நே முதல் - நேர்நிறை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நே ஓர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஏ) ; அன்பு ; ஈரம் .
நேக மிகப் பொடியாக .
நேசகன் வண்ணான் .
நேசம் அன்பு ; ஆர்வம் ; தகுதி .
நேசன் நண்பன் ; அடியான் , பக்தன் .
நேசானுசாரி உண்மையாய் நடப்பவன் .
நேசி அன்புடையவள் .
நேசித்தல் அன்புவைத்தல் .
நேட்டம் தேட்டம் ; சம்பாதித்த பொருள் .
நேடுதல் தேடுதல் ; எண்ணுதல் ; விரும்புதல் ; சம்பாதித்தல் ; இலக்காகக் கொள்ளுதல் .
நேத்திரநரம்பு கண்நரம்பு .
நேத்திரப்படலம் ஒரு கண்ணோய்வகை .
நேத்திரபரியந்தம் கடைக்கண் .
நேத்திரபிண்டம் கண்விழி ; பூனை .
நேத்திரம் கண் ; மயிற்பீலிக்கண் ; பட்டாடை .
நேத்திரயோனி இந்திரன் ; சந்திரன் .
நேத்திரரோகம் கண்ணோய் .
நேத்திரவீட்சணம் அருளுடன் பார்த்தல் .
நேத்திராம்பு கண்ணீர் .
நேத்திரோற்சவம் கண்ணுக்கு விருப்பமானது .
நேதா தலைவன் .
நேதி முறை .
நேதித்தல் இதுவன்றெனக் கூறுதல் .
நேதியதுசெய்தல் இதுவன்றெனக் கூறுதல் .
நேபத்தியம் அலங்காரம் ; வேடம் ; நாடக அரங்கில் வேடம்பூணும் மறைவிடம் ; நாடகமேடை .
நேபம் நீர் .
நேம்புதல் கொழித்தல் .
நேமகம் நியமிக்கை ; ஏற்பாடு ; தீர்மானம் ; மணவாக்குறுதி ; தெய்வத்துக்குப் படைத்தல் ; ஒழுங்கு ; இருப்பிடம் .
நேமநிட்டை நோன்புகளை உறுதியோடு செய்கை ; நித்தியானுட்டானம் .
நேமம் நியமனம் ; விதிமுறை ; ஊழ் ; நேரம் ; சாயங்காலம் ; பங்கு ; பிளப்பு ; வேர் ; மேலிடம் ; வேலி ; ஏமாற்றுகை .
நேமன் சீரிய ஒழுக்கமுள்ளவன் .
நேமனம் காண்க : நியமனம் ; அமர்த்தம் .
நேமி வட்டம் ; தேருருளை ; சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கடல் ; பூமி ; மோதிரம் ; சக்கரவாகப்புள் ; சக்கரப்படையுடையவனான திருமால் ; தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் .
நேமித்தல் காண்க : நியமித்தல் ; அமர்த்துதல் ; சிந்தித்தல் .
நேமிநாதன் அருகக்கடவுள் ; கடவுள் .
நேமிப்புள் சக்கரவாகப்புள் .
நேமியஞ்செல்வன் பேரரசன் .
நேமியான் சக்கரப்படை உடையவனான திருமால் .
நேமியோன் சக்கரப்படை உடையவனான திருமால் .
நேமிவலயம் பூமண்டலம் .
நேமிவலவன் திருமால் ; கடவுள் .
நேயம் அன்பு ; பக்தி ; நன்மை ; நெய் ; நிலப் பனைக்கிழங்கு .
நேயவை இடுதிரை .
நேயன் நண்பன் .
நேர் உடன்பாடு ; உவமை ; செவ்வை ; நீதி ; நல்லொழுக்கம் ; திருந்திய தன்மை ; மாறுபாடு ; நீளம் ; வரிசை ; பாதி ; நுணுக்கம் ; கொடை ; கதி ; காண்க : நேர்விடை ; தனிமை ; மிகுதி ; ஊர்த்துவநிலை ; நிலைப்பாடு ; காண்க : நேரசை ; வலிமை ; முன் ; பிராகாரம் .
