபெறாத வழக்கு .
தோலாள் பயனற்றவள் .
தோலி ஒரு மீன்வகை ; அரக்கு ; பழத்தோல் .
தோலிகை ஊஞ்சல் ; காது .
தோலின்துன்னர் தோல்வேலை செய்வோர் .
தோலுழிஞை கிடுகுபடையைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை .