நிலத்தி முதல் - நிலாமாடம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நிலத்தி நுளம்பு .
நிலத்துளக்கு நிலநடுக்கம் ; பூகம்பம் .
நிலத்துளசி துளசிவகை .
நிலத்தெய்வம் நிலமகள் ; ஐந்திணைக்குரிய தெய்வங்கள் .
நிலந்தட்டி நிலத்தைச் சமணாக்கும் பலகை ; கடல் மீன் வகை .
நிலந்தரஞ்செய்தல் முற்றும் அழித்தல் .
நிலந்தெளிதல் பொழுதுவிடிகை .
நிலநடுக்கம் பூமி அதிர்வு ; பூகம்பம் .
நிலப்பரப்பு ஒரு நிலஅளவைவகை ; நிலத்தின் அளவு ; பூமியின் மொத்த நீள அகலம் .
நிலப்பலா வேர்ப்பலா .
நிலப்பனை மருந்துச்செடிவகை .
நிலப்பாகல் பாகல்வகை .
நிலப்பாலை சிறுமரவகை .
நிலப்பாவாடை காண்க : நடைபாவாடை .
நிலப்பிரயோசனம் நிலவிளைவு .
நிலப்பிளப்பு கமர் ; வெடிப்பு .
நிலப்பூ புற்புதர்களிலுண்டாகும் பூ .
நிலப்பூச்சி பூச்சிவகை .
நிலப்பெயர் நிலம்பற்றி ஒருவனுக்கிடும் பெயர் .
நிலப்பெயர்ச்சி இடம் மாறுகை .
நிலப்பொட்டு மண்ணைத் தேய்த்து இடுந் திலகம் ; ஒரு காளான்வகை .
நிலப்போங்கு நிலத்தன்மை .
நிலபுலம் நன்செய் புன்செய் ; விளைநிலமும் தோப்புகளும் ; பல்வகை நிலம் .
நிலம் தரை ; மண் ; பூமி ; இடம் ; வயல் ; பதவி ; நிலத்திலுள்ளார் ; எழுத்து அசை சீர்களாகிய இசைப்பாட்டின் தானம் ; விடயம் ; மேன்மாடம் ; கள்ளிவகை .
நிலம்பி கொசு .
நிலம்புலம் காண்க : நிலபுலம்
நிலமகள் பூமிதேவி .
நிலமகன் பூமிதேவியின் மகனான செவ்வாய் .
நிலமங்கை காண்க : நிலமகள்
நிலமங்கைநாச்சியார் காண்க : நிலமகள்
நிலமட்டம் தரைமட்டம் ; நீர்மட்டம் .
நிலமடந்தை காண்க : நிலமகள்
நிலமண் மனைத்தளத்தை நிரப்பும் மண் .
நிலமயக்கம் காண்க : திணைமயக்கம் .
நிலமளந்தோன் உலகை அளந்த திருமால் .
நிலமாளிகை நிலவறை .
நிலமிதி ஒரு பகுதியில் சேருகை ; இடத்தின் தன்மை ; நடைவசதி .
நிலயம் தங்குமிடம் ; கோயில் ; மருதநிலத்தூர் ; இலக்கு ; படி ; கூத்து .
நிலயம்பிடித்தல் இடங்காணுதல் ; நிலைப்படுதல் ; மருந்து முதலியவற்றின் அளவை நிதானித்தல் .
நிலவடலி சிறுபனைமரம் .
நிலவடி கையினால் எடுத்தடிக்கும் கதிரடிப்பு ; களத்தில் கையால் அடித்த தானியம் .
நிலவடுப்பு நிலத்தில் அமைக்கும் அடுப்புவகை .
நிலவர் நீரின் நிலையை மூழ்கியறிபவர் ; நிலத்துள்ளவர் .
நிலவரண் நீரும் நிழலுமற்ற மருதநில அரண் .
நிலவரம் நிலைபேறு ; நிலைமை ; அன்றாட வேலை .
நிலவரி அரசாங்கத்திற்குச் செலுத்தும் பூமி வரி .
நிலவருந்தி சகோரப்புள் .
நிலவலயம் பூமண்டலம் .
நிலவறை பூமிக்குள் அமைக்கப்படும் அறை .
நிலவாகை ஒரு மருந்துச்சரக்கு ; பாகல்வகை .
நிலவாசி நிலத்தன்மை .
நிலவாரம் விளைவிலிருந்து பயிரிடுவோன் நிலக்கிழாருக்குக் கொடுக்கும் தானியத்தின் ஒரு பகுதி .
நிலவிழுது காண்க : நிலப்பனை .
நிலவீரியம் பூநீறு .
நிலவு ஒளி ; சந்திரன் ; நிலவொளி .
நிலவுகாய்தல் நிலவெறித்தல் .
நிலவுதல் நிலைத்திருத்தல் ; தாங்குதல் ; வழங்குதல் ; பரவுதல் ; ஒளிவிடுதல் .
நிலவுலகம் பூமி .
நிலவூறல் பூமிக்கசிவு .
நிலவெக்கை வெயில் காய்ந்ததால் நிலத்தில் உண்டாகும் வெப்பம் .
நிலவெடுப்பு முதலுழவு .
நிலவெறித்தல் நிலவொளி வீசுதல் .
நிலவேம்பு செடிவகை .
நிலவேர் பூநாகம் ; மண்புழு .
நிலன் நிலம் .
நிலா காண்க : நிலவு .
நிலாக்கல் காண்க : சந்திரகாந்தக்கல் .
நிலாக்காலுதல் நிலவு வீசுதல் .
நிலாக்கொழுந்து இளம்பிறை .
நிலாத்திரி மத்தாப்பு .
நிலாமண்டபம் காண்க : நிலாமுற்றம் .
நிலாமண்டலம் சந்திரமண்டலம் .
நிலாமணக்கு பூண்டுவகை .
நிலாமணி காண்க : சந்திரகாந்தக்கல் .
நிலாமாடம் காண்க : நிலாமுற்றம் .