நேர்கட்டி ஒரு மணச்சரக்குவகை .
நேர்கட்டுதல் சரிக்கட்டுதல் .
நேர்கடன் முயற்சி ; நேர்ந்த பொருள் , வேண்டுதல் ; வேண்டுதலுக்காக வைத்த பண்டம் .
நேர்காட்டுதல் எதிர்த்தல் ; ஒரு திசைநோக்கிச் செலுத்துதல் ; கொல்லுதல் ; விழுங்குதல் ; வரிசையாக வைத்தல் ; முன் காட்டுதல் ; முன் ஏர் நடத்துதல் ; சரியாகப் பிளத்தற்கு வெட்டிக்காட்டுதல் ; நீர்க்கால் மாட்டுதல் ; சாவுகிடையாகக் கிடத்துதல் .
நேர்காணல் ஒருவரை நேரில் சந்தித்துப் பேசுகை , பேட்டி .
நேர்காற்று உதவுங்காற்று .
நேர்கூறு சரிபாகம் .
நேர்கொடுநேரே வெளிப்படையாக .
நேர்ச்சி போக்கு ; தகுதி ; இணக்கம் ; சூள் ; நட்பு ; சிறப்பு .
நேர்சீர் ஒழுங்கு ; மனவொற்றுமை ; தகுதிக்கேற்ப நடக்கை .
நேர்சொல்லுதல் உண்மை கூறுதல் .
நேர்சோழகம் நேர்தென்றல் .
நேர்ஞ்சங்கிலி கழுத்திலணியப்படும் வேலைப்பாடு வாய்ந்த ஒரு சங்கிலிவகை .
நேர்த்தரவு குற்றம் பொறுத்தோமென்று நேரிற் கூறும் ஆணை .
நேர்த்தல் ஒத்தல் ; எதிர்த்தல் .
நேர்த்தி சிறப்பு ; திருத்தமுள்ளது ; காண்க : நேர்த்திக் கடன் : முயற்சி ; நேர்ந்த பொருள் , வேண்டுதல் .
நேர்த்திக்கடன் வேண்டுதல் ; வேண்டுதலுக்காக வைத்த பண்டம் .
நேர்த்திக்குறிப்பு தவறாமை .
நேர்தப்புதல் நேர்மைதவறுதல் .
நேர்தல் பொருந்துதல் ; நிரம்புதல் ; நிகழ்தல் ; எதிர்ப்படுதல் ; இளைத்துப்போதல் ; மென்மையாதல் ; எதிர்தல் ; நெருங்குதல் ; தீண்டுதல் ; பெறுதல் ; கொடுத்தல் ; உடன்படுதல் ; ஒத்தல் ; உறுதிசெய்தல் ; அமர்த்தல் ; நியமித்தல் ; தண்டனைக்கு உட்படுத்தல் ; வேண்டுதல் ; செல்லுதல் ; வேண்டிக்கொள்ளல் ; எதிர்த்தல் ; அறுத்தல் .
நேர்ந்தபடி முறையின்றி ; விருப்பப்படி ; முன்யோசனையின்றி .
நேர்ந்தபோக்கு முருட்டுப்பிடிவாதம் .
நேர்ந்தார் நண்பர் .
நேர்ந்துகொள்ளுதல் வேண்டிக்கொள்ளுதல் .
நேர்ந்துபோதல் நிகழ்தல் ; மெலிதல் .
நேர்ந்துவிடுதல் வேண்டுதலுக்காக விலங்கு முதலியவற்றைக் கோயிலுக்கு விடுதல் ; மெலிதல் .
நேர்நிரத்தல் சமமாய் நிற்றல் .
நேர்நிலைவஞ்சி காண்க : சமநிலைவஞ்சி .
நேர்நிற்றல் எதிர்நிற்றல் ; ஒழுங்காய் நிற்றல் .
நேர்நிறை கற்பு ; சரிபாரம் ; நீதி .