பஞ்சியடர் முதல் - பட்டிகை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பஞ்சியடர் கொட்டிய பஞ்சு .
பஞ்சியூட்டுதல் மகளிர் பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பு பூசுதல் .
பஞ்சீகரணம் ஐம்பூதக் கூறுகளின் சேர்க்கை .
பஞ்சு பருத்தி ; சீலை ; பருத்திச்செடி ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு ; விளக்குத் திரி ; கவறாட்டத்தில் வழங்கும் குழூஉக்குறி .
பஞ்சுகொட்டி பஞ்சு அடிப்பவன் .
பஞ்சுத்துய் பன்னிய பஞ்சுநுனி .
பஞ்சுப்பொதி பஞ்சடைத்த மூட்டை .
பஞ்சுரம் குறிஞ்சி அல்லது பாலை யாழ்த்திறத்துள் ஒன்று .
பஞ்சூகம் பெருமை .
பஞ்சேந்திரியம் மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறிகள் .
பஞ்சை பஞ்சம் ; வறுமை ; ஏழை ; வலுவில்லான் ; சிறுமைத்தனம் உள்ளவர் .
பஞ்சைக்கோலம் வறுமைவேடம் .
பஞ்சைத்தனம் இவறல் ; வறுமை .
பஞ்சைமயிர் மெல்லிய அல்லது புன்மயிர் .
பஞ்சையன் வறிஞன் .
பஞ்ஞிலம் மக்கள்தொகுதி .
பட்கை பாம்பின் மேல்வாய் நச்சுப்பல் .
பட்சணம் சிற்றுண்டி ; உண்கை ; விலங்கின் உணவு .
பட்சணி உண்போன் ; பெருந்தீனிக்காரன் .
பட்சணை காண்க : பட்சணம் .
பட்சதாபம் இரக்கம் .
பட்சபாதம் ஒருதலைச்சார்பு ; கைகால்களை வலியற்றதாகச் செய்யும் நோய் .
பட்சம் அன்பு ; கட்சி ; சிறகு ; பதினைந்து நாள் கொண்டது ; கோட்பாடு .
பட்சாந்தரம் கொள்ளப்பட்ட கொள்கையினின்று வேறுபட்ட கொள்கை .
பட்சி பறவை ; குதிரை .
பட்சித்தல் உண்ணுதல் ; கவர்தல் ; அழித்தல் .
பட்சியம் பணியாரம் .
பட்சிராசன் காண்க : பக்கிராசன் ; கருடப்பச்சைக்கல் .
பட்டகசாலை கூடம் ; மனையில் உண்ணுமிடம் .
பட்டகம் காண்க : ஆடுதின்னாப்பாளை ; புழுக்கொல்லிக்கொடி .
பட்டங்கட்டுதல் பட்டப்பெயர் சூட்டுதல் ; அரசு முதலிய பதவி அளித்தல் ; திருமணத்தில் மணமக்கள் நெற்றியில் பொற்பட்டங் கட்டுதல் .
பட்டடை அடைகல் ; கொல்லன்களரி ; குவியல் ; தானியவுறை ; தோணிதாங்கி ; தலையணையாக உதவும் மணை ; உட்காரும் பலகை ; அதிர்வேட்டுக் குழாய்கள் பதித்த கட்டை ; நரம்புகளின் இளியிசை ; இறைப்புப் பாசனத்தால் விளையும் கழனி ; கழுத்தணி .
பட்டடைக்கழனி தண்ணீர் இறைத்துப் பயிரிடுங் கழனி .
பட்டடைமரம் இறைச்சிவைத்துக் கொத்தும் மரம் .
பட்டடையார் கடையின் முதலாளி ; மேற்பார்ப்போர் .
பட்டணப்பிரவேசம் ஊர்வலம் .
பட்டணம் பெருநகரம் ; பேரூர் .
பட்டணவன் நெசவுச்சாதிவகை ; பட்டணவனால் நெய்யப்பட்ட ஆடை ; வலைஞர் சாதி .
பட்டணை பட்டுப்படுக்கை .
பட்டத்தரசி தலைமையரசி .
பட்டத்தியானை அரச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை .
பட்டத்துத்தேவி தலைமையரசி .
பட்டதாரி சிறப்புப்பட்டம் பெற்றவன் ; பகட்டுக்காரன் .
பட்டந்தரித்தல் முடிசூடுதல் ; சிறப்புப்பெயர் சூடுதல் .
பட்டப்பகல் நடுப்பகல் .
பட்டப்பெயர் சிறப்புப்பெயர் ; புனைந்து வழங்கும் பெயர் .
