பசுப்புரை முதல் - பஞ்சபல்லவம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பசுப்புரை காண்க : பசுநிலை .
பசுபதி ஆன்மாக்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் .
பசுபுண்ணியம் உயிர்களின் பொருட்டுச் செய்யும் அறச்செயல் .
பசுபோதம் ஆன்மவறிவு .
பசும்பட்டு நேர்த்தியான பட்டு .
பசும்பதம் சமைத்தற்குரிய அரிசி முதலியன .
பசும்பயறு பாசிப்பயறு .
பசும்பிடி பச்சிலைமரம் .
பசும்பிறப்பு சமணசமயங் கூறும் அறுவகைப் பிறப்புகளுள் மூன்றாவது .
பசும்புண் புதுப்புண் .
பசும்புல் பச்சைப்புல் ; விளைபயிர் .
பசும்பை வணிகர்கள் தோளில் மாட்டிக் கொள்ளும் நீண்ட பை .
பசும்பொன் மாற்றுயர்ந்த பொன் ; காண்க : கிளிச்சிறை .
பசுமஞ்சள் மஞ்சள்வகை .
பசுமந்தை ஆநிரை , பசுக்கூட்டம் .
பசுமம் திருநீறு .
பசுமை பச்சைநிறம் ; குளிர்ச்சி ; இளமை ; அழகு ; புதுமை ; சாரம் ; நன்மை ; செல்வி ; உண்மை ; பொன்னிறம் ; செல்வம் ; சால்வை வகை .
பசுவதி சாது .
பசுவன் பசுக்கன்றின் வயிற்றில் உள்ள பாலை உறையச்செய்யும் பை ; கோரோசனை ; கோலாட்ட விழாவில் காளைபோல் மண்ணால் செய்துவைத்துப் பெண்கள் வணங்கும் உருவம் .
பசுவாசாரம் சத்திபூசை .
பசுவெயில் மாலைவெயில் .
பசேரெனல் பச்சைநிறமாயிருத்தல் .
பசை ஒட்டும் பசை ; பிசின் ; சாரம் ; ஈரம் ; பக்தி ; அன்பு ; பற்று ; இரக்கம் ; பயன் ; செல்வம் ; கொழுப்பு ; முழவின் மார்ச்சனைப் பண்டம் ; உசவு .
பசைத்தல் மை முதலியன நன்றாய்ப் பதிதல் .
பசைதல் அன்புகொள்ளல் ; நட்புக்கொள்ளுதல் ; செறிதல் ; இளகுதல் ; மை முதலியன நன்றாய்ப் பதிதல் ; பிசைதல் ; தாராளமாதல் ; ஒட்டவைத்தல் ; ஒன்றுசேர்த்தல் ; பதமாக்குதல் .
பசைந்தார் நண்பர் .
பசையாப்பு உலகப் பற்றாகிய பந்தம் .
பசைவு அன்பு .
பஞ்ச ஐந்து .
பஞ்சக்கிலேசம் ஐவகைத் துன்பமான அவிச்சை , தன்முனைப்பு , அவா , ஆசை , வெகுளி .
பஞ்சகஞ்சுகம் காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் என்னும் ஐந்து ஆன்மதத்துவச் சட்டைகள் .
பஞ்சகதி குதிரையின் ஐவகை நடையான மயில்நடை , மல்லநடை , குரக்குநடை , ஏறுநடை , புலிநடை என்பன .
பஞ்சகந்தம் ஐவகை முகவாசனைப் பண்டம் ; உருவம் , வேதனை , குறிப்பு , பாவனை , விஞ்ஞானம் என ஐவகைக் கந்தங்கள் ; இலவங்கம் , ஏலம் , கருப்பூரம் , சாதிக்காய் , தக்கோலம் என்னும் ஐவகை மணச்சரக்கு .
பஞ்சகம் ஐந்தன் கூட்டம் .
பஞ்சகருவி தோற்கருவி , துளைக்கருவி , நரப்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசை உண்டாக்கும் கருவிகள் .
பஞ்சகலியாணி நான்கு கால்களிலும் முகத்திலும் வெண்மை நிறமுள்ள சிவப்புக் குதிரை .
பஞ்சகவ்வியம் பசுவினின்றுண்டாகும் பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் என்பவற்றின் கலப்பு .
பஞ்சகன்னியர் ஒழுக்கத்தில் சிறந்த அகலிகை , சீதை , தாரை , திரௌபதி , மண்டோதரி என்னும் ஐந்து மகளிர் .
பஞ்சகாலம் காலை , சங்கவ காலம் , நண்பகல் , அபரான்ன காலம் , மாலை என முறையே காலை முதல் அவ்வாறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகள் ; அகவிலை குறைந்த காலம் .
பஞ்சகாவியம் சிந்தாமணி , சிலப்பதிகாரம் , மணிமேகலை , வளையாபதி , குண்டலகேசி என்னும் ஐந்து தமிழ்ப்பெருங்காப்பியங்கள் .
பஞ்சகிருத்தியம் படைத்தல் , நிலைபெறுத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் கடவுளின் ஐந்தொழில்கள் ; படைக்கலத்தால் பொரும்பொழுது வீரன் செய்தற்குரிய தொடை , விலக்கு , செலவு , சேமம் , தவிர்த்து வினைசெயல் என்னும் ஐந்தொழில்கள் ; உழுது பயிர் செய்தல் , பண்டங்களை நிறுத்து விற்றல் , நூல்நூற்றல் , எழுதுதல் , படைகொண்டு தொழில் பயிலுதல் ஆகிய ஐந்தொழில்கள் .
