சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நீலக்கல் | நீலமணி . |
| நீலக்காரம் | துரிசு . |
| நீலக்காலி | காண்க : அவுரி ; நண்டுவகை . |
| நீலக்கோலன் | மன்மதன் . |
| நீலகண்டம் | சிவனது நஞ்சு தங்கிய கழுத்து ; மயில் . |
| நீலகண்டன் | நீலநிறம் கொண்ட கழுத்தையுடைய சிவன் ; திருநீலகண்ட நாயனார் ; துரிசு ; பூரபாடாணம் ; முருங்கைமரம் . |
| நீலகண்டி | துர்க்கை ; பொல்லாதவள் ; பாம்பின் நச்சுப்பல்லில் ஒன்று . |
| நீலகந்தி | மாணிக்கவகை . |
| நீலகமலம் | காண்க : கருங்குவளை . |
| நீலகாசம் | கண்ணோயுள் ஒன்று . |
| நீலகிரி | நீலமலை ; ஒரு மலைத்தொடர் . |
| நீலங்கட்டுதல் | நீலச்சாயந் தோய்த்தல் ; பொய் கற்பித்தல் . |
| நீலச்சுறா | சுறாமீன்வகை . |
| நீலந்தன் | பாணன் . |
| நீலந்தீர்தல் | நீலநிறம் போடுதல் . |
| நீலநாகம் | கருநாகம் . |
| நீலநெல் | கார்நெல் . |
| நீலப்பறவை | நீலநிறமுள்ள மயில் . |
| நீலப்பைங்குடம் | பச்சைக்குப்பி . |
| நீலம் | நீலநிறம் ; நீலச்சாயம் ; மாணிக்கவகை ; ஒன்பான் மணியினுள் ஒன்று ; நீலக்கட்டி ; குபேரனது நிதியுள் ஒன்று ; கறுப்பு ; இருள் ; காண்க : கருங்குவளை ; நீல ஆடை ; நஞ்சு ; துரிசு ; கண்ணிலிடும் மை ; ஒரு மலைத் தொடர் ; பனைமரம் . |
| நீலம்பற்றவைத்தல் | ஆடைக்கு நீலமேற்றுதல் ; கதைகட்டுதல் . |
| நீலம்பாரித்தல் | நச்சுக் கடியால் உடம்பு நீலநிறமாதல் ; இருளடைதல் . |
| நீலமணி | நீலரத்தினம் ; கண்ணில் உள்ள கருமணி ; தென்னை . |
| நீலமணிவோன் | முருகக்கடவுள் . |
| நீலமருந்து | அவுரி . |
| நீலமார்க்கம் | கரிசாலைப்பூண்டு . |
| நீலமேகம் | கார்மேகம் . |
| நீலமேகன் | நீலமேனியனான திருமால் . |
| நீலமேனியள் | கருநிறமுடைய பார்வதி . |
| நீலமேனியன் | திருமால் ; துருசு . |
| நீலர் | கருநிறமுடைய அரக்கர் . |
| நீலவண்ணன் | திருமால் ; சனி ; நீலநிறத்தோன் . |
| நீலவருணம் | நீலநிறம் ; நீலச்சாயம் ; தீயைப் பொழியும் முகில் . |
| நீலவழுதலை | நீலவழுதுணைவகை . |
| நீலன் | சனி ; கொடியன் ; ஒரு குரக்குப் படைத் தலைவன் ; குதிரைவகை ; மாங்கனிவகை . |
| நீலாங்கம் | புழு ; மலைத்தேள் . |
| நீலாஞ்சனம் | துருசு ; பாடாணவகை ; கறுப்புக் கல் ; கல்ல¦யம் . |
| நீலாஞ்சனை | மின்னல் . |
| நீலாட்சம் | அன்னப்புள் . |
| நீலாம்பரன் | பலபத்திரன் . |
| நீலாம்பரி | காண்க : நீலாம்புரி ; ஒரு செடிவகை . |
| நீலாம்புசன் | காண்க : நீலோற்பலம் . |
| நீலாம்புரி | ஒரு பண்வகை . |
| நீலி | கருநிறம் ; துர்க்கை ; பார்வதி ; ஒரு பெண் பேய் ; கொடியவள் ; காண்க : நீலினி ; மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றிமரம் ; பாம்புப் பல்லில் ஒன்று ; துருசு ; கருநொச்சிச்செடி . |
| நீலிக்கண்ணீர் | பொய்க்கண்ணீர் . |
| நீலிகை | காண்க : நீலினி . |
| நீலித்தனம் | கொடுமை ; பாசாங்கு ; செருக்கு . |
| நீலிதம் | நீலநிறமானது . |
| நீலினி | அவுரிச்செடி . |
| நீலோற்பலம் | காண்க : கருங்குவளை ; கருநெய்தல் . |
| நீவரகம் | பஞ்சம் . |
| நீவரம் | நீர் ; சேறு ; நாடு ; வாணிகம் . |
| நீவாரம் | காண்க : குளநெல் ; செந்தினை . |
| நீவான் | காண்க : நீகான் . |
| நீவி | கொய்சகம் ; மகளிர் ஆடையுடுத்தும்போது இடையில் முடிக்கும் முடிச்சு ; ஆடை ; பணப்பை ; கிழி ; துடைக்கை ; இறகு . |
| நீவியம் | ஆடை . |
| நீவிர் | நீங்கள் , முன்னிலைப் பன்மைப் பெயர் . |
| நீவுதல் | கைவிடுதல் ; கடத்தல் ; அறுத்தல் ; அழித்தல் ; தடவிக்கொடுத்தல் ; கோதுதல் ; துடைத்தல் ; பரப்புதல் ; பூசுதல் ; தூண்டுதல் . |
| நீழல் | காண்க : நிழல் ; காற்று . |
| நீழை | ஒளி ; காற்று . |
| நீள் | நீளம் ; நெடுங்காலம் ; உயரம் ; ஆழம் ; ஒளி ; ஒழுங்கு . |
| நீள்சடையோன் | நீண்ட சடையைக்கொண்ட சிவபெருமான் ; காண்க : சரக்கொன்றை . |
| நீள்விசும்பு | விண்ணுலகம் ; வைகுந்தப்பதவி . |
| நீள | நெடுந்தொலைவாக ; நெடுங்காலமாக ; வெகுதொலைவில் . |
| நீளத்தில்விடுதல் | காலந்தாழ்த்தல் ; வெறுஞ்சொல் சொல்லிக் கடத்தல் ; வேண்டுமென்று புறக்கணித்தல் . |
| நீளம் | நெடுமை ; தொலைவு ; தாமதம் ; பறவைக் கூடு . |
| நீளவாட்டு | நெடும்போக்கு . |
| நீளி | நெடியன் ; நெடியது . |
| நீளிடை | நெடுந்தொலைவு ; நெடியவழி ; காடு . |
| நீளித்தல் | நீளுதல் ; நெடுநாள் இருத்தல் ; தாமதித்தல் . |
| நீளிப்பு | நீளுகை . |
| நீளியது | நீண்டது . |
| நீளுதல் | காண்க : நீடுதல் ; பெருமையாதல் ; ஓடுதல் . |
| நீளெரி | பெருநெருப்பு ; மிகுவெப்பம் . |
| நீளை | காற்று ; திருமால் தேவியருள் ஒருத்தி . |
|
|
|