பட்டிகைச்சூட்டு முதல் - படபடத்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பட்டிகைச்சூட்டு மேகலை .
பட்டிடை காண்க : நந்தியாவட்டம் .
பட்டிணி உணவுகொள்ளாமை .
பட்டிநியமம் காண்க : பட்டிமண்டபம் .
பட்டிப்பொங்கல் மாட்டு மந்தையிலிடும் பொங்கல் .
பட்டிபுத்திரன் பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர் .
பட்டிபெயர்த்தல் கால்நடையைப் புறம்பே செலுத்துதல் .
பட்டிபோதல் கால்நடை முதலியன பயிரை அழித்தல் ; கண்டபடி திரிதல் ; விபசாரம் செய்தல் .
பட்டிமண்டபம் கல்விமண்டபம் ; ஓலக்க மண்டபம் ; சொற்பொழிவு நிகழ்த்தும் அரங்கம் ; சொற்போர் நடக்கும் இடம் .
பட்டிமம் கல்விபயிலும் இடம் .
பட்டிமரம் கள்ளமாட்டின் கழுத்திற் கட்டும் மரம் .
பட்டிமாடு கொண்டிமாடு , ஊர்சுற்றும் மாடு .
பட்டிமுறித்தல் கட்டுக்கடந்து போதல் ; கூட்டத்தை நீக்குதல் .
பட்டிமேய்தல் கால்நடை முதலியன பயிரை அழித்தல் ; பட்டிபோதல் ; கண்டபடி திரிதல் .
பட்டிமை வஞ்சனை ; களவிற்போகுந் தன்மை .
பட்டியடித்தல் விபசாரஞ்செய்தல் .
பட்டியல் வரிச்சல் ; தூணின்கீழ் வைக்குங் கல் ; வணிகச்சரக்கின் விலையட்டவணை ; பொருள்களின் அட்டவணை .
பட்டியுரை வாய்காவாது சொல்லுஞ் சொல் ; கொச்சைச் சொல் .
பட்டிவாய் வாய்க்கு வந்தவாறு பேசுபவர் .
பட்டினம் ஊர் ; நெய்தல்நிலத்தூர் ; காவிரிப்பூம்பட்டினம் ; உடல் .
பட்டினவன் பரவச்சாதியான் .
பட்டினி உண்ணாதிருத்தல் ; அரசி ; பார்ப்பனத்தி .
பட்டினிகிடத்தல் உணவின்றி இருத்தல் ; சாவீட்டில் உண்ணாதிருத்தல் .
பட்டினிநோன்பிகள் சமணத்துறவியர் .
பட்டினிப்பண்டம் சாவீட்டுக் கனுப்பும் உணவுப்பண்டம் ; சாவீட்டில் உண்ணும் உணவு .
பட்டினிபொறுத்தல் பசியால் வருந்துதல் .
பட்டினிபோடுதல் பிறரைப் பட்டினியாயிருக்கச் செய்தல் .
பட்டினிவிடுதல் உண்ணாதிருத்தல் .
பட்டு பட்டாடை ; பட்டுப்பூச்சியால் உண்டாகும் நூல் ; கோணிப்பட்டை ; சிற்றூர் ; இருந்தேத்தும் மாகதர் ; கட்டியம் ; கள்ளிவகை .
பட்டுக்கரை ஆடையில் பட்டாலியன்ற கரை .
பட்டுக்கஞ்சம் பட்டின் கற்றைத் தொங்கல் .
பட்டுத்தெளிதல் அனுபவத்தினால் அறிதல் ; காண்க : பட்டுத்தேறுதல் .
பட்டுத்தேறுதல் நோய் நீங்கி உடம்பு வலிமை பெறுதல் ; அனுபவத்தால் மனவலி பெறுதல் .
பட்டுப்பூச்சி பட்டுநூல் உண்டாக்கும் பூச்சி வகை .
பட்டுப்போதல் உலர்ந்துபோதல் ; சாதல் .
பட்டுருவுதல் ஊடுருவுதல் .
பட்டுவாடா சம்பளம் முதலியன கொடுத்தல் .
பட்டை மரத்தோல் ; வாழைப்பட்டை ; பொற்சரிகைப்பட்டி ; கழுத்துப்பட்டை ; பனம்பட்டை ; போதிகை ; மணியைத் துலக்கும் பட்டை ; காண்க : பட்டைத்தையல் ; பொடி மட்டை ; அணிகலனின் ஓர் உறுப்பு ; நீர் இறைக்குங் கூடை ; காண்க : மரவுரி ; தகடு ; பனங்கை ; பட்டைச்சோறு .