பஞ்சகோசம் அன்னமயகோசம் , ஆனந்தமயகோசம் , பிராணமயகோசம் , மனோமயகோசம் , விஞ்ஞானமயகோசம் என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகை உறைகள் .
பஞ்சகோலம் சுக்கு , திப்பிலி , திப்பிலிமூலம் , செவ்வியம் , சித்திரமூலம் இவற்றின் சேர்க்கை .
பஞ்சகௌவியம் காண்க : பஞ்சகவ்வியம் .
பஞ்சங்கூறுதல் ஏழைபோல நடித்தல் .
பஞ்சசத்தி பரையாற்றல் , முந்தையாற்றல் , விருப்பாற்றல் , அறிவாற்றல் , வினையாற்றல் என்னும் ஐவகை சிவ ஆற்றல்கள் .
பஞ்சசயனம் இலவம்பஞ்சு , பூ , கோரை , மயிர் , அன்னத்தூவி இவற்றால் செய்த படுக்கை ; அழகு , குளிர்ச்சி , மார்த்தவம் , பரிமளம் , வெண்மை என்னும் ஐவகைத் தன்மை கொண்ட படுக்கை .
பஞ்சசாயகன் ஐங்கணைகளை உடைய மன்மதன் .
பஞ்சசீலம் காமம் , கொலை , கள் , பொய் , களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தலாகிய பௌத்தரொழுக்கம் .
பஞ்சசுத்தி பூசைக்கு இன்றியமையாத ஐவகைச் சுத்திகளாகிய ஆத்துமசுத்தி , இலிங்கசுத்தி , திரவியசுத்தி , பூதசுத்தி , மந்திரசுத்தி என்பன .
பஞ்சஞானன் புத்தர் .
பஞ்சடைதல் பசி முதலியவற்றால் பார்வை மயங்குதல் .
பஞ்சணை பஞ்சால் செய்தல மெத்தை .
பஞ்சத்துவம் பதினைந்து ; பன்னிரண்டாம் நாள் இறந்தவர்பொருட்டுச் செய்யும் சடங்கு ; பஞ்ச பூதங்களும் பிரிதலாகிய இறப்பு .
பஞ்சதசம் பதினைந்து ; பன்னிரண்டாம் நாள் இறந்தவர்பொருட்டுச் செய்யும் சடங்கு ; பஞ்ச பூதங்களும் பிரிதலாகிய இறப்பு .
பஞ்சதரு சந்தானம் , தேவதாரம் , கற்பகம் , மந்தாரம் , பாரிசாதம் என்னும் ஐவகைத் தெய்வமரங்கள் .
பஞ்சதன்மாத்திரை ஐம்பெரும் பூதங்களின் நுண் நிலைகளாகிய ஐந்து தத்துவங்கள் .
பஞ்சதாரை காண்க : பஞ்சகதி ; சருக்கரை .
பஞ்சதாளம் சிவபிரானது ஐந்து முகத்தினின்றும் உதித்ததாகச் சொல்லப்படும் சச்சற்புடம் , சாசற்புடம் , சட்பிதா புத்திரகம் , சம்பத்து வேட்டம் , உற்கடிதம் என்னும் ஐந்துவகைத் தாளங்கள .
பஞ்சதிரவியம் காண்க : பஞ்சகவ்வியம் ; மலைபடு பொருள் ; காடுபடுபொருள் , நாடுபடுபொருள் , நகர்படுபொருள் , கடல்படுபொருள் என்னும் ஐவகைப் பொருள்கள் .
பஞ்சதிராவிடம் விந்தியத்திற்குத் தெற்கேயுள்ள திராவிடம் , ஆந்திரம் , கன்னடம் , மகாராட்டிரம் , கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிட நாடுகள் .
பஞ்சது குயில் ; நேரம் .
பஞ்சதுட்டன் கொலை , களவு , பொய் , கள்ளுண்ணல் , குருநிந்தை என்னும் ஐவகைக் கொடுஞ்செயல்களைச் செய்வோன் .
பஞ்சதுந்துபி காண்க : பஞ்சமாசத்தக்கருவி .
பஞ்சதூபம் அகில் , சாம்பிராணி , குந்துருக்கம் , குக்குலு , சூடன் என்னும் ஐவகையான புகைத்தற்குரிய மணப்பொருள்கள் .
பஞ்சதை ஐம்பூதம் ; இறப்பு .
பஞ்சநகம் ஆமை ; யானை ; புலி .
பஞ்சநகி உடும்பு .
பஞ்சநதம் ஐயாறு ; திருவையாறு என்னும் தலம் .
பஞ்சநதி ஐயாறு ; திருவையாறு என்னும் தலம் .
பஞ்சப்பாட்டு ஓயாது தனது ஏழைமையைக் கூறுங் கூற்று .
பஞ்சப்பிரமம் ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் என்ற சிவனின் ஐம்முகங்கள் ; சிவபிரானின் ஐந்து திருமுகம் பற்றிய மந்திரங்கள் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
பஞ்சப்பொழுது பஞ்சகாலம் , சிறுபொருளும் பெருவிலை விற்கும் காலம் .
பஞ்சபட்சி குறியறிதற்கு உரியனவும் அ . இ . உ , எ , ஒ என்னும் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு , மயில் , ஆந்தை , காகம் , கோழி ஆகிய ஐந்து புட்கள் ; பஞ்சபட்சிகளின் ஒலியைக்கொண்டு குறி சொல்லும் நூல் .
பஞ்சபல்லவம் பூசனைக்குரிய ஆத்தி , மா , முட்கிளுவை , முல்லை , வில்வம் என்னும் ஐந்தன் தளிர்கள் .