நிர்வாகன் முதல் - நிரவயன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நிர்வாகன் ஆள்திறனுடையோன் ; வாய்மையாளன் ; மேலாளர் ; பொறுப்பாளர் .
நிர்வாகி ஆள்திறனுடையோன் ; வாய்மையாளன் ; மேலாளர் ; பொறுப்பாளர் .
நிர்வாசம் குடியற்றது .
நிர்வாணம் சமண பௌத்தர்களின் முத்தி நிலை ; வீட்டின்பம் ; அம்மணம் .
நிர்வாணி ஆடையில்லாதவன்(ள்) ; சிவன் ; அருகன் .
நிர்விக்கினம் இடையூறின்மை .
நிர்விகற்பக்காட்சி பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு .
நிர்விகற்பம் வேறுபாடின்மை ; ஐயமின்மை .
நிர்விகாரம் வேறுபாடின்மை ; கடவுள் .
நிர்விகாரி கடவுள் .
நிர்விசாரம் கவலையின்மை ; துயரமின்மை .
நிர்விவாதம் விவாதமற்றது .
நிரக்கம் சுட்டறிவின்மை .
நிரக்கரகுக்கி காண்க : நிரட்சரகுட்சி .
நிரக்கு அகவிலை ; நேர்மை .
நிரகங்கிருதி புறவிவகாரம் ; செருக்கின்மை .
நிரங்கிருதி புறவிவகாரம் ; செருக்கின்மை .
நிரங்குசம் கட்டுப்படாமை .
நிரங்குசன் கட்டுப்படாதவன் .
நிரசம் சத்தின்மை ; சுவையின்மை .
நிரசனம் அழித்தல் ; தள்ளுதல் ; பட்டினி ; வாயாலெடுத்தல் ; கக்குதல் .
நிரஞ்சனம் குற்றமில்லாதது ; வெளி ; நிறைவு ; வீடுபேறு ; இரசகற்பூரம் .
நிரஞ்சனன் அழுக்கற்ற கடவுள் ; அருகன் ; சிவன் .
நிரஞ்சனி பார்வதி .
நிரட்சம் நிலக்கோடு ; பூமத்தியரேகை .
நிரட்சரகுட்சி எழுத்தறிவற்றவன் .
நிரட்சரேகை காண்க : நிரட்சம் .
நிரத்தல் பரத்தல் ; நிரம்புதல் ; கலத்தல் ; சமாதானப்படுதல் ; ஒழுங்குசெய்தல் ; நெருங்குதல் ; போதியதாதல் ; சமபங்கிட்டு அளித்தல் .
நிரத்திமாலி சிவபிரான் .
நிரத்தியயம் குற்றமின்மை .
நிரத்துதல் சமதளமாக்குதல் ; குண்டுகுழிகளைத் தூர்த்துச் சமனாக்குதல் .
நிரதம் எப்பொழுதும் .
நிரதி பற்று .
நிரதிகாரன் ஒன்றற்குரிய அதிகாரமற்றவன் .
நிரதிசயம் உயர்வற உயர்ந்த நிலைமை .
நிரதிசயவின்பம் தன்னின் மேம்பட்ட இன்பமில்லாத வீட்டின்பம் .
நிரந்தம் முடிவற்றது ; நெருக்கிடை ; குரங்கு .
நிரந்தரம் இடைவிடாமை ; முடிவற்று எப்பொழுதும் இருக்கை ; நெருக்கம் ; அழிவு ; குரங்கு ; சராசரி .
நிரந்தரன் எப்போதுமுள்ள கடவுள் ; சிவன் .
நிரந்தரி காண்க : நிரஞ்சனி .
நிரந்தரித்தல் எப்போதுமிருத்தல் ; பரவுதல் .
நிரப்பம் முழுமை ; இறப்பு ; ஒப்புமை ; சமம் ; கற்பு .
நிரப்பிவிடுதல் பூர்த்தியாக்குதல் ; சூலடையச் செய்தல் .
நிரப்பு நிறைவு ; சமதளம் ; சமாதானம் ; வறுமை ; குறைவு ; சோர்வு ; நிறைகுடத்தைச் சூழப்போடும் நெல் ; மங்கலக்குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி .
நிரப்புதல் நிறைத்தல் ; பரப்புதல் ; பூர்த்தி செய்தல் ; மனநிறைவாக்குதல் ; விடையளித்தல் .
நிரப்போர் இரப்போர் ; வறியர் .
நிரபராதி குற்றமற்றவன் .
நிரம்ப நிறைய , மிகுதியாக .
நிரம்பரன் ஆடையில்லாதவன் ; அருகன் ; சிவன் .
நிரம்பவழகியர் பேரழகுள்ளவர் ; சிவன் ; ஒரு புலவர் .
நிரம்பாச்சொல் மழலைச்சொல் .
நிரம்பாத்துயில் அரைத்தூக்கம் .
நிரம்பாத்தூக்கம் அரைத்தூக்கம் .
நிரம்பாநோக்கு இடுக்கிப் பார்க்கும் பார்வை .
நிரம்பாமென்சொல் மழலைச்சொல் .
நிரம்பாமொழி மழலைச்சொல் .
நிரம்பிப்பாய்தல் ததும்பி வழிதல் .
நிரம்பியபுட்பம் வாழை .
நிரம்பியம் வாழை .
நிரம்பினபெண் பருவமடைந்த பெண் .
நிரம்புதல் நிறைதல் ; மிகுதல் ; முடிவுறுதல் ; பருவமடைதல் ; முதிர்தல் .
நிரயப்பாலர் நரகத்திலுள்ள தலைவர் .
நிரயபாலர் நரகத்திலுள்ள தலைவர் .
நிரயம் காண்க : நிரையம் .
நிரர்த்தகம் பயனற்றது .
நிரர்த்தம் பயனற்றது .
நிரல் வரிசை ; ஒப்பு .
நிரலுதல் ஒழுங்குபடுதல் .
நிரவகாசவிதி குறித்த இடந்தவிர வேறு இடத்திற்குச் செல்லக்கூடாத விதி .
நிரவகாலிகை வெளி .
நிரவதி எல்லையற்றது .
நிரவதிகம் எல்லையற்றது .
நிரவம் ஒலியின்மை .
நிரவயவம் உறுப்பற்றது .
நிரவயன் அழிவில்லாத கடவுள் .