நியாயத்தப்பு முதல் - நிர்வாகமாதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நியாயத்தப்பு காண்க : நியாயக்கேடு .
நியாயத்தலம் காண்க : நியாயசபை .
நியாயத்தார் நீதிபதிகள் .
நியாயத்தீர்ப்பு வழக்கில் நீதிபதி கொடுக்கும் தீர்மானம் .
நியாயப்பிரமாணம் நீதிச்சட்டம் .
நியாயப்பிரமாணி ஒழுக்கமுள்ளவன் ; நியாயமுறை தவறாது நடப்பவன் .
நியாயப்பரிபாலனம் நீதியாட்சி .
நியாயபோதனை நன்னெறியுணர்த்துகை ; நீதிமொழி .
நியாயம் நீதி ; வாய்மை ; நன்னெறி ; சட்டம் ; முகாந்தரம் ; வாக்குவாதம் ; கௌதமர் மதம் பற்றிய தருக்கநூல் ; போக்கு ; கட்டுப்பாடு ; இடம் ; வழக்கு ; உலகியலாகவும் சாத்திரமாகவும் வழங்கும் திட்டாந்த நெறி ; ஒரு நோக்கத்துடன் அமைந்த சட்டம் .
நியாயம்பேசுதல் வழக்கை விசாரித்தல் ; தீர்ப்புக்கொடுத்தல் .
நியாயமலைவு தருக்கநூலுக்கு மாறான கூற்று .
நியாயமுத்தரித்தல் நியாயங் காட்டுதல் ; பிரதி வாதஞ் செய்தல் .
நியாயமுரசு மும்முரசுகளுள் அரசன் நீதி வழங்குதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு .
நியாயர் தருக்கநூலில் வல்லவர் .
நியாயவாதி வழக்கறிஞன் ; நியாயம் பேசுவோன் .
நியாயவான் நீதிமான் ; நியாயம் பேசுவோன் ; நீதிபதி .
நியாளம் ஒரு பறைவகை .
நியுத்தம் முட்டியுத்தம் .
நியுத்தன் மனங்கவிந்தவன் ; ஒரு செயல் செய்தற்கு அமர்த்தப்பெற்றவன் .
நியுதம் நூறாயிரம் ; பத்து நூறாயிரம் .
நியூனம் குறைவு ; தோல்வித்தானவகை .
நியோககுற்றம் வாதத்தில் எதிரியின் தோல்வித் தானம் அறியாமை .
நியோகம் கட்டளை ; நியமித்த தொழில் ; தத்துவம் ; உறுதி ; முயற்சி .
நியோகித்தல் கட்டளையிடுதல் .
நியோசனம் கட்டளை ; இசைவு .
நிர்க்கதி கதியின்மை .
நிர்க்கந்தவாதி சமணருள் ஒரு பிரிவினராகிய நிகண்டவாதி .
நிர்க்குண்டி வெண்ணொச்சிச்செடி .
நிர்க்குணம் குணமின்மை ; இழிகுணமில்லாமை .
நிரக்குணன் குணமற்ற கடவுள் ; குணாதீதன் .
நிர்க்கோத்திரம் காண்க : கோத்திரமின்மை .
நிர்ச்சரம் தலைமயிர் பறித்தல் முதலிய சமண நோன்பு .
நிர்ச்சலம் நீரின்மை ; நீரும் உண்ணாப் பட்டினி ; அசைவின்மை .
நிர்ச்சலை சலனமற்ற சிவசக்தி .
நிர்ச்சீவனாதல் முற்றும் ஆற்றலற்றுப்போதல் .
நிர்ணயம் உறுதி ; ஆராய்வு .
நிர்ணயித்தல் தீர்மானித்தல் ; முடிவுசெய்தல் .
நிர்த்தத்துவன் தத்துவாதீதனாகிய கடவுள் .
நிர்த்தம் நடனம் ; வரிக்கூத்துவகை .
நிர்த்தமாராயன் நட்டுவர்தலைவன் .
நிர்த்தனன் சொத்துரிமையற்றவன் ; எளியவன் .
நிர்த்தாட்சிணியம் இரக்கமின்மை .
நிர்த்தாரணம் நிலையிடுகை .
நிர்த்தூளி முற்றும் அழிதல் .
நிர்த்தேசம் கட்டளை ; குறித்துக்காட்டுகை ; சூத்திரபிடகத்தின் ஒரு பகுதி .
நிர்த்தேசித்தல் குறித்துக்காட்டுதல் .
நிர்த்தொந்தம் பற்றின்மை ; தொந்ததுக்கமின்மை .
நிர்நாசம் அழியாமை ; முற்றுமழிதல் .
நிர்நாமம் அருகன் எண்குணத்துள் ஒன்றாகிய பெயரில்லாமை .
நிர்நாமன் பெயரற்ற கடவுள் .
நிர்நிமித்தம் காரணமின்மை .
நிர்நிமித்தியம் காரணமின்மை .
நிர்ப்பத்தியம் பத்தியமின்மை .
நிர்ப்பந்தம் தொந்தரவு ; கட்டாயம் .
நிர்ப்பந்தித்தல் கட்டாயப்படுத்துதல் ; துன்புறுத்துதல் .
நிர்ப்பாக்கியம் பேறின்மை .
நிர்மதி மனக்கவலையின்மை .
நிர்மலதை மலமற்றிருக்குந் தன்மை .
நிர்மலம் மாசின்மை ; மனக்கவலையின்மை .
நிரமலன் மாசற்ற கடவுள் .
நிர்மாணம் இயற்றுகை ; ஏற்பாடு ; அம்மணம் .
நிர்மாலியம் பூசித்துக் கழித்த பொருள் .
நிர்மித்தல் இயற்றுதல் ; விதித்தல் .
நிர்மிதம் படைக்கப்பட்டது ; படைத்தல் ; கற்பிதம் ; விதித்தல் .
நிர்மூடன் முழுமூடன் .
நிர்மூடி மூடப்பெண் .
நிர்மூலம் காரணமற்றது ; பாழாதல் .
நிர்வகித்தல் ஆளுதல் ; செயல் நடப்பித்தல் ; பொறுத்தல் ; உறுதிப்படுத்துதல் .
நிர்வசனம் சொற்கு வேர்ச்சொற் பொருள் கூறுகை ; பேசாதிருக்கை .
நிர்வமிசம் சந்ததியின்மை .
நிர்வர்த்தியம் மூவகைச் செயப்படுபொருள்களுள் இயற்றப்படுவது .
நிர்வாகசபை செயல்களைச் செய்துமுடிக்குஞ் சங்கம் .
நிர்வாகப்படுதல் நிலைப்படுதல் .
நிர்வாகம்பண்ணுதல் பொறுத்தல் ; ஆளுதல் ; பராமரித்தல் ; முடிவுசெய்தல் ; செயல் நடப்பித்தல் ; மெச்சும்படி ஒன்றைச் சாதித்தல் ; உறுதிப்படுத்துதல் .
நிர்வாகமாதல் நேர்மையாய் நடத்தப்படுதல் ; கன்னி முறைப்படி மணம் செய்விக்கப்படுதல் .