படபடப்பு முதல் - படிச்செலவு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
படபடப்பு பேச்சு முதலியவற்றில் விரைவு ; நடுக்கம் .
படபடெனல் துடித்துப்பேசல் , அசைதல் , வெடித்தல் , கடுமை , விரைவு , களைப்பு முதலிய குறிப்புகள் .
படம் சீலை ; சித்திரச்சீலை ; திரைச்சீலை ; சட்டை ; போர்வை ; ஓவியம் எழுதின படம் ; பெருங்கொடி ; விருதுக்கொடி ; யானைமுகப்படாம் ; பாம்பின் படம் ; காற்றாடி ; பாதத்தின் முற்பகுதி ; உடல் .
படம்பிடித்தல் ஒளியின் உதவியால் கருவி கொண்டு உருவத்தைப் பிடித்தல் .
படம்புகுதல் சட்டையிடுதல் .
படமஞ்சரி ஒரு பண்வகை .
படமரம் நெய்வார் கருவியுள் ஒன்று .
படமாடம் கூடாரம் .
படமாளிகை கூடாரம் .
படமெடுத்தல் பாம்பு படத்தை விரித்து நிற்றல் ; ஒளிப்படம் பிடித்தல் .
படர் செல்லுகை ; ஒழுக்கம் ; வருத்தம் ; நோய் ; நினைவு ; பகை ; மேடு ; துகிற்கொடி ; படைவீரர் ; எமதூதர் ; ஏவல் செய்வோர் ; இழிமக்கள் ; தேமல் ; தூறு ; வழி ; தறுகண்மை .
படர் (வி) தொடர் , படர்என் ஏவல் .
படர்க்கை சொற்களுக்குரிய மூவிடங்களுள் தன்மை முன்னிலைகள் இல்லாத இடம் .
படர்கொடி நின்று வளராத படருங்கொடி ; கொடிவகை .
படர்ச்சி செலவு ; நல்லொழுக்கம் ; கொடி ஓடுகை ; விதி ; பரந்த வடிவம் ; பரவுதல் .
படர்தல் ஓடுதல் ; கிளைத்தோடுதல் ; பரவுதல் ; பெருகுதல் ; அகலுதல் ; விட்டுநீங்குதல் ; வருந்துதல் ; அடைதல் ; நினைத்தல் ; பாடுதல் .
படர்தாமரை தோல்மேற் படரும் நோய்வகை ; தேமல்வகை ; அமைதியில்லாதவர் .
படர்நோய் நினைவினால் உண்டாம் வருத்தம் .
படர்பயிர் படர்கின்ற கொடி .
படரடி சிதறவடிக்கை .
படரை ஆவிரை .
படல் ஓர் அடைப்புவகை ; மறைப்புத்தட்டி ; பூந்தடுக்கு ; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி ; உறக்கம் .
படலம் கூட்டம் ; நூற்பகுதி ; கூடு ; மேற்கட்டி ; நேத்திரப்படலம் ; அடுக்கு ; உலகம் ; சுற்றம் ; திலகம் ; மறைப்புத்தட்டி ; அடைப்பு ; இரத்தினக்குற்றம் .
படலி கூட்டம் ; வீட்டின் மேற்கூரை .
படலிகை பெரும்பீர்க்கு ; கைம்மணி ; பூப்பெட்டி ; இளைப்பு ; கண்ணோய்வகை ; வட்டவடிவு ; ஓர் அளவு .
படலிடம் குடிசை .
படலியம் குதிரைச்சேண உறுப்பு .
படலை படர்கை ; பரந்த இடம் ; வாயகன்றபறை ; தாழை ; பூவும் தழையும் விரவித்தொடுத்த மாலை ; கூட்டம் ; குதிரைக் கிண்கிண்மாலை ; குலையிலுள்ள சீப்பு ; அடைப்பு .
படலைக்கண்ணி பச்சிலையும் பூவும் கலந்து தொடுத்த மாலை .
