பஞ்சபாணம் முதல் - பஞ்சிநாண் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பஞ்சபாணம் முல்லைமலர் , அசோகமலர் , தாமரைமலர் , மாம்பூ , குவளைமலர் என்னு மன்மதனுக்குரிய ஐந்து அம்புகள் .
பஞ்சபாணன் ஐங்கணையோனான மன்மதன் .
பஞ்சபாணி பார்வதி .
பஞ்சபாதகம் கொலை , களவு , பொய் , கட்குடித்தல் , குருநிந்தை என்னும் ஐந்துவகைக் கொடுஞ்செயல்கள் .
பஞ்சபூதம் ஐம்பூதங்களான நிலம் , நீர் , தீ , வளி , வான் என்பன .
பஞ்சம் சிறுவிலைக் காலம் ; ஐந்து .
பஞ்சமகதி வீடுபேறு .
பஞ்சமம் ஏழுவகைச் சுரங்களுள் ஐந்தாவது ; அழகு ; குறிஞ்சி அல்லது பாலைப்பண்வகை ; திறமை .
பஞ்சமலம் ஆணவம் , கன்மம் , மாயை , மாயேயம் , திரோதனம் என்னும் ஐவகை மலங்கள் .
பஞ்சமாசத்தக்கருவி தோற்கருவி , துளைக்கருவி , நரப்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக்கருவிகள் .
பஞ்சமாபாதகம் காண்க : பஞ்சபாதகம் .
பஞ்சமாபாதகன் காண்க : பஞ்சதுட்டன் .
பஞ்சமி ஐந்தாந் திதி ; ஐந்தாம் வேற்றுமை ; பார்வதி ; இருபத்தேழு நட்சத்திரங்களுள் இறுதி ஐந்து நட்சத்திரங்கள் .
பஞ்சமுகன் சிவன் ; சிங்கம் .
பஞ்சமூர்த்தி சிவபிரானுக்குரிய சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , திருமால் , பிரமன் என்னும் ஐந்து மூர்த்தங்கள் ; விநாயகன் , முருகன் , சிவன் , உமை , சண்டேசுவரன் என்னும் ஐவகைக் கடவுளர் .
பஞ்சமூலம் சிறுபஞ்சமூலம் , பெரும்பஞ்சமூலம் என்னும் ஐவகை வேர்கள் .
பஞ்சரம் பறவைக்கூடு ; மட்பாண்டஞ் செய்யுமிடம் ; இடம் ; கோயிற்கருவறையின் ஒரு பகுதி ; செருந்திமரம் ; கழுகு ; உடம்பு .
பஞ்சரித்தல் தொந்தரவுபடுத்துதல் ; கொஞ்சிப் பேசுதல் ; விரிவாய்ப் பேசல் .
பஞ்சலக்கணம் எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி என்னும் ஐவகைத் தமிழ் இலக்கணம் .
பஞ்சலட்சணம் எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி என்னும் ஐவகைத் தமிழ் இலக்கணம் .
பஞ்சலிங்கம் பிருதிவிலிங்கம் (காஞ்சி , ஆரூர் ) , அப்புலிங்கம் (திருவானைக்கா) , தேயுலிங்கம் (திருவண்ணாமலை ) , வாயுலிங்கம் (சீகாளத்தி ) , ஆகாயலிங்கம் ( சிதம்பரம் ) என்னும் சிவனின் ஐவகை இலிங்கங்கள் .
பஞ்சலித்தல் மனந்தடுமாறுதல் .
பஞ்சலிப்பு பஞ்சத்தின் வருத்தம் ; எளிமை கூறல் .
பஞ்சலோகம் பொன் , ஈயம் , வெள்ளி , செம்பு , இரும்பு என்னும் ஐந்து உலோகம் ; ஐவகை உலோகக்கலப்பு .
பஞ்சலோபி மிக உலுத்தன் .
பஞ்சவடம் பூணூல் .
பஞ்சவடி மயிர்க்கயிற்றால் ஆகிய பூணூல் ; கோதாவரிக் கரையிலுள்ள ஒரு புண்ணியத்தலம் .
பஞ்சவத்திரம் அகன்ற முகமுடைய சிங்கம் .
பஞ்சவத்திரன் ஐம்முகனான சிவன் .
பஞ்சவமுது காண்க : பஞ்சாமிர்தம் .
பஞ்சவர் பாண்டியர் ; பாண்டுமன்னன் புதல்வர்களான தருமன் , வீமன் , அருச்சுனன் , நகுலன் , சகாதேவன் , ஐவகைச் சோதிகள் .
பஞ்சவர்ணக்கிளி ஐவண்ணமுடைய கிளிவகை .
பஞ்சவர்ணம் காண்க : பஞ்சவன்னம் .
பஞ்சவன் பாண்டியன் .
பஞ்சவன்னக்களி ஐந்து வண்ணமுடைய கிளி .
பஞ்சவன்னம் கருமை , செம்மை , பசுமை , மஞ்சள் , வெண்மை என்னும் ஐந்து நிறம் .