பட்டபாடு அனுபவித்த துன்பம் .
பட்டம் பருவம் ; வாள் ; ஆயுதவகை ; நீர்நிலை ; வழி ; நாற்றங்காற்பகுதி ; விலங்கு துயிலிடம் ; படகுவகை ; கவரிமா ; சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு ; மாதர் நுதலணி ; பட்டப்பெயர் ; ஆட்சி ; சட்டங்களை இணைக்க உதவும் தகடு ; காற்றாடி ; சீலை ; பெருங்கொடி ; உயர்பதவி ; பொன் ; பறைவகை ; பலபண்டம் .
பட்டமரம் உலர்ந்துபோன மரம் .
பட்டயம் வாள் ; தாமிரசாசனம் ; பட்டா .
பட்டர்பிரான் பெரியாழ்வார் .
பட்டவர்த்தனம் அரசயானை ; குதிரைச் சாதி ; பார்ப்பனருள் ஒரு சாரார் இடும் நெற்றிக்குறி ; மறைவின்றிப் பேசுபவர் .
பட்டவருத்தனம் அரசயானை ; குதிரைச் சாதி ; பார்ப்பனருள் ஒரு சாரார் இடும் நெற்றிக்குறி ; மறைவின்றிப் பேசுபவர் .
பட்டவர்த்தனர் பட்டந்தரித்த சிற்றரசர் .
பட்டவருத்தனர் பட்டந்தரித்த சிற்றரசர் .
பட்டறிவு நுகர்ச்சி , அனுபவம் .
பட்டறை தொழிற்சாலை ; அடைகல் ; தோணிதாங்கி ; தலையணையாக உதவும் மணை ; அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை ; வீட்டின் உத்திரம் ; வீட்டின் தளத்திலிருந்து எழுப்பவேண்டும் அளவில் எழுப்பிய சுவர் ; மக்கள் கூட்டம் ; தொழிலாளர் சமுதாயம் .
பட்டறைக்கேணி பாசனத்துக்குப் பயன்படும் கிணறு .
பட்டறைநிலம் கிணற்றுப் பாசனமுள்ள நன்செய் நிலம் .
பட்டன் புலவன் ; கோயில் அருச்சகன் ; பெரியாழ்வார் ; சுவாமி ; உண்மை பேசுபவன் .
பட்டா வாள் ; உரிமையாவணம் ; இரும்புப்பட்டம் .
பட்டாக்கத்தி வாள் .
பட்டாங்கு உண்மை ; உள்ள நிலைமை ; சாத்திரம் ; மெய்போல் பேசும் கேலிப்பேச்சு முதலியன ; சித்திரவேலை யமைந்த சேலை .
பட்டாசாரியன் புலவன் ; கோயில் அருச்சகன் ; ஒரு சமய ஆசிரியன் .
பட்டாசு சீனவெடி .
பட்டாடை பட்டுச்சீலை .
பட்டாணி உருதுமொழி பேசும் முகம்மதிய சாதி ; கடலைக்கொடிவகை ; கொண்டியாணி வகை .
பட்டாதாரன் பட்டாவுடம்படிக்கை பெற்றவன் .
பட்டாரகன் கடவுள் ; அருகபதவி பெற்றோன் ; குருதேவன் .
பட்டாளம் 500 முதல் 1000வரை காலாள்கள் கொண்ட படை .
பட்டி பசுக்கொட்டில் ; ஆட்டுக்கிடை ; நில வளவுவகை ; கொண்டித்தொழு ; சிற்றூர் ; இடம் ; காவலில்லாதவர் ; களவு ; பட்டிமாடு ; விபசாரி ; நாய் ; பலகறை ; மகன் ; தெப்பம் ; சீலை ; புண்கட்டுஞ் சீலை ; மடிப்புத் தையல் ; விக்கரமாதித்தன் மந்திரி ; அட்டவணை ; பாக்குவெற்றிலைச்சுருள் ; பூச்செடிவகை .
பட்டிக்கடா பொலிஎருது , பொலிகாளை .
பட்டிக்காடு சிற்றூர் .
பட்டிகன் திருடன் .
பட்டிகை அரைக்கச்சை ; மேகலை ; முலைக்கச்சு ; தெப்பம் ; தோணி ; ஏடு ; அரசபத்திரம் ; சீலை ; தோளிலிடும் யோகபட்டி ; சுவர்த்தலத்தின் சித்திரக்கம்பி ; சீந்திற்கொடி ; காண்க : செவ்வந்தி ; தாழை .