சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நிரவலடித்தல் | உழுதநிலத்தைச் சமனாக்குதல் . |
| நிரவற்பயிர் | பெருமழையில் மண்ணால் மூடப்பபட்ட பயிர் . |
| நிரவுதல் | சமனாதல் ; தீர்தல் ; பரவுதல் ; வரிசையாயிருத்தல் ; சமனாக்குதல் ; குறைதீர்த்தல் ; சராசரி பார்த்தல் ; சரிப்படுத்துதல் ; அழித்தல் . |
| நிரளியசாரை | கானகக்கல் . |
| நிரன்னுவயன் | சுற்றமற்ற துறவி . |
| நிரனிறுத்தல் | நிறுத்தமுறையால் வரிசையாக அமைத்தல் . |
| நிரனிறை | ஒழுங்காக நிறுத்தல் ; பொருள்கோள் நான்கனுள் நிறுத்தமுறையே சொற்களை நிறுத்தல் . |
| நிரா | பழம் முதலியவற்றின் கன்றின நிலை . |
| நிராகம் | உடலின்மை . |
| நிராகரணம் | மறுப்பு . |
| நிராகரன் | அருவமான கடவுள் . |
| நிராகரித்தல் | மறுத்தல் ; புறக்கணித்தல் . |
| நிராகாரம் | மறுப்பு ; புறக்கணிப்பு ; உருவமின்மை ; வானம் ; வீடுபேறு ; உணவின்மை . |
| நிராகாரன் | உருவிலாக் கடவுள் . |
| நிராகிருதம் | தள்ளுண்டது ; உருவமற்றது . |
| நிராகிருதி | வடிவின்மை ; மறுப்பு ; புறக்கணிப்பு . |
| நிராகுலம் | கலக்கமின்மை . |
| நிராங்குதல் | நருங்குதல் . |
| நிராசனர் | கடவுளர் . |
| நிராசாரம் | ஒழுக்கமின்மை . |
| நிராசை | விருப்பமின்மை ; நம்பிக்கையறுகை . |
| நிராடங்கம் | மறுப்பற்றது . |
| நிராதபகை | இரவு . |
| நிராதாரம் | ஆதாரமின்மை ; சார்பு வேண்டாமை ; காண்க : நிராதாரயோகம் . |
| நிராதாரயோகம் | ஆன்மா தன்னறிவு இழந்து அறிவு வடிவாய சிவனை அடைந்து பற்றற நிற்கும் நிலை . |
| நிராதாரன் | பற்றுக்கோடற்றவனான கடவுள் . |
| நிராமயம் | நோயின்மை ; நோயற்றது . |
| நிராமயன் | கடவுள் . |
| நிராயுதபாணி | ஆயுதமற்றவன் . |
| நிராயுதன் | ஆயுதமற்றவன் ; அருகன் . |
| நிராலம்பம் | பற்றுக்கோடின்மை ; வெளி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| நிராலம்பன் | பற்றுக்கோடற்ற கடவுள் . |
| நிரியாசம் | புகைச்சரக்கு ஆறனுள் ஒரு பிசின்வகை ; காண்க : வேம்பு . |
| நிரியாணம் | யானைக் கடைக்கண் ; இறப்பு ; வீடுபேறு . |
| நிரீச்சுரம் | கடவுளில்லை என்னும் மதம் . |
| நிரீசுரவாதி | காண்க : நிரீச்சுவரவாதி |
| நிரீச்சுவரசாங்கியம் | இறைவனின்மையைக் கூறும் சாங்கிய மதம் . |
| நிரீச்சுவரவாதி | கடவுள் இல்லை என்போன் . |
| நிரீட்சணசுத்தி | கண்ணேறு கழிக்கை . |
| நிரீட்சணம் | பார்வை ; எதிர்பார்த்திருக்கை ; மதிப்பு ; பார்வையின்மை . |
| நிரீட்சமாணம் | நம்பிக்கை ; பார்க்கை . |
| நிரீட்சித்தல் | பார்த்தல் ; பார்வை பார்த்தல் ; எதிர்பார்த்தல் . |
| நிரீட்சிதம் | பார்க்கப்பட்டது . |
| நிருச்சுவாசம் | மூச்சுவிடாதிருக்கை . |
| நிருசத்தன் | இராக்கதன் . |
| நிருசிங்கம் | நரசிங்கம் . |
| நிருணயம் | ஆராய்வு ; உறுதி . |
| நிருணயித்தல் | தீர்மானித்தல் . |
| நிருணாமன் | பெயரில்லாத கடவுள் ; அருகன் . |
| நிருணித்தல் | காண்க : நிருணயித்தல் . |
| நிருத்தம் | நடனம் ; பற்றின்மை ; வேதங்களிலுள்ள சொற்களை ஆராயும் நூல் ; காண்க : திரோப(பா)வம் . |
| நிருத்தமாது | நாடகக் கணிகை . |
| நிருத்தன் | நடிப்போன் . |
| நிருத்தாங்கம் | நடனத்துக்கு வாசிக்கும் மத்தளம் , தாளம் முதலியன . |
| நிருத்தாசனம் | தெளிவு . |
| நிருத்தாட்சணியம் | கண்ணோட்டமின்மை . |
| நிருத்தாதனம் | ஒரு காலைத் தூக்கி நிற்கும் நிலைவகை . |
| நிருத்தானுகம் | காண்க : நிருத்தாங்கம் . |
| நிருத்தி | சொற்கு வேர்ச்சொற் பொருள் கூறுகை . |
| நிருதர் | அரக்கர் . |
| நிருதாட்சணியம் | காண்க : நிருத்தாட்சிணியம் |
| நிருதாட்சசிணியம் | காண்க : நிருத்தாட்சிணியம் |
| நிருதி | தென்மேற்றிசைப் பாலகனான குபேரன் ; முதலெழு வள்ளலுள் ஒருவன் ; அரக்கி . |
| நிருதிதிசை | குபேரன் திசையான தென்மேற்கு . |
| நிருதிபாசம் | கடற்பாசி . |
| நிருதூளி | தூளி , அழுக்கு . |
| நிருநாசம் | காண்க : நிர்நாசம் . |
| நிருநாசன் | அழிவற்ற கடவுள் . |
| நிருநாமன் | கடவுள் . |
| நிருபசரிதம் | உபசாரமாக ஏற்றிக் கூறப்படாதது . |
| நிருபதி | காண்க : நிருபன் ; குபேரன் . |
| நிருபதுங்கராகம் | பெரும்பண்வகை . |
| நிருபம் | எழுதியனுப்புங் கட்டளை ; கடிதம் ; தீர்மானம் . |
| நிருபமம் | ஒப்பின்மை . |
| நிருபமன் | ஒப்பில்லாதவன் . |
|
|
|