நாழிகைவெண்பா முதல் - நாற்றங்கேட்டல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நாழிகைவெண்பா காண்க : நாழிகைக்கவி .
நாள் தினம் ; காலம் ; வாழ்நாள் ; நல்ல நாள் ; காலை ; முற்பகல் ; நட்சத்திரம் ; திதி ; புதுமை ; அன்றலர்ந்த பூ ; வெண்பாவின் ஈற்றடியிறுதியில் வரும் ஒரசைச்சீர் வாய்பாடு .
நாள்கேட்டல் நல்லநாள் குறிக்கும்படி கேட்டல் .
நாள்தள்ளுதல் காலங்கழித்தல் ; காலங்கடத்தல் .
நாள்வழிக்கணக்கு அன்றாடக் கணக்கு .
நாள்வேலை அன்றைய பணி ; கலியாணத்தன்று மணமகன் செய்துகொள்ளும் சவரச் சடங்கு .
நாள்வைத்தல் திருமணநாள் குறித்தல் .
நாளகம் இலாமிச்சம்புல் .
நாளங்காடி பகற்கடை .
நாளடைவில் நாள் செல்லச்செல்ல .
நாளனதினாலே நடப்புத் தினத்தில் .
நாளது நடப்பு .
நாளந்தி விடியற்காலம் .
நாளம் உள்துளை ; தண்டு ; நரம்பு ; பொன்னரி தாரம் .
நாளரம் காண்க : நாளகம் .
நாளரும்பு புதிய அரும்பு .
நாளவை நாளோலக்கம் .
நாளறுதி காலவெல்லை ; நாளடைவில் .
நாளன்று நாளைநின்று , நாளை மறுநாள் .
நாளாதல் காலங்கழிகை ; காலத்திற்கு உரியதன்றாகை .
நாளாய்ந்தோர் வாழ்நாளைக் கணிப்பவரான மருத்துவர் .
நாளார் யமன் .
நாளாவட்டத்தில் காண்க : நாளடைவில் .
நாளி கள் ; நாய் ; அறுபது விநாடிகொண்ட நேரம் ; ஒரு கால அளவு ; காண்க : நாடா .
நாளிகம் காண்க : நாளகம் ; வெள்ளைக்கொடி ; தாமரை ; கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்படும் எறிபடைவகை .
நாளிகேரம் தென்னை
நாளிகேரளம் தென்னை
நாளிடுதல் நல்ல நாள் குறித்தல் .
நாளிதழ் செய்தித்தாள் , தினசரிப் பத்திரிகை .
நாளிது காண்க : நாளது .
நாளிருக்கை காண்க : நாளவை .
நாளில் காண்க : நாளடைவில் .
நாளினி புளிமாமரம் .
நாளினுநாளும் காண்க : நாளுக்குநாள் .
நாளுக்கு ஒரு நாளில் ; நல்ல நாளில் .
நாளுக்குநாள் ஒவ்வொரு நாளும் .
நாளுநாளினும் ஒவ்வொரு நாளும் .
நாளும் தினந்தோறும் .
நாளுலத்தல் இறத்தல் ; நாட்கழிதல் .
நாளெடுத்தல் நன்முகூர்த்தஞ் செய்தல் .
நாளெல்லை மறையும் நேரம் , அத்தமனம் ; இறுதிக்காலம் .
நாளேரடித்தல் நல்ல நாளில் உழத்தொடங்குதல் .
நாளை அடுத்த தினத்தில் ; நாளுக்குரிய .
நாளைக்கழித்து அடுத்த தினத்தின் பின்நாள் .
நாளைக்கு அடுத்த தினத்தில் .
நாளைநின்று பிற்றை நாளை அடுத்து .
நாளைநீக்கி பிற்றை நாளை அடுத்து .
நாளைமற்றைநாள் நாளை அல்லது நாளை நின்று ; இனிமேல் .
நாளைய தற்காலத்துக்குரிய ; நாளுக்குரிய ; மறுநாட்குரிய .
நாளோட்டுதல் காலங்கழித்தல் ; காலங்கடத்துதல் ; தாமதஞ் செய்தல் .
நாளோதி பஞ்சாங்கமோதுவோன் .
நாளோலக்கம் கடவுளர் அல்லது அரசர் காலையில் அத்தாணியில் வீற்றிருத்தல் .
நாளோலை சாதகம் ; முகூர்த்த ஒலை ; நல்ல முகூர்த்தத்தில் வீட்டுக்கு ஒலை வேய்கை .
நாற்கணம் நால்வகை எழுத்தான உயிர்க்கணம் , வன்கணம் , மென்கணம் , இடைக்கணம் .
நாற்கதி நால்வகைப் பிறப்பான தேவகதி , மக்கள்கதி , விலங்குகதி , நரககதி .
நாற்கவி நான்குவகைப் பாட்டான ஆசு , மதுரம் , சித்திரம் , வித்தாரம் ; ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள் .
நாற்காலி நான்கு கால்களையுடைய விலங்கு ; நான்கு காலுள்ள இருக்கை .
நாற்காற்சீவன் நான்கு காலுள்ள விலங்கு .
நாற்குணம் அறிவு , நிறை , ஒர்ப்பு , கடைப்பிடி ஆகிய ஆடவர்குணம் ; நாணம் , மடம் , அச்சம் , பயிர்ப்பு ஆகிய பெண்டிர் குணம் .
நாற்கோணம் நான்கு கோணமுள்ள உருவம் .
நாற்சதுரம் சமநீளமும் சமகோணமுமுடைய உருவம் ; காண்க : பிரண்டை .
நாற்சந்தி நாலு தெருக்கள் கூடுமிடம் .
நாற்சி தொங்குதல் .
நாற்படை தேர்ப்படை , குதிரைப்படை , யானைப்படை , காலாட்படை ,
நாற்பண் நான்கு நிலத்துக்குரிய குறிஞ்சி , பாலை , மருதம் , நெய்தல் (செவ்வழி) என்னும் பண்கள் .
நாற்பது நான்கு பத்துக்கொண்ட எண் .
நாற்பயன் காண்க : நாற்பொருள் .
நாற்பாட்டன் பாட்டனுக்குப் பாட்டன் .
நாற்பால் நால்வகைச் சாதிப் பகுப்பான அந்தணர் , அரசர் , வணிகர் , வேளாளர் .
நாற்பால்மரம் பால்மிகுதியாயுள்ள ஆல் , அரசு , அத்தி , இத்தி , என்னும் நால்வகை மரங்கள் .
நாற்பான் காண்க : நாற்பது .
நாற்பொருள் நான்கு உறுதிப்பொருள்களாகிய அறம் , பொருள் , இன்பம் , வீடு .
நாற்பொன் காண்க : நால்வகைப்பொன் .
நாற்றங்கால் நாற்றுக்காக விதையிடும் வயல் ; மூலம் .
நாற்றங்கேட்டல் மணமறிதல் .