சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நிபுணத்துவம் | திறமை . |
| நிபுணம் | திறமை ; சிறப்பு . |
| நிபுணன் | மிகவல்லோன் ; கலைவல்லோன் ; புதன் . |
| நிம்பம் | வேப்பமரம் . |
| நிம்பன் | வேப்பமாலையுடைய பாண்டியன் . |
| நிம்பிரி | பொறாமை . |
| நிம்பிரித்தல் | கோபித்தல் . |
| நிம்பை | திருமகள் . |
| நிம்மதி | மனவமைதி . |
| நிம்மந்தம் | ஒற்றுமையின்மை ; அகங்காரம் . |
| நிம்மளம் | மனவமைதி ; களங்கமற்றது . |
| நிமந்தக்காரர் | கோயில் வேலைக்காரர் ; திருவடி தாங்குவோர் . |
| நிமந்தப்புறம் | அறத்துக்கு விடப்பட்ட நிலம் . |
| நிமந்தம் | கோயில் ஊழியம் ; கோயிலின் ஏற்பாடு . |
| நிமம் | பிடர்த்தலை . |
| நிமலம் | மாசின்மை . |
| நிமலன் | மலமற்ற கடவுள் ; தூயன் . |
| நிமலை | களங்கமற்ற பார்வதி . |
| நிமிட்டுதல் | கிள்ளுதல் ; நெருடித் தூண்டுதல் ; கசக்குதல் . |
| நிமிடம் | நிமையம் , காலநுட்பம் ; தாளத்தின் காலவகை பத்தனுள் ஒன்று . |
| நிமிடன் | மிகத்திறமையாளன் . |
| நிமிடி | சுறுசுறுப்புள்ளவன் . |
| நிமிடிபாதம் | கண்டிப்பு ; பிடிவாதம் . |
| நிமிடு | திறமையான வேலை . |
| நிமிடுதல் | நெருடுதல் . |
| நிமிண்டி | ஓர் எறும்புவகை ; சிறு திருடன் . |
| நிமிண்டுதல் | கசக்குதல் ; கிள்ளுதல் ; பிறர் அறியாமற் சிறியதாக எடுத்தல் . |
| நிமித்தக்காரன் | வருஞ்செயல் சொல்வோன் . |
| நிமித்தகாரணம் | காரணம் மூன்றனுள் குடத்துக்குக் குயவன்போலக் காரியத்தோடு சேராத காரணம் . |
| நிமித்தத்துவம் | ஏதுத்தன்மை . |
| நிமித்ததானம் | தென்புலத்தார்க்குச் செய்யுஞ் சடங்கினுள் ஒன்று . |
| நிமித்தம் | காரணம் ; காண்க : நிமித்தகாரணம் ; சகுனம் ; அடையாளம் ; இலக்கு ; பொருட்டு ; சபிண்டீகரணத்தில் இறந்தோர்க்குப் பிரதிநிதியாய் வரிக்கப்பெற்றவர்க்குரிய இடம் . |
| நிமித்திகப்புலவர் | அரசரின் உறுதிச் சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல கணியர் ; குறிசொல்லுபவர் . |
| நிமித்திகர் | அரசரின் உறுதிச் சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல கணியர் ; குறிசொல்லுபவர் . |
| நிமித்தியம் | சகுனம் ; காரணம் . |
| நிமிதல் | வாய்நெளிதல் . |
| நிமிர்த்துதல் | நேர் நிற்கச் செய்தல் ; வளைவு நீக்குதல் ; சீர்ப்படுத்துதல் ; நன்றாகப் புடைத்தல் . |
| நிமிர்தல் | உயர்தல் ; நீளுதல் ; வளர்தல் ; ஏறுதல் ; பரத்தல் ; நுடங்குதல் ; நடத்தல் ; ஓடுதல் ; மிகைத்தல் ; தூரமாதல் ; உயர்ந்ததாதல் ; நெருங்குதல் ; உறுதியாதல் ; இடையிடுதல் ; முயலுதல் ; இறுமாத்தல் ;கோள் மீளத் திரும்புதல் . |