பஞ்சவாசம் ஐந்து மணப்பொருள்களான ஏலம் , தக்கோலம் , இலவங்கம் , சாதிக்காய் , கருப்பூரம் .
பஞ்சவாதனம் அனந்தாசனம் , கூர்மாசனம் , சிங்காசனம் , பதுமாசனம் , யோகாசனம் என்னும் ஐவகையான இருக்கைநிலைகள் .
பஞ்சறை தளிர்நிலை .
பஞ்சறைக்கிழவன் தளர்ந்த கிழவன் .
பஞ்சனம் அழிவு .
பஞ்சனி சொக்கட்டான்மனை .
பஞ்சாக்கரம் ஐந்தெழுத்து மறை .
பஞ்சாக்கினி இராகம் , காமம் , வெகுளி , சடம் , தீபனம் என்னும் ஐவகை உடற்றீ ; தவசி நிற்பதற்கு நாற்றிசைக்கு நான்கு திக்குண்டமும் மேலே சூரியனுமாகிய ஐவகை அக்கினி ; ஐவகை மருந்துச்சரக்கு .
பஞ்சாங்கம் திதி , வாரம் , நட்சத்திரம் , யோகம் , கரணம் எனும் ஐந்து உறுப்புகளைக் கொண்ட நூல் ; காலக்குறிப்பு நூல் ; ஆமை ; குதிரை ; சாதகம் ; புரோகிதத்துக்கு விடப்படும் மானியம் ; புரோகிதத்தொழில் ; கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புகள் .
பஞ்சாங்குலம் ஆமணக்கஞ்செடி .
பஞ்சாட்சரக்காவடி திருநீற்றுக்காவடி .
பஞ்சாட்சரம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துகளாலான சிவபிரானை அதிதெய்வமாகக் கொண்ட மந்திரம் ; திருநீறு .
பஞ்சாடுதல் கண் பஞ்சடைதல் .
பஞ்சாமிர்தம் ஐந்தமுதமான சருக்கரை , நெய் , தேன் , வாழைப்பழம் , திராட்சை என்னும் இனிய பண்டங்களின் கூட்டுக்கலவை .
பஞ்சாமிலம் இலந்தை , புளியாரை , நெல்லி , எலுமிச்சை , மாதுளை என்னும் ஐவகைப் புளிப்புள்ள மரங்கள் .
பஞ்சாய் கோரைவகை ; தூபக்கால் .
பஞ்சாய்க்கோதை காண்க : பஞ்சாய்ப்பாவை .
பஞ்சாய்ப்பறத்தல் விரைவாய் நடத்தல் ; நிலை குலைந்திருத்தல் .
பஞ்சாய்ப்பாவை பஞ்சாய்க்கோரையாற் செய்த பாவை .
பஞ்சாயத்தார் நியாய சங்கத்தார் .
பஞ்சாயத்து ஐவர் கூடிய நியாய சபை ; வழக்கு விசாரணை .
பஞ்சாயம் ஐந்து பேர் கூடிய நியாய சங்கம் ; கோரைவகை .
பஞ்சாயுதபாணி ஐம்படைக் கையனான திருமால் .
பஞ்சாயுதம் திருமால் தரிக்கும் ஐம்படைகளான சக்கரம் , வில் , வாள் , தண்டு , சங்கம் , இவை முறையே சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி , பாஞ்சசான்னியம் எனப் பெயர் பெறும் ; காண்க : ஐம்படைத்தாலி .
பஞ்சாயுதன் காண்க : பஞ்சாயுதபாணி .
பஞ்சார்த்தல் பஞ்சடைதல் .
பஞ்சாரம் ஐந்து சரம்கொண்ட கழுத்தணி ; குதிரை , எருது இவற்றின் வயது ; ஆடையில் பஞ்சு எழும்பியுள்ள நிலை ; பறவை அடைக்கும் கூடு .
பஞ்சாலை பஞ்சு அரைக்கும் ஆலை .
பஞ்சாவமுதம் காண்க : பஞ்சாமிர்தம் .
பஞ்சான் பச்சைக்குழந்தை ; செடிவகை ; மீன்வகை .
பஞ்சான்மா அந்தர ஆன்மா , சீவான்மா , தத்துவ ஆன்மா , பூத ஆன்மா , மந்திர ஆன்மா என்பன .
பஞ்சானனம் ஐம்முகமுடைய சிங்கம் .
பஞ்சானனன் ஐம்முகத்தோனான சிவன் .
பஞ்சானுங்குஞ்சும் குழந்தைகுட்டிகள் .
பஞ்சி பஞ்சு ; பஞ்சணை ; வெண்துகில் ; காண்க : இலவு ; செவ்வரக்கு ; சடைந்தது ; பெருந்தூறு ; வருத்தம் ; சோம்பல் ; பஞ்சாங்கம் .
பஞ்சிகம் தாளிக்கொடி .
பஞ்சிகை கணக்கு ; பஞ்சாங்கம் ; உரைநூல் .
பஞ்சிதம் விண்மீன் .
பஞ்சிநாண் பூணூல் .