சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நெட்டிலிங்கு | அசோகமரம் . |
நெட்டு | தள்ளுகை ; தாக்குகை ; நெடுமை ; நெடுந்தொலைவு ; அகலம் ; உப்புமேடை ; காம்பு ; செருக்கு ; குலை . |
நெட்டுக்கட்டுதல் | குலைதள்ளுதல் . |
நெட்டுக்குத்து | செங்குத்து . |
நெட்டுடைத்தல் | செருக்கையடக்குதல் . |
நெட்டுதல் | தள்ளுதல் ; மிகவுண்ணுதல் ; தாக்குதல் . |
நெட்டுயிர் | உயிர்நெடில் . |
நெட்டுயிர்த்தல் | பெருமூச்சுவிடுதல் . |
நெட்டுயிர்ப்பு | பெருமூச்சு . |
நெட்டுரு | மனப்பாடம் . |
நெட்டுருச்செய்தல் | மனப்பாடம்செய்தல் . |
நெட்டுப்பண்ணுதல் | மனப்பாடம்செய்தல் . |
நெட்டூத்தி | ஒரு சங்குவகை . |
நெட்டூதி | ஒரு சங்குவகை . |
நெட்டூரம் | வஞ்சகம் . |
நெட்டெழுத்து | இரண்டு மாத்திரை கொண்ட உயிரெழுத்து ; பெயர் முழுமையும் அடங்கிய கையெழுத்து ; எட்டப்பார்வை ; பத்திரம் முதலியன எழுதுகை ; பத்திரத்தின் உடல் . |
நெட்டெழுத்துக்காரன் | பத்திரம் எழுதுவோன் . |
நெட்டை | நெடுமை ; படைவகை ; முழுவெலும்பு ; பிணம் ; சோம்பல்முறிக்கை ; சுடக்குவிடுகை . |
நெட்டைச்சி | நெடியள் . |
நெட்டையன் | நெடியன் . |
நெட்டோடை | நீண்டவோடை . |
நெட்டோலை | திருமுகம் ; பறியோலை . |
நெடநெடெனல் | முறிதல் ஒலிக்குறிப்பு . |
நெடலை | நாரைவகை . |
நெடி | சிள்வண்டு ; மிளகாய் முதலியன கமறல் ; காரம் ; தீநாற்றம் . |
நெடித்தல் | பொழுது நீட்டித்தல் . |
நெடித்தற்பொழுது | தாமதம் . |
நெடிது | நீண்டது ; தாமதம் . |
நெடிதுய்த்தல் | நெடுநாள் வாழவைத்தல் . |
நெடிதுயிர்த்தல் | பெருமூச்சுவிடுதல் . |
நெடிப்பு | நெடுநேரம் . |
நெடியவட்டம் | பெருங்கேடகம் . |
நெடியோன் | நெட்டையானவன் ; திரிவிக்கிரமனாகிய திருமால் ; பெரியோன் ; துளசிச்செடி ; காண்க : மூக்கிரட்டை . |
நெடியோன்குன்றம் | திருவேங்கடமலை . |
நெடில் | நீளம் ; நெட்டெழுத்து ; மூங்கில் ; மிக்கது . |
நெடிலடி | ஐந்து சீரால் அமைந்த செய்யுளடி . |
நெடிலி | ஒரு கடற்பறவைவகை ; புல்வகை . |
நெடுக்கு | நீட்சி . |
நெடுக்குச்சுவர் | நீளவாட்டுச் சுவர் . |
நெடுக | நீளமாய் ; நேராக ; தொடர்பாக . |
நெடுகப்பிடித்தல் | மழை முதலியன விடாது தொடர்தல் ; தங்காமற் செல்லுதல் ; வெகுகாலம் இல்லாதிருத்தல் ; காலம்பிடித்தல் ; நீளமாகப் பிடித்தல் ; பேச்சு முதலியவற்றை விரித்தல் ; பொருளை அழித்தல் . |
நெடுகலும் | எப்பொழுதும் . |
நெடுகவிடுதல் | நீளமாகவிடுதல் ; தள்ளிவைத்தல் . |
நெடுகிலும் | எப்பொழுதும் . |
நெடுகுதல் | நீளுதல் ; தாமதித்தல் ; சாதல் ; காணாமற்போதல் . |
நெடுங்கடல் | கரையடுத்த கடல் . |
நெடுங்கடை | பெரிய வாயில் . |
நெடுங்கண் | தூரப்பார்வையுள்ள கண் ; பின்னிய ஓலையின் நீண்ட கண் ; நீண்ட மட்டையின் இறுதியில் விரியும் பனையோலைப் பிரிவு ; தேங்காயின் தாய்க்கண் . |
நெடுங்கண்பார்வை | காண்க : நெடும்பார்வை . |
நெடுங்கண்விழுதல் | ஓலை முடைதலில் பெருங்கண் உடையதாதல் . |
நெடுங்கணக்கு | அகரச்சுவடி , அரிச்சுவடி , அகரம் முதலிய எழுத்துகளைக் கற்பிக்கும் சுவடி ; நெடுநாட்கணக்கு ; வாராக் கடன் . |
நெடுங்கதை | பழங்கதை ; நீண்ட கதை . |
நெடுங்கயிறு | நீளமான கயிறு ; நீண்ட வலை ; பெருந்தாமதம் . |
நெடுங்கழுத்தல் | நீண்ட கழுத்துள்ள ஒட்டகம் ; கோவேறுகழுதை . |
நெடுங்கழுத்தன் | நீண்ட கழுத்துள்ள ஒட்டகம் ; கோவேறுகழுதை . |
நெடுங்காலம் | வெகுகாலம் , நீண்டகாலம் ; பலநாள் . |
நெடுங்காலி | கால்நீண்ட பசு . |
நெடுங்கிடை | காண்க : நெடுஞ்சாண்கிடை ; நீண்டகாலமாகப் படுத்துக்கிடத்தல் . |
நெடுங்குரல் | விடாத பெருங்குரல் . |
நெடுங்குரலன் | பெருங்குரலுடைய கழுதை . |
நெடுங்கூவிளி | பெருமுழக்கம் . |
நெடுங்கேடு | தீராத கேடு . |
நெடுங்கை | நெடிய கையுடைய யானை . |
நெடுங்கைநீட்டு | மிகத் தொலைவு . |
நெடுங்கோடிச்சுவர் | நீளவாட்டுச் சுவர் . |
நெடுங்கோணி | ஒட்டகம் . |
நெடுஞ்சட்டை | நீண்ட அங்கி . |
நெடுஞ்சாண் | தரையில் விழுந்து வணங்குதல் . |
நெடுஞ்சாண்கிடை | தரையில் விழுந்து வணங்குதல் . |
நெடுஞ்சீர்வண்ணம் | நெட்டெழுத்துப் பயின்று வருஞ் சந்தம் . |
நெடுஞ்சொல் | புகழ் . |
நெடுத்தல் | காலம் முதலியன நீளுதல் ; மழை முதலியன விடாது தொடர்தல் ; நெட்டையாதல் . |
நெடுந்தகை | மேம்பாடுள்ளவன் . |
நெடுந்தகைமை | மேம்பாடு . |
நெடுந்துயில் | நீண்ட உறக்கம் ; இறப்பு . |
![]() |
![]() |
![]() |