சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நாலாரச்சக்கரம் | சித்திரகவிவகை . |
| நாலாரைச்சக்கரம் | சித்திரகவிவகை . |
| நாலாவான் | நான்காமவன் . |
| நாலாவிதம் | பலவிதம் . |
| நாலி | முத்து ; காண்க : கார்த்திகைப்பூ ; கந்தைத் துணி . |
| நாலிகம் | எருமை ; காகம் ; தாமரை . |
| நாலிககை | மூங்கில் . |
| நாலு | நான்கு ; சில ; பல ; நாலடியார் . |
| நாலுகட்டு | நாற்புறமும் சுற்றுக்கட்டுத் திண்ணைகொண்ட வீட்டின் பகுதி . |
| நாலுசதுரக்கமலம் | காண்க : மூலாதாரம் . |
| நாலுதல் | தொங்குதல் ; கழுத்திற் சுருக்கிட்டுக் கொள்ளுதல் . |
| நாலைங்கள்ளி | இலைக்கள்ளிமரம் . |
| நாவசைத்தல் | பேசுதல் . |
| நாவடக்கம் | மந்திரத்தால் வாயைப் பேச வொட்டாமற் செய்கை ; மோனம் . |
| நாவடம் | காதணிவகை ; தாலியுருவகை . |
| நாவடை | கிணற்றில் இறைப்பவன் நீர்ச்சாலைச் சாய்க்கும் இடம் . |
| நாவடைத்துப்போதல் | பேசமுடியாமற்போதல் . |
| நாவணம் | உள்நாக்கு . |
| நாவமிர்தம் | பேச்சு ; அறிவுரை . |
| நாவரசர் | திருநாவுக்கரசு நாயனார் . |
| நாவரசு | திருநாவுக்கரசு நாயனார் . |
| நாவரணை | நாப்புற்றாகிய ஒரு நோய்வகை . |
| நாவரையர் | காண்க : நாவரசர் . |
| நாவல் | நாவல்மரம் ; காண்க : நாவலந்தீவு ; வெற்றியொலி ; போருக்கு அழைக்கை ; நெற் போரிடுவோர் மகிழ்ச்சியினாலிடும் ஒலி ; நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதோர் சொல் ; துன்பக் குறிப்பு . |
| நாவலகலிடம் | ஏழு தீவுகளுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு . |
| நாவலந்தீவு | ஏழு தீவுகளுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு . |
| நாவலம்புவி | ஏழு தீவுகளுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு . |
| நாவலம்பொலம் | சாம்பூநதம் என்னும் பொன் . |
| நாவலர் | பேசுதலில் வல்லவர் ; புலவர் ; அமைச்சர் ; பார்ப்பார் . |
| நாவலர்கோன் | நாவலூரினரான சுந்தரர் . |
| நாவலூராளி | நாவலூரினரான சுந்தரர் . |
| நாவலோநாவல் | வெற்றிக் குறியாக இடும் ஒலி ; நெற்போரிடுவோர் மகிழ்ச்சியினாலிடும் ஒலி . |
| நாவழி | நாக்கு வழிக்குங் கருவி . |
| நாவற்பொழில் | காண்க : நாவலந்தீவு . |
| நாவறட்சி | நீர்வேட்கை . |
| நாவன்மை | பேச்சாற்றல் ; சொல்லாற்றல் . |
| நாவாய் | உள்ளீடற்ற கதிர் ; மரக்கலம் ; இரேவதி நாள் ; காண்க : நாவாய்ப்பறை . |
| நாவாய்ப்பறை | நெய்தனிலப் பறை . |
| நாவாள் | கலைமகள் . |
| நாவி | கொப்பூழ் ; கத்தூரிமான் ; கத்தூரி ; புழுகுபூனை ; புழுகு ; காண்க : ஊமத்தை ; மரக்கலம் . |
| நாவிக்குழம்பு | புழுகு . |
| நாவிகன் | கப்பற்காரன் . |
| நாவிச்சட்டம் | கத்தூரிச்சட்டம் ; புழுகுசட்டம் . |
| நாவிசம் | நாவிதத்தொழில் . |
| நாவித்தண்டை | எருமுட்டை ; பீநாறிப் பூண்டு . |
| நாவிதச்சி | அம்பட்டச்சி . |
| நாவிதன் | அம்பட்டன் ; கார்த்திகைநாள் ; பூரநாள் . |
| நாவிநெய் | காண்க ; நாவிக்குழம்பு . |
| நாவிப்பிள்ளை | கத்தூரி விலங்குக் குட்டி . |
| நாவிப்புழுகு | மான்மதம் ; புழுகு . |
| நாவியம் | காந்தள்மலர் . |
| நாவிலை | வெற்றிலை . |
| நாவிழுதல் | பேச நாவெழாது போதல் . |
| தாவின்கிழத்தி | கலைமகள் . |
| நாவினார் | நாவலர் . |
| நாவு | நாக்கு . |
| நாவுதல் | கொழித்தல் ; நாக்கு வளைத்தல் ; நாவினால் குறிகாட்டி நாகையாடல் . |
| நாவுரி | காண்க : நாடுரி . |
| நாவுழலை | நாக்குழறுகை ; நாவால் வரும் குற்றம் . |
| நாவுழற்றுதல் | பொறாமைப்பட்டுப் பேசுதல் . |
| நாவேறுசெல்வி | கலைமகள் . |
| நாவை | கலப்பை நா ; கொழுநுனி |
| நாழ் | குற்றம் ; செருக்கு ; இல்லாதது சொல்லுகை ; திறமை ; நாள் . |
| நாழ்மை | செருக்கு ; குற்றம் . |
| நாழம் | வசை . |
| நாழல் | காண்க : ஞாழல் . |
| நாழி | உட்டுளைப் பொருள் ; அளக்கும் ஒரு படி ; காற்படி ; நாழிகை ; நூல்நாழி ; அம்பறாத் தூணி ; பூரட்டாதிநாள் . |
| நாழிக்கிணறு | மகளிர் விளையாட்டுக்கு அமைக்கப்பட்ட கிணறு ; சிறுகிணறு . |
| நாழிகை | கால அளவு ; அறுபது விநாடிகொண்ட கால அளவு ; நாடா ; உத்தரட்டாதிநாள் ; கோயிற்பகுதி . |
| நாழிகைக்கணக்கன் | நாழிகைவட்டிலில் நேரம் அறிந்து கூறுவோன் . |
| நாழிகைக்கவி | அரசரும் கடவுளரும் நாழிகை தோறும் செய்யும் செயல்களைக் கூறும் நூல்வகை . |
| நாழிகைத்தூம்பு | நீர்வீசுங் கருவிவகை . |
| நாழிகைப்பறை | நாழிகை அறிவிக்க அடிக்கும் பறை . |
| நாழிகைவட்டம் | சூரியக்கடிகாரம் ; நாழிகை வட்டில் ; கடிகாரம் ; கால்வாயிலிருந்து நீரைப் பகிர்ந்துகொள்ளும் முறை . |
| நாழிகைவட்டில் | நாழிகையை அறிவிக்கும் கருவி . |
|
|
|