பட்டைக்கம்பு சிலம்பம் ; பழகுவோர் கைத்தடி .
பட்டைக்காறை ஒரு கழுத்தணிவகை .
பட்டைகேசரி சூடன் உண்டாகும் மரம் .
பட்டைச்சாதம் கடவுளுக்குப் படைக்கப்பட்ட சோற்றுக்கட்டி .
பட்டைச்சாராயம் வெள்வேலம் பட்டையைக் காய்ச்சி இறக்கும் ஒரு பானவகை ; காண்க : வெள்வேல் .
பட்டைத்தையல் ஆடை முதலியனவற்றை மடித்துத் தைக்கும் தையல் .
பட்டைதட்டுதல் சோற்றைக் கிண்ணத்தில் அடக்கிக் கவிழ்த்து வில்லைச் சோறாகச் செய்தல் .
பட்டைதீர்தல் கண்ணம் முதலியவற்றால் பட்டை அடிக்கப்படுதல் ; கெம்பு முதலியவற்றை வெட்டிப் பட்டையாக்குதல் .
பட்டைநாமம் அகன்ற நாமம் .
பட்டைப்பறி மீன்பிடிக்க இடும் கருவி .
பட்டையடித்தல் சுண்ணாம்பு செம்மண்களால் பட்டையான நீண்ட கோடுகள் வரைதல் ; அகலமாக்குதல் ; காண்க : பட்டைதட்டுதல் .
பட்டையம் வாள் ; ஆவணம் .
பட்டையுரித்தல் மரம் முதலியவற்றிலிருந்து மேற்பட்டையை நீக்குதல் .
பட்டைவிட்டுப்போதல் வெயில் கடுமையாயிருத்தல் ; விறகிலிருந்து பட்டை நெகிழ்தல் .
பட்டோலை எழுதுதற்குச் செய்யப்பட்ட ஓலை ; அரசர்விடுந் திருமுகம் ; ஒருவர் சொல்ல எழுதிய ஓலை ; பேரேட்டின் மொத்த வரவு செலவுக் குறிப்பு ; அட்டவணை ; மருத்துவரின் மருத்துவக்குறிப்பு .
பட்டோலைகொள்ளுதல் பெரியோர் கூறியதை எழுதுதல் .
பட்பு குணம் .
பட ஓர் உவமவுருபு .
படக்குப்படக்கெனல் அச்சக்குறிப்பு ; நாடி முதலியன அடித்தற்குறிப்பு .
படகம் கவரிமா ; திரைச்சீலை ; பரண் ; அகமுழவுகளுள் ஒன்று ; சிறுபறை ; போர்ப்பறை ; கலகம் ; கோல் ; காண்க : விட்டுணுக்கரந்தை ; கூடாரம் ; நிலவளவு ; சிறுபூடுவகை .
படகாரன் ஓவியன் ; நெய்வோன் .
படகு சிற்றோடம் ; தோணி .
படகுடி கூடாரம் .
படகுவலித்தல் படகைச் செலுத்துதல் .
படகோட்டி படகைச் செலுத்துபவன் .
படங்கம் கூடாரம் ; சண்பகமரம் .
படங்கன் கடல்மீன்வகை .
படங்கான் கடல்மீன்வகை .
படங்கு கூடாரம் ; மேற்கட்டி ; ஆடை ; இடுதிரை ; பெருங்கொடி ; மெய்போற் பேசுகை ; சாம்பிராணிப்பதங்கம் ; அடிப்பாகம் ; பெருவரிச்சல் ; பாதத்தின் உட்பகுதி .
படங்குந்திநிற்றல் முன்காலை ஊன்றி நிற்றல் .
படங்குந்திவீடு கூடாரம் .
படதீபம் ஒரு விளக்குவகை .
படப்பம் மருங்கில் ஊர்சூழ்ந்த நகரம் .
படப்பு பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை ; வைக்கோற்போர் .
படப்பை தோட்டப்பகுதி ; புழைக்கடை ; பக்கத்திலுள்ள இடம் ; ஊர்ப்புறம் ; நாடு ; மருதநிலத்தூர் ; பசுக்கொட்டில் ; பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை .
படப்பொறி பாம்பின் படத்திலுள்ள புள்ளிகள் ; துத்திச்செடி .
படபடத்தல் பேச்சு முதலியவற்றில் விரைதல் ; குளிர் முதலியவற்றால் நடுங்குதல் ; கோபக்குறிப்பு ; ஒலி உண்டாதல் .