படலைமாலை பச்சிலையும் பூவும் கலந்து தொடுத்த மாலை .
படவம் போர்ப்பறை .
படவன் படகோட்டி .
படவாள் படைவாள் .
படவு சிற்றோடம் .
படன் படைவீரன் ; இழிகுலத்தான் ; யமகிங்கரன் ; பேய் .
படனம் படித்தல் ; மனப்பாடம் .
படா காண்க : குட்டிப்பிடவம் ; பெரிய .
படாக்கொட்டில் காண்க : படமாடம் .
படாகி செருக்கு ; புளுகுகிறவன் .
படாகை கொடி ; நாட்டின் உட்பிரிவு ; குடிசை ; கூட்டம் .
படாடோபம் நடையுடைபாவனையிற் செய்யும் பகட்டு .
படாதுபடுதல் மிகத் துன்புறுதல் .
படாந்தரம் முழுப் பொய் ; கற்பனையால் மிகுத்துக் கூறுகை ; அகாரணம் .
படாப்பழி பெரும்பழி .
படாபஞ்சனம் முற்றும் அழிதல் .
படாம் சீலை ; திரைச்சீலை ; பெருங்கொடி ; கூடாரம் ; முகபடாம் .
படாம்வீடு கூடாரம் .
படாமுரசு ஓயாது ஒலிக்கும் பேரிகை .
படார் சிறுதூறு .
படார்படாரெனல் வெடித்தல் ஒலிக்குறிப்பு .
படாரர் கடவுள் ; பூச்சியர் .
படாரன் பாம்பாட்டி .
படாரிடுதல் படாரென வெடித்தல் .
படாரெனல் படாரென வெடித்தல் .
படாவஞ்சனம் முழுக் கற்பனை ; கொடுஞ்சூழ்ச்சி ; முற்றும் அழிக்கை .
படாவஞ்சனை முழுக் கற்பனை ; கொடுஞ்சூழ்ச்சி ; முற்றும் அழிக்கை .
படி கற்படி ; ஏணிப்படி ; நிலை ; தன்மை ; அங்கவடி ; தராசின் படிக்கல் ; நூறு பலங் கொண்ட நிறையளவு ; நாட்கட்டளை ; நாழி ; அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள் ; உபாயம் ; உதவி ; நிலைமை ; விதம் ; வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை ; உடம்பு ; மரபுவழி ; தகுதி ; முறைமை ; வேதிகை ; தாழ்வாரம் ; நீர்நீலை ; ஒத்த பிரதி ; பகை ; பூமி ; உவமை ; ஓர் உவமவுருபு .
படி (வி) வாசி , படியென் ஏவல் .
படிக்கட்டளை நாட்கட்டளை .
படிக்கட்டு சோபனக்கட்டு ; நிறைகல் .
படிக்கம் எச்சில் உமிழும் கலம் ; முழுக்குநீர் முதலியவற்றைச் சேர்க்கும் பாண்டம் .
படிக்கல் நிறைகல் .
படிக்காசு நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் ; இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவர் .
படிக்காரம் சீனக்காரம் .
படிக்காரன் நாளுணவுக்காக வேலை செய்வோன் ; படிகொடுப்போன் .
படிக்கால் ஏணி .
படிக்குப்பாதி சரிபாதி .
படிகட்டுதல் உணவுக்கு வேண்டிய பணத்தைச் செலுத்துதல் ; நிறைத் தடைகட்டுதல் ; படிக்கல் அமைத்தல் .
படிகம் பளிங்கு ; கூத்து ; விளாம்பட்டை ; பிச்சை .
படிகமிடுதல் காண்க : பழுக்கச்சுடுதல் .
படிகாரன் வாயிற் காவலன் .
படிகால் தலைமுறை .
படிகை யானை மேலிடும் தவிசு ; காண்க : நந்தியாவட்டம் .
படிச்சந்தம் ஒன்றைப்போன்ற வடிவு .
படிச்செலவு அன்றாடச் செலவு .