நிலாமுக்கி முதல் - நிலையியற்பொருள் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நிலாமுக்கி நிலவின் கதிர்களை உண்டு வாழும் பறவைவகை ; சகோரப்புள் .
நிலாமுகி நிலவின் கதிர்களை உண்டு வாழும் பறவைவகை ; சகோரப்புள் .
நிலாமுற்றம் நிலாக்காலத்து உலவுவதற்காக வீட்டின்மேல் அமைத்த திறந்தவெளி முற்றம் .
நிலாவுதல் நிலவுதல் ; நிலைத்திருத்தல் ; தியானித்தல் ; ஒப்பாதல் .
நிலுவை தங்குகை ; வரவுபாக்கி .
நிலுவைக்காரன் கடன்காரன் ; நிலுவை வசூலிப்பவன் .
நிலை நிற்கை ; உறுதி ; தன்மை ; நிலைமை ; தொழில் ; இடம் ; தங்குமிடம் ; பூமி ; காண்க : நிலைத்திணை ; தேர்த்தட்டு ; கதவுநிலை ; தூண் ; விளக்குத்தண்டு ; நெறி ; வழக்கு ; ஆசிரமம் ; குலம் ; மரபுரிமை ; இசைப்பாட்டு வகை ; பொழுது ; முகூர்த்தம் ; ஒரு நிலவளவு வகை ; ஒருவன் நிற்கக்கூடிய நீராழம் ; பசு ஒரு தடவை கழிக்குஞ் சாணி ; அணிகலத் தொங்கல் .
நிலைக்கட்டுதல் நிலைக்கச்செய்தல் .
நிலைக்கடகம் பெருங்கூடை .
நிலைக்கண்ணாடி ஓரிடத்தில் நாட்டப்பட்ட முகம்பார்க்கும் பெரிய கண்ணாடி .
நிலைக்கதவம் நிலையிலமைந்த கதவு .
நிலைக்கல் ஆட்டுக்கோரோசனை ; நிலைப்படியின் கீழுள்ள கல் .
நிலைக்களப்போலி ஓர் எழுத்து நின்றவிடத்தில் அதற்கு ஈடாய் வந்துநிற்கும் எழுத்து .
நிலைக்களம் தங்குமிடம் .
நிலைக்கால் கட்டில் முதலியவற்றின் கால் .
நிலைக்கிடை நாட்டியத்தில் உட்காரும் நிலை .
நிலைக்குடி பழங்குடி ; நிலக்கிழாரின் நிலைத்த குடிகள் .
நிலைக்குத்துதல் இறக்கும்போது விழி முதலியன அசைவின்றியிருத்தல் .
நிலைகலங்குதல் காண்க : நிலைகுலைதல் .
நிலைகுலைத்தல் நிலைமையழித்தல் ; கற்பழித்தல் ; ஒழுக்கங்கெடுத்தல் ; சிதறவடித்தல் ; தயங்கச்செய்தல் .
நிலைகுலைதல் நிலைமை தவறுதல் ; நெறி பிறழ்தல் ; தயங்குதல் ; சிதறுண்ணுதல் .
நிலைகெடுதல் தடுமாறல் .
நிலைகேடு கெட்டுப்போன நிலைமை .
நிலைகொள்ளுதல் உறுதியாதல் ; தன்னிலையடைதல் ; நிற்குமளவு ஆழமாதல் .
நிலைகோலுதல் அணிவகுத்தல் ; இடந்தேடுதல் .
நிலைச்செண்டு நிலத்தில் நின்று எறிந்து விளையாடும் பந்து .
நிலைச்செரு இடையறாப் போர் .
நிலைசெல்லுதல் காண்க : நிலைகொள்ளுதல் .
நிலைத்தல் நிலைபெறுதல் ; தாமதித்தல் ; நீர் ஆள் அளவுக்கு இருத்தல் .
நிலைத்தானம் கோயில் .
நிலைத்திணை அசையாப்பொருள் .
நிலைத்துறை வழக்கமாய் இறங்கும் நிலையாழமுள்ள நீர்த்துறை .
நிலைத்தேர் அலங்காரம் செய்து ஓரிடத்தில் நிலையாக நிறுத்தப்பட்டிருக்குந் தேர் .
நிலைதடுமாறுதல் காண்க : நிலைகுலைதல் .
நிலைதல் நிலைத்துநிற்றல் .
