சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நீர்வற்றல் | ஈரம் சுண்டுதல் ; வற்றல் . |
| நீர்வற்றற்றேங்காய் | கொப்பரைத்தேங்காய் . |
| நீர்வார்த்தல் | தாரைவார்த்துக் கொடுத்தல் . |
| நீர்வாரம் | ஆற்றில் வளரும் கொடிவகை . |
| நீர்வாரி | யானைக்காலிற் கட்டும் சங்கிலி . |
| நீர்வாழ்சாதி | நீரில் வாழும் உயிரிகள் ; நெய்தல் நில மக்கள் . |
| நீர்வாழை | தண்ணீர் உதவும் வாழைவகை . |
| நீர்வாழைக்காய் | மீன் . |
| நீர்விட்டுப்போதல் | காண்க : நீர்த்துப்போதல் ; பதனழிந்து சுவை கெடுதல் ; மிகுதியாய் வியர்த்தல் . |
| நீர்விதை | நன்செய்ச் சாகுபடி . |
| நீர்வியாதி | காண்க : நீரிழிவு ; நீர்ச்சுரப்பு . |
| நீர்விலை | நீர்வரி . |
| நீர்விழவு | ஆடவரும் மகளிரும் தண்ணீரில் இறங்கி நின்று புரியும் விளையாட்டு . |
| நீர்விளையாட்டு | ஆடவரும் மகளிரும் தண்ணீரில் இறங்கி நின்று புரியும் விளையாட்டு . |
| நீர்வீழ்ச்சி | மலையருவி . |
| நீரகம் | கடல் சூழ்ந்த பூமி ; காஞ்சியில் உள்ள திருமால் கோயில்களுள் ஒன்று . |
| நீரசம் | சுவையற்றது ; மாதுளை ; தாமரை ; சலவாயு . |
| நீரட்டுதல் | காண்க : நீர்வார்த்தல் . |
| நீரடைப்பு | மூத்திரத்தடைநோய்வகை . |
| நீரணி | மகளிர் நீர் விளையாட்டில் கொள்ளும் கோலவகை . |
| நீரணிமாடம் | காண்க : நீர்மாடம் . |
| நீரத்தி | ஒரு மரவகை . |
| நீரதம் | நீரைக் கொடுக்கும் மேகம் ; நீரற்றது . |
| நீரதி | கடல் ; சாறு . |
| நீரநிதி | கடல் . |
| நீரம் | தண்ணீர் . |
| நீரரண் | நான்கரணுள் நீர் நிறைந்துள்ள அகழி . |
| நீரரமகள் | நீரில் வாழும் தெய்வப்பெண் . |
| நீரவன் | அறிவுடையவன் . |
| நீரழிவு | காண்க : நீரிழிவு . |
| நீராகாரம் | பழஞ்சோற்றில் கலந்துள்ள நீர் . |
| நீராசனம் | காண்க : நீராரத்தி . |
| நீராஞ்சனம் | காண்க : நீராரத்தி . |
| நீராட்டணி | காண்க : நீரணி . |
| நீராட்டம் | நீரில் முழுகுகை . |
| நீராட்டு | நீரில் முழுகுகை . |
| நீராட்டுதல் | முழுக்காட்டுதல் ; மஞ்சனஞ் செய்வித்தல் . |
| நீராடல் | காண்க : நீராடுதல் . |
| நீராடற்காய் | முற்றின தேங்காய் . |
| நீராடுதல் | குளித்தல் ; நீர் விளையாட்டு . |
| நீராணிக்கம் | நீர்நிறைவு ; நேர்வாளமரம் ; ஈரம் ; நீர் பாய்ச்சுவோனுக்குக் குடிகள் தரும் உரிமை . |
| நீராணிக்கன் | கொங்குநாட்டு ஏரிமதகின் காவற்காரன் ; நீர்க்கண்டி . |
| நீராத்திரை | நீர் விழாவுக்குச் செல்லும் பயணம் . |
| நீராரத்தி | மஞ்சள் நீர் ஆரத்தி . |
| நீராரம்பம் | நீர்ப்பாசன வசதியுள்ள நிலம் . |
| நீராவி | தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி ; தடாகம் . |
| நீராவிக்கப்பல் | நீராவியாற் செல்லுங் கப்பல் . |
| நீராவிமண்டபம் | ஆறு , தடாகங்களின் நடுவே அமைந்த மண்டபம் . |
| நீராவியந்திரம் | நீராவியினால் செலுத்தப்படும் பொறி . |
| நீராழி | கடல் ; மாட்டுநோய்வகை . |
| நீராழிமண்டபம் | காண்க : நீராவிமண்டபம் . |
| நீராளம் | நீர்த்தன்மை ; நீர்மிகுதி ; நீருடன் கலந்த உணவு ; மயக்கம் இல்லாத இனிப்புக்கள் . |
| நீராளமாய்விடுதல் | உணவில் குழம்பு முதலியவற்றை அதிகமாகப் பரிமாறுதல் . |
| நீரிலாநிலம் | பாலைநிலம் . |
| நீரிழிச்சல் | சிறுநீர் சருக்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்வகை . |
| நீரிழிவு | சிறுநீர் சருக்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்வகை . |
| நீரிறங்குதல் | சிறுநீர் இறங்குகை ; உடம்பில் கெட்டநீர் தங்குகை . |
| நீரிறைவன் | வருணன் . |
| நீருருள் | சகடமாகப் பண்ணித் தண்ணீர் ஏற்றி உருட்டுங் கருவி . |
| நீருள்ளி | வெங்காயம் . |
| நீரூபம் | வானம் ; காற்று . |
| நீரூர்பாதை | நிறைபுனல் . |
| நீரூற்று | ஊற்று ; கசிவு . |
| நீரூறி | காண்க : கீழாநெல்லி . |
| நீரெட்டி | காண்க : பேயாமணக்கு ; மரவட்டைமரம் . |
| நீரெட்டிமுத்து | காண்க : பேயாமணக்கு ; மரவட்டைமரம் . |
| நீரேற்றம் | நீர்ப்பெருக்கு ; நீர்க்கோவை ; கெட்ட நீரால் உடம்புவீங்கும் நோய் . |
| நீரோசை | மகிழ்ச்சி ; கொண்டாட்டம் . |
| நீரோட்டம் | ஓடும் நீர் ; மணியின் உள்ளொளி ; நீர் செல்லுங் கால் . |
| நீரோடி | மதகு ; கூரைக் கூடல்வாய் ; நீரோடும் உள்வாய் . |
| நீரோடுகால் | கால்வாய் ; ஊரில் நீர் வடிந்து செல்லுந் தாழ்ந்த நிலம் . |
| நீரோடை | கால்வாய் ; நீர்நிலை . |
| நீரோருகம் | தாமரை . |
| நீல் | நீலம் ; கறுப்பு ; அவுரி ; காண்க : கருங்குவளை ; காற்று ; வாதநோய் . |
| நீலக்கட்டி | அவுரிச்சாயக்கட்டி . |
|
|
|