நாணெறிதல் முதல் - நாமசங்கீர்த்தனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நாணெறிதல் நாணைத் தெறித்து ஒலியெழுப்புதல் .
நாணேற்றுதல் வில்லை வளைத்து நாணைக் கொளுவுதல் .
நாணேறிடுதல் வில்லை வளைத்து நாணைக் கொளுவுதல் .
நாணையம் காண்க : நாணயம் .
நாத்தலைமடிவிளி சீழ்க்கை .
நாத்தழும்பிருத்தல் பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் .
நாத்தழும்புதல் பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் .
நாத்தழும்பேறுதல் பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் .
நாத்தனார் கணவனுடன் பிறந்தாள் .
நாத்தனாள் கணவனுடன் பிறந்தாள் .
நாத்தாங்கி காண்க : நாதாங்கி ; இலைக்கள்ளி வகை .
நாத்தாங்கிப்பேசுதல் எண்ணிப் பேசுதல் ; நாக்குழறிப் பேசுதல் .
நாத்தி கணவனுடன் பிறந்தவள் ; ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள் மற்றொன்றுக்கு இல்லாதாகை ; இன்மை ; அழிவு ; தாழ்வாரம் .
நாத்திகம் கடவுள் இல்லை என்னும் கொள்கை ;தெய்வ நிந்தனை .
நாத்திகன் கடவுளும் இருவினைப் பயனும் இல்லை என்னும் கொள்கை உள்ளவன் ; சமய ஒழுக்கம் அற்றவன் .
நாத்தூண் காண்க : நாத்தனார்(ள்) .
நாதக்குடம் சங்கு .
நாதக்குமிழ் விந்து தங்கும் உடலுறுப்பு .
நாதக்குழல் ஊதுகருவி ; விந்துக்குழல் .
நாதகிருத்தியர் நற்செயல்கட்கு அனுப்பப்படும் தேவதூதர் .
நாதகீதன் சிவபிரான் .
நாததத்துவம் ஞானசத்தியின் இருப்பிடமும் சுத்த தத்துவங்களுள் ஒன்றுமாகிய தத்துவம் .
நாதம் சத்தம் ; ஒலி ; வாச்சிய ஒசை ; இசைப்பாட்டு ; சிவபிரானது ஒன்பதுவகை மூர்த்தங்களுள் ஒன்று ; பாதி வட்டமான மந்திரலிபி ; தலைவனையுடைமை ; செம்பால் , சோணிதம் .
நாதரவி உடற்கொழுப்பு .
நாதரரூபதரை பார்வதி .
நாதரூபம் சிவனது ஒலிவடிவு .
நாதவத்தம் காண்க : யானைநெருஞ்சி .
நாதவுப்பு பூமியில் உண்டாகும் உப்பு .
நாதன் தலைவன் ; அரசன் ; கணவன் ; முனிவன் ; குரு ; இறைவன் ; சிவன் ; அருகன் ; தமையன் .
நாதாக்கள் ஞானியர் .
நாதாக்கியை காண்க : நாதரூபதரை .
நாதாங்கி பூட்டு , தாழ்ப்பாள் , சங்கிவி இவற்றை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு .
நாதாந்தம் ஞானநெறிகளுள் ஒன்று .
நாதாந்தன் சிவன் .
நாதாந்தி பொன்னிமிளை .
நாதார் ஏழைக்குடிகள் .
நாதான் தலைவன் .
நாதி ஞாதி ; உறவினன் ; காப்பாற்றுவோன் ; பெருங்காயவகை .
நாதிக்காரன் ஞாதி ; உறவினன் .
நாதித்தல் ஒலியெழுதல் ; ஒலியெழுப்புதல் .
நாதியன் காண்க : நாதான் .
நாதேயம் காண்க : வஞ்சிக்கொடி ; சீந்திற் கொடி ; துரிசு ; இந்துப்பு .
நாந்தகம் திருமாலின் வாள் ; வாள்
நாந்தல் மந்தாரம் ; ஈரம் ; மந்தாரமாய் இருக்குங் காலம் .
நாந்தி நாடக முன்னுரை ; பாயிரம் ; சிராத்த வகை ; முதுகு .
நாந்திகந்துரு மரமஞ்சள் .
நாந்துதல் நனைதல் .
நாநல்கூர்தல் பேசாதிருத்தல் .
நாநீட்டுதல் நாவைநீட்டிப் பேசுதல் .
நாப்பண் நடு ; தேர்நடு ; யாழினுறுப்பு .
நாப்பாடம் மனப்பாடம் பண்ணிய வாய்ப்பாடம் .
நாப்பு பரிகாசம் , ஏளனம் .
நாப்புக்காட்டுதல் அழகுகாட்டுதல் ; வஞ்சித்தல் .
நாப்புதல் அழகுகாட்டுதல் ; வஞ்சித்தல் .
நாப்புற்று நாநோவுவகை .
நாபதி பேச்சாற்றல் படைத்தவன் ; பேச்சு அருளுவோன் .
நாபி கொப்பூழ் ; கத்தூரி ; காண்க : வச்சநாபி ; வச்சநாபி முறிவு என்னும் ஒரு மருந்துவகை .
நாபிக்கொடி கொப்பூழ்க்கொடி .
நாபிசன் திருமாலின் உந்தியில் பிறந்தோனான நான்முகன் .
நாபிதன் காண்க : நாவிதன் .
நாபிநாடி காண்க : நாபிக்கொடி .
நாபிநாளம் காண்க : நாபிக்கொடி .
நாபிரம் விந்து .
நாபீலம் கடிதடம் ; கொப்பூழ்க்குழி .
நாம் அச்சம் ; தன்மைப் பன்மைப் பெயர் ; தாங்கள் .
நாம்பல் இளைப்பு : இளைத்த விலங்கு .
நாம்பன் இளவெருது .
நாம்பு மெலிந்தது ; மெல்லிய கொடி .
நாம்புதல் இளைத்தல் .
நாமக்கட்டி வைணவர் அணியுந் திருமண் கட்டி .
நாமக்காரர் வைணவர் .
நாமகரணம் பெயரிடுஞ் சடங்கு .
நாமகள் பிரமன் நாவில் வசிக்கும் கலைமகள் .
நாமகீர்த்தனம் கடவுள் திருப்பெயர் ஒதுகை .
நாமசங்கீர்த்தனம் கடவுள் திருப்பெயர் ஒதுகை .