நிலைதளம்புதல் நிலையற்றிருத்தல் ; கலக்கமுற்றிருத்தல் ; நிலைமை தவறுதல் ; நெறி வழுவுதல் ; காவாது கிடத்தல் .
நிலைதிரிதல் முறைமை கெடுதல் .
நிலைநாட்டுதல் நிலைத்திருக்கச்செய்தல் ; தொடங்குதல் .
நிலைநிற்றல் கொள்கையை உறுதியாய்க் கடைப்பிடித்தல் ; நிலையாய் தங்குதல்
நிலைநிறுத்துதல் தொடங்குதல் ; முடிவாய் மெய்ப்பித்தல் .
நிலைநீர் ஓட்டமற்ற நீர் ; கடல் .
நிலைநீர்ப்பாட்டம் ஏரிப் பாய்ச்சல் வரி .
நிலைப்படி கதவுநிலையின் அடிப்படி .
நிலைப்படுத்துதல் காண்க : நிலைநிறுத்துதல் ; உறுதியாக்குதல் .
நிலைப்படுதல் நிலைநிற்றல் ; உறுதியாதல் .
நிலைப்படை காவலுக்குத் தலைநகரிலேயே நிறுத்திவைக்கப்பட்ட சேனை .
நிலைப்பதம் காண்க : நிலைமொழி .
நிலைப்பாடு நிலைமை ; உறுதிப்பாடு .
நிலைப்பு நிலை ; உறுதி ; விடாமுயற்சி .
நிலைப்பூட்டு கதவில் தைக்கப்பட்ட பூட்டு வகை .
நிலைபிடித்தல் தொழில் முதலியன பெற்று நிலையாயிருத்தல் ; குறிக்கோளை அடைதல் .
நிலைபெறுத்தல் காண்க : நிலைநிறுத்துதல் ; காத்தல் .
நிலைபெறுதல் நிலையாய்த் தங்குதல் ; துன்பமற்ற நிலைமையை அடைதல் ; நீடித்தல் ; ஒன்று நிற்கக்கூடியவளவு ஆழமுடைத்தாதல் .
நிலைபேறு நிலைப்பிடம் ; உறுதி ; தூண் ; மானம் ; வீடுபேறு .
நிலைபோடுதல் தொடங்குதல் .
நிலைமடக்கு அணிவகை .
நிலைமண்டிலம் சீர்கள் தம்முள் அளவொத்த அடிகளை உடைய அகவற்பாவகை .
நிலைமண்டிலவாசிரியப்பா சீர்கள் தம்முள் அளவொத்த அடிகளை உடைய அகவற்பாவகை .
நிலைமண்டுதல் அயலூரில் நீடித்துத் தங்குதல் ; ஒரிடத்தைப் பற்றிக்கொள்ளுதல் .
நிலைமாறுதல் இடமாறுதல் ; சொல்லில் எழுத்துக்கள் இடம்பிறழ்தல் .
நிலைமை இயல்பு ; வாழ்க்கைநிலை ; நிலை ; நிலவரம் திண்மை ; உறுதி ; உண்மை ; புகழ் ; வீடுபேறு ; நிலவுடைமை .
நிலைமைக்காரன் நிலக்கிழான் ; நேர்மையுள்ளவன் .
நிலைமொழி பதப்புணர்சிக்கண் முதலில் நிற்கும் சொல் .
நிலையகம் மனை .
நிலையங்கி முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை ; தெய்வத்திருமேனிக்குச் சாத்தும் கவசம் ; தெய்வத்திருமேனிக்குச் செய்யும் முழு அலங்காரம் .
நிலையம் இலக்கு ; தங்குமிடம் ; கோயில் ; மருத நிலத்தூர் ; படி ; கூத்து .
நிலையல் நிற்கை .
நிலையழிதல் காண்க : நிலைகுலைதல் .
நிலையற்றவன் உறுதியில்லாதவன் ; தகுதி இல்லாதவன் .
நிலையறிதல் எண்ணமறிதல் .
நிலையாடி நெய்வார் கருவியுள் ஒன்று ; காண்க : நிலைக்கண்ணாடி .
நிலையாமை நிலைத்துநில்லாமை ; உறுதியின்மை , உறுதியற்ற தன்மை ; அழிந்துபடும் தன்மை .
நிலையாறுதல் அமைதியுறுதல் .
நிலையிடுதல் காண்க : நிலைநிறுத்துதல் ; அளந்தறிதல் .
நிலையியற்பொருள் காண்க : நிலைத்திணை .