படிசம் முதல் - படுகாடு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
படிசம் தூண்டில் .
படிசியேற்றம் சிற்றேற்றம் .
படிசு நிலைமை ; ஒத்த அமைப்பு .
படித்தரம் கோயில் முதலியவற்றுக்கு உதவும் நாட்கட்டளை ; ஒழுங்கு ; நடுத்தரம் .
படித்தல் வாசித்தல் ; கற்றல் ; சொல்லுதல் ; துதித்தல் ; பழகுதல் .
படித்தனம் கோயில் முதலியவற்றுக்கு உதவும் நாட்கட்டளை .
படித்திரம் சூட்டிறைச்சி .
படித்துறை படிக்கட்டுகள் அமைந்த நீர்த்துறை .
படிதம் கூத்து ; துதி ; மாணிக்கவகை .
படிதல் அடியிற்றங்குதல் ; பரவுதல் ; வசமாதல் ; கையெழுத்துத் திருந்தி அமைதல் ; கீழ்ப்படிதல் ; குளித்தல் ; கண்மூடுதல் ; அமுங்குதல் ; கலத்தல் ; வணக்கமுடன் கீழே விழுதல் ; நுகர்தல் ; பொருந்துதல் .
படிப்படி சிறுகச்சிறுக .
படிப்படியாய் சிறுகச்சிறுக .
படிப்படை காண்க : கூலிப்படை .
படிப்பணம் அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பணம் .
படிப்பனவு படிப்பு .
படிப்பனை படிப்பு ; கல்வி ; படித்தல் ; திறன் .
படிப்பாளி கற்றோன் .
படிப்பித்தல் கற்பித்தல் .
படிப்பினை காண்க : படிப்பனை ; புத்திமதி ; வங்கமணல் ; நீதி .
படிப்பு கல்வி ; வாசிப்பு ; விரகு ; பாடுதல் ; போதனை .
படிப்புரை ஒட்டுத்திண்ணை .
படிப்புறம் கோயிற் பூசாரிகட்கு விடப்படும் மானியம் .
படிமக்கலம் முகம்பார்க்கும் கண்ணாடி .
படிமகன் பூமியின் மகனான செவ்வாய் .
படிமத்தாள் தேவராட்டி .
படிமத்தான் தேவராளன் , தெய்வமாடுவோன் .
படிமத்தோன் தேவராளன் , தெய்வமாடுவோன் .
படிமதாளம் ஒன்பதுவகைத் தாளத்துள் ஒன்று .
படிமம் பிரதிமை ; உருவம் ; மாதிரி ; வடிவம் ; தவவேடம் ; நோன்பு ; சன்னதம் ; காண்க : படிமக்கலம் ; தூய்மை .
படிமவுண்டி நோற்றுப் பட்டினி விட்டுண்ணும் உணவு .
படிமா ஒப்பு ; மாதிரி .
படிமானம் கீழ்ப்படிதல் ; சட்டப்பலகைகளின் இணைப்புப் பொருத்தம் ; அமைவு ; தணிவு .
படிமுழுதிடந்தோன் நிலம் முழுதும் பெயர்த்துத் தூக்கிய திருமால் .
படிமேடை படிப்படியாக உயர்ந்தமைந்த ஆசன வரிசை .
படிமை வடிவம் ; பிரதிமை ; நோன்பு ; தவவேடம் ; வழிபடுதெய்வம் .
படியகம் துப்பற்பாத்திரம் .
படியச்சு நேர் ஒப்புடையது .
படியப்பார்த்தல் விலைகுறைத்தல் ; பலகைகளை இணைத்தல் ; அமிழும் நிலையில் இருத்தல் .
படியவைத்தல் படியும்படி வைத்தல் ; ஊன்றுதல் ; அடங்கச் செய்தல் .
படியளத்தல் வாழ்க்கைக்கு வேண்டும் தானியம் முதலியவற்றைக் கொடுத்தல் .
படியளந்தோன் உலகை அளவிட்ட திருமால் .
படியாள் படிவாங்கிப் பயிரிடும் உழவன் .
படியெடுத்தல் ஒன்றைப்போல வேறொன்றை உண்டாக்குதல் .
படியோர் உலகோர் ; வணங்காத பகைவர் .
படியோலை மூல ஓலையைப் பார்த்து எழுதிய ஓலை .
படிலன் வீரன் ; பணியாளன் .
படிவம் வழிபடுதெய்வம் ; உடம்பு ; உருவம் ; வடிவழகு ; தவவேடம் ; தோற்றம் ; நோன்பு .
படிவர் முனிவர் .
படிவவுண்டி காண்க : படிமவுண்டி .
படிற்றுரை பொய்ச்சொல் .
படிற்றொழுக்கர் காமுகர் .
படிறன் திருடன் ; பொய்யன் ; வஞ்சகன் ; கொடியவன் ; காமுகன் .
படிறி வஞ்சகமுள்ளவன் .
படிறு வஞ்சனை ; பொய் ; அடங்காத்தனம் ; குறும்பு ; களவுப்புணர்ச்சி ; கொடுமை .
படினம் மேன்மை ; பக்குவம் ; வெற்றி ; கல்வி .
படீரம் சந்தனம் ; சிவப்பு ; வயிறு ; உயரம் ; வாதக்கூறான நோய் .
படீரெனல் ஒலிக்குறிப்பு .
படீனம் பறவைக் கதி விசேடங்களில் ஒன்று .
படு கள் ; மரத்தின் குலை ; குளம் ; மடு ; மருத யாழ்த்திறத்துள் ஒன்று ; உப்பு ; பெரிய ; கொடிய ; இழிவான ; கெட்டிக்காரன் ; பேரறிவு ; நன்மை .
படு (வி) படுத்துக்கொள் ; விழு .
படுக்கவைத்தல் கிடக்கும்படி செய்தல் ; தோல்வியுறச் செய்தல் ; அழித்தல் .
படுக்களம் படுக்கும் இடம் .
படுக்காளி போக்கிரி ; பொய்யன் .
படுக்காளிப்பயல் போக்கிரி ; பொய்யன் .
படுக்கை படுத்தல் ; தானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியில் பரப்பிய பொருள் ; திருவிழா ; தேவதைகளுக்கு முன் இடும் படையல் ; பட்டடை ; படுக்கை ; சரக்கு மூட்டைமேல் நீர்படாதிருக்கத் தோணியினடியில் பரப்பும் புல் அல்லது ஓலை .
படுக்கைப்பற்று பெண்ணுக்குக் கொடுக்கும் சீர்வரிசை ; அந்தப்புரம் .
படுக்கையறை பள்ளியறை .
படுகண்ணி அணிகலனில் கொக்குவாய் மாட்டப்படும் உறுப்பு .
படுகர் பள்ளம் ; மேல்நிலை ; இறங்கியேறும் வழி ; வயல் ; மருதநிலம் ; ஒரு சாதி .
படுகல் நீர்நிலை .
படுகள்ளம் பெருமோசம் .
படுகள்ளன் போக்கிரி .
படுகளம் போர்க்களம் ; தொந்தரவு .
படுகளி மிகு மகிழ்ச்சி ; பெருஞ்சேறு .
படுகாடு மரங்கள் ஒருசேர விழுந்த காடு ; சுடுகாடு .