சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நாடகம் | கலை அறுபத்து நான்கனுள் ஒன்று ; காண்க : நாடகத்தமிழ் ; கதை மாந்தர்களின் வடிவம் பூண்டு ஒரு கதையை நடந்ததுபோல் நடித்துக்காட்டுவது . |
| நாடகமகள் | நாடகமாடுங் கணிகை . |
| நாடகமாடுதல் | கூத்து நடித்தல் . |
| நாடகமேடை | நாடகமாடும் அரங்கு . |
| நாடகர் | கூத்தர் . |
| நாடகவழக்கு | நாடகத்திற்குரிய நெறி ; புனைந்துரை வழக்கு . |
| நாடகவிருத்தி | சாத்துவதி , ஆரபடி , கைசிகி , பாரதி என்னும் நால்வகை நாடகநடை . |
| நாடகன் | நடனமாடுவோன் . |
| நாடகாங்கம் | அபிநயம் . |
| நாடகியர் | கூத்தர் . |
| நாடல் | ஆராய்தல் . |
| நாடவர் | தேசத்தார் . |
| நாடறிவான் | நாடுகளை அறிபவனான சந்திரன் . |
| நாடன் | தேசத்தான் ; ஆளுந்தலைவன் ; குறிஞ்சி நிலத் தலைவன் ; கார்த்திகைநாள் . |
| நாடன்பருத்தி | ஒரு செடிவகை . |
| நாடா | நெசவுக்கருவிவகை ; நூற்பட்டை ; அணி வகை . |
| நாடி | நாட்டிலுள்ளவள் ; நாட்டையுடையவள் ; இரத்தக்குழாய் முதலியன ; மூச்சுக்குழாய் யாழின் நரம்பு ; உட்டொளை ; பூவின் தாள் ; நாழிகை ; மூக்கு ; மோவாய் ; மாளிகையின் மேற்பாகத்தோர் உறுப்பு ; சோதிடநூல் ; தாதுநரம்பு ; இலைநரம்பு . |
| நாடிகேளம் | காண்க : நாளிகேர(ள)ம் . |
| நாடிதாரணை | நாடிகளின் நாடைமுறை . |
| நாடிநரம்பு | நாடியோட்ட நரம்பு . |
| நாடிப்பரீட்சை | நாடியைச் சோதித்து அறிகை . |
| நாடிபார்த்தல் | தாது பார்த்தல் . |
| நாடிமண்டலம் | சூரியவீதி . |
| நாடியொடுங்குதல் | தாதுவின் ஒடுக்கம் ; ஊக்கமிழத்தல் . |
| நாடிவிழுதல் | தாதுவின் ஒடுக்கம் ; ஊக்கமிழத்தல் . |
| நாடு | நாட்டுப்பகுதி ; இடம் ; பூமி ; உலகம் ; நாட்டுப்புறம் ; மருதநிலம் ; பக்கம் ; இடப்பரப்பு ; பூவுலகப்பொது ; ஒரு பேரெண் . |
| நாடுசார்நிலம் | நாட்டின் பக்கத்திலுள்ள கழனி முதலியவை . |
| நாடுதல் | தேடுதல் ; ஆராய்தல் ; விரும்புதல் ; தெரிதல் ; ஒத்தல் ; அளத்தல் ; கிட்டுதல் ; நினைத்தல் ; மோப்பம்பிடித்தல் ; அளவு படுதல் . |
| நாடுபடுதிரவியம் | நாட்டிலுண்டாகும் பொருள்களான செந்நெல் , செவ்விளநீர் , சிறுபயறு , ஆனெய் , வாழை , கரும்பு . |
| நாடுபிடித்தல் | நாட்டை வென்று கைக்கொள்ளுதல் ; குத்தகையெடுத்தல் . |
| நாடுரி | ஒன்றரை நாழிகொண்ட முகத்தல் அளவை . |
| நாடேயன் | நாடகக் கணிகையின் மகன் . |
| நாடோடி | ஊர்சுற்றித் திரிபவன் ; நாட்டுக்குரியது ; சாதாரண வழக்கில் உள்ளது . |
| நாடோடிப்பேச்சு | வழக்குச்சொல் ; சாதாரணப் பேச்சில் வழங்கும் மொழி . |
| நாடோறும் | தினமும் . |
| நாண் | வெட்கம் ; மகளிர்க்குரிய கூச்சம் ; வில்நாண் ; கயிறு ; மாங்கலியங் கோத்த சரடு ; காண்க : அரைஞா(நா)ண் . |
| நாண்ஞாயிறு | காலை . |
| நாண்புடை | வில்லின் நாணொலி . |
| நாண்பூட்டுதல் | காண்க : நாணேற்றுதல் . |
| நாண்மகிழ் | நாளோலக்கம் . |
| நாண்மகிழிருக்கை | நாளோலக்கம் . |
| நாண்மங்கலம் | அறம் விளைக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை ; அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம் . |
| நாண்மதி | முழுநிலா . |
| நாண்மதியம் | முழுநிலா . |
| நாண்மலர் | அன்றலர்ந்த பூ . |
| நாண்மீன் | அசுவினி முதலிய விண்மீன் . |
| நாண்முதல் | அதிகாலை . |
| நாண்முல்லை | போரின்பொருட்டுக் கணவன் பிரிந்த இல்லிலே தலைவி தற்காத்துத் தங்கிய நிலைமை கூறும் புறத்துறை . |
| நாண்முழவு | காலை முரசு ; நாழிகைப் பறை . |
| நாண்மேயல் | காலை மேய்ச்சல் . |
| நாண்மை | வெட்கம் ; மகளிர் கூச்சம் . |
| நாணக்கேடு | வெட்கமின்மை . |
| நாணகம் | நாணயம் . |
| நாணநாட்டம் | தலைவி நாணும் வகையால் அவளுக்குத் தலைவனுடன் கூட்டமுண்மையை ஆராய்ந்தறிகை . |
| நாணம் | வெட்கம் ; அறிவு ; பயபக்தி ; மானம் ; தணிகை ; கூச்சம் ; மகடூஉக் குணம் நான்கனுள் ஒன்று . |
| நாணயக்காரன் | காசுக்கடைக்காரன் ; செயலில் நேர்மையாக நடப்பவன் . |
| நாணயஞ்செலுத்துதல் | செயலில் தகுதிகாட்டுதல் . |
| நாணயத்தப்பு | நேர்மை தவறுகை . |
| நாணயம் | நேர்மை ; மனச்சாட்சி ; செயல் முதலியன குறித்த பயன் தவறாமை ; நேர்த்தியானது ; முத்திரையிடப்பட்ட காசு ; கட்டுப்பாடு ; விலங்கின் மூக்கிலிடுங் கயிறு ; இயற்கை நிகழ்ச்சி . |
| நாணயவான் | நேர்மை தவறாதவன் . |
| நாணயவேலை | நேர்த்தியான வேலை . |
| நாணல் | ஒரு புல்வகை ; வெட்கப்படுதல் ; வளைதல் ; தருப்பைவகை . |
| நாணற்கரும்பு | கரும்புவகை . |
| நாணாளும் | தினந்தோறும் . |
| நாணி | நாணமுடையாள் ; வில்நாண் . |
| நாணிக்கொள்ளுதல் | காண்க : நான்றுகொள்ளுதல் . |
| நாணித்தல் | நாணுதல் . |
| நாணிலி | நாணம் அற்றோர் . |
| நாணிழல் | காலைநிழல் . |
| நாணீர் | புதுப்புனல் . |
| நாணு | நாணம் . |
| நாணுகம் | குதிரை . |
| நாணுதல் | வெட்கப்படுதல் ; மனங்குன்றுதல் ; பயபக்தி காட்டுதல் ; அஞ்சுதல் ; பிணங்குதல் ; அடங்குதல் ; குவிதல் . |
| நாணுவம் | நாகணவாய்ப்புள் . |
| நாணுவரையிறத்தல் | பத்து அவத்தையுள் நாண் நீங்குதலாகிய அவத்தைவகை . |
|
|
|