| நிமிரல் | நிமிர்கை ; சோறு . |
| நிமிளன் | காண்க : நிமிடி ; கெட்டிக்காரன் . |
| நிமிளை | செவ்வெண்மையான கல்வகை . |
| நிமை | இமை . |
| நிமைத்தல் | இமைத்தல் . |
| நியக்கரணம் | இகழ்வு , அவமதிப்பு . |
| நியக்கி | மான் . |
| நியக்குரோதம் | ஆலமரம் . |
| நியசித்தல் | வைத்தல் ; பதித்தல் . |
| நியதம் | அடக்கம் ; எப்பொழுதும் . |
| நியதி | கட்டுப்பாடு ; செய்கடன் ; ஒழுக்கவிதி ; ஊழ் ; முறைமை ; வரையறை ; எப்பொழுதும் . |
| நியதிச்சொல் | காண்க : நியதிப்பெயர் . |
| நியதித்தல் | உறுப்புகளை மந்திரத்தால் தெய்வங்கட்கு உரியனவாக்குதல் . |
| நியதிப்பெயர் | ஏற்புடைய மொழி . |
| நியதிபண்ணுதல் | நீக்குதல் . |
| நியதுதல் | விடுதல் . |
| நியதேந்திரியன் | ஐம்பொறிகளை அடக்கினவன் . |
| நியந்தா | கட்டளையிடுவோன் ; கடவுள் . |
| நியமக்காரன் | நோன்புபூண்டவன் ; ஒழுக்கமுள்ளவன் . |
| நியமங்கெட்டவன் | ஒழுக்கந் தவறியவன் . |
| நியமச்சூத்திரம் | ஓரிடத்தில் பல விதிகள் நிகழும் நிலையில் ஒன்றை வரையறுக்கும் சூத்திரம் . |
| நியமஞ்செய்தல் | ஏற்படுத்துதல் ; வேலையில் அமர்த்துதல் ; நோன்புகொள்ளல் . |
| நியமம் | செய்கடன் ; விதி ; அட்டயோக விதிமுறைகளில் வழுவாது ஒழுகுதல் ; வரையறுக்கை ; வழக்கு ; உறுதி ; முடிவு ; நகரம் ; கோயில் ; கடைத்தெரு ; வீதி ; இடம் ; மண்டபம் . |
| நியமவிஞ்சனம் | இன்றியமையாச் சாதனம் . |
| நியமனம் | கட்டளை : அமர்த்தம் ; உத்தியோக அமைவு ; ஆணை ; வகைப்படுத்துகை . |
| நியமித்தல் | உத்தியோகம் முதலியவற்றில் அமர்த்துதல் ; தீர்மானித்தல் ; சங்கற்பஞ் செய்தல் ; ஓரிடத்திற் பல விதிகள் நிகழும் நிலையில் ஓன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல் ; பிறப்பித்தல் ; கட்டளையிடல் ; வகைப்படுத்துதல் . |
| நியமிதம் | நியமனம்பெற்றது ; உறுதி . |
| நியர் | ஒளி . |
| நியர்ப்புதம் | பதினாயிரங்கோடி . |
| நியாக்கியம் | பொரியரிசி . |
| நியாசம் | வைத்தல் ; கிரியை ; தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்தல் ; வேம்பு ; ஈடுவைத்த பொருள் . |
| நியாதம் | வைத்தல் ; கிரியை ; தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்தல் ; வேம்பு ; ஈடுவைத்த பொருள் . |
| நியாமகன் | அமர்த்துபவன் ; ஓட்டுபவன் ; மாலுமி . |
| நியாயக்கேடு | நீதிக்கேடு . |
| நியாயங்காட்டுதல் | காரணங்கூறுதல் . |
| நியாயங்கேட்டல் | வழக்கு விசாரித்தல் . |
| நியாயசபை | நீதிமன்றம் . |
